சில நாள்களாக பெய்த பேய்மழையால் ஊரே
வெள்ளக்காடாகி விட்டது. அடடே! எங்கே என்று சொல்லவில்லயே
. நான் தற்போது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம் டெல்லாஸ் நகரில் என் மகள் இல்லத்தில்
தங்கியுள்ளேன். வந்த ஓரிரு நாள்களில் இரவெல்லாம் பெய்த இடிமழையை நினைத்தால்
இப்பொழுதும் கதி கலங்குகிறது. அவ்வப்போது வந்த புயல்காற்று குறித்த அறிவிப்பு
வயிற்றில் புளியைக் கரைத்தது. நாடு விட்டு நாடு வந்து நன்றாக சிக்கிக் கொண்டோம்
என்று நினைத்தேன்., ஆனால் யாரிடமும் சொல்லவில்லை.
ஒரு
பெரிய குளம் நிரம்பி நிற்பதையும், மின் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றுவதையும் டி.வி
யில் விலாவாரியாகக் காட்டினார்கள். ஒரு கவுண்ட்டியில், அதாவது ஒரு மாவட்டத்தில்
பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துச் சூழலுக்குச் சுருதி சேர்த்தார்கள்.
பாரதியார் புதுச்சேரியில் வசித்தபோது ஓர்
இரவில் பெய்த மழையை இப்படி ஒரு கவிதையாய்ப் பொழிந்தார்.
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!
|
மழை வெள்ளம் பற்றி பாரதியார் கவிதையில் தெரிவித்தார். ஆனால் தாங்களோ கண் முன் காட்சிப் படுத்தி விட்டீர்கள். நிழல் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteமழை வெள்ளம் பற்றி பாரதியார் கவிதையில் தெரிவித்தார். ஆனால் தாங்களோ கண் முன் காட்சிப் படுத்தி விட்டீர்கள். நிழல் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDelete