Monday 30 March 2015

வான்புகழ் வானகம்


கோ. நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்த வெண்தாடி விவசாயி. வேளாண் அதிகாரிப் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு இயற்கை வேளாண் இயக்கத்தைத் தொடங்கியவர். பசுமைப் புரட்சியால் நிலம் கெட்டதுதான் மிச்சம் என்று நக்கீரத் துணிச்சலோடு பேசியவர்., எழுதியவர்.

Sunday 22 March 2015

சுவர்கள் இல்லாத வகுப்பறைகள்


      களப்பார்வை என்ற வகையில் என் பள்ளி மாணாக்கச் செல்வங்களை அடிக்கடி வெளியில் செல்ல ஏற்பாடு செய்வதுண்டு. 220 நாட்களுக்கு மேலாக வகுப்பறைச் சுவர்களுக்குள் முடக்கிப் போடப்பட்ட குழந்தைகளை ஓரிரு நாட்களுக்கு வெளி உலகத்தைக் காண அழைத்துச் செல்லும்போது அவர்களுடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே! அப்பப்பா என்ன மகிழ்ச்சி! ஆனால் பெற்றோர்களில் சிலர் தம் குழந்தைகளை இப்படி வெளியில் அனுப்ப அனுமதிப்பதில்லை.

Friday 20 March 2015

உலக சிட்டுக்குருவி நாள்: மார்ச் 20



சிட்டுக் குருவி வா வா!
சிட்டுக் குருவி வா வா!
பட்டுப் போன்ற சிறகினைத்

Wednesday 18 March 2015

கொடைக்கானலும் நானும்


      பள்ளிக்குழந்தைகளோடு சுற்றுலா செல்வது தனி மகிழ்ச்சிதான். ஆட்டம் பாட்டத்திற்கு அளவே இருக்காது. இந்த முறை என்னால் தப்பிக்க முடியவில்லை. வற்புறுத்தி என்னையும் ஆடவைத்து விட்டார்கள்!

   கொடைக்கானலுக்குச் சென்றது என்னைப் பொறுத்தவரை முப்பதாவது முறையாக இருக்கும். ஈரோட்டுப் பேராசிரியர் கந்தசாமியுடன் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கரையில் முகாமிட்டு, ஏறாத மலையில்லை சுற்றாத காடுகள் இல்லை என்ற அளவுக்குத் திரிந்திருப்பேன். 

Saturday 7 March 2015

யாருமாகி நிற்பவள் பெண்



யாதுமாகி நிற்பவள்
யாருமாகி நிற்பவள்
பெண்

அவளைப் போற்றும் வகையில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதை