நாளை இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ்
விமானம் மூலம் அமெரிக்கப் பயணம். ஒரு நாள் முன்னதாகவே சென்னை வந்ததால் கீழ்ப்பாக்கம்
சகலப்பாடி இல்லத்தில் முகாம்.
இரவில் தொடர்வண்டிப் பயணம் என்றாலும் சோர்வு
தெரியவில்லை. எனவே ஆறு மணிவாக்கில் நடைப்பயிற்சிக்காகப் புறப்பட்டேன்.
படிகளில் இறங்கும்போதே நாளிதழ்
போடும் சிறுவன் கண்ணில் பட்டான். அவனிடம் பேச்சுக்கொடுத்தேன். ஒரு தனியார்
பள்ளியில் பத்தாம் வகுப்பபில் படிக்கிறான்.,பகுதி நேர வேலையாக மாதம் ரூபாய்
1500க்கு இந்த வேலை. காலை நேரத்தில் கிரிக்கெட் மட்டையும் கையுமாக திரியும்
சிறுவர்களிடையே இவன் என் பார்வையில் உயர்ந்து நின்றான். அவனைப் பாராட்டிவிட்டு
நடந்தேன்.
அடுத்து ஒரு ஆங்கிலப் பள்ளியின்
வண்ண விளம்பரத் தட்டி கண்ணில் பட்டது. இலக்கணப்பிழையோடு வரிகள் இருந்தன. ஒரு வரியை
ஒழுங்காக எழுதத் தெரியாதவர் பள்ளியை நடத்துகிறார்.
“படித்தவன் பாடம் நடத்துகிறான் படிக்காதவன்
பள்ளிக்கூடம் நடத்துகிறான்” என்ற ஏர்வாடியாரின் கவிதை வரி என் மனக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்தது.
அந்தப் பள்ளியின் நிர்வாகிக்கு First learn grammar and then learn to run
the school என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.
அங்கே சுவரொட்டி ஒட்டுபவர்
சுறுசுறுப்பாக வேலை செய்தார். தெருவின் பெயர்ப்பலகை, மின்சார வாரிய பெட்டி, தபால்
பெட்டி என்று கண்டபடிக்கு ஒட்டிச்சென்றார். எவ்வளவு முட்டாள்தனமான செயல்!
அந்த இளம் காலை நேரத்தில், நட்ட நடு சாலையில் இளைஞர் சிலர் கிரிக்கெட்
ஆடிக்கொண்டிருந்தார்கள். சற்றே நின்று வேடிக்கை பார்த்தேன். பெர்னாட்ஷா
கூற்றுப்படி நானும் ஒரு முட்டாள்தான். கிரிக்கெட் பற்றி அவர் கூறிய Elevan fools are playing elevan thousand fools are watching என்னும் வாசகம் உலகப்புகழ் பெற்றது. அடுத்து அங்கு அரங்கேறிய நிகழ்வுதான் படு
சுவாரஸ்யமானது. ஓங்கி அடித்ததால் உயரப் பறந்த பந்து ஒரு பங்களாவின் சுற்றுச்சுவருக்குள் விழுந்தது. வெளி கேட் பூட்டியிருந்தது.
ஓர் இளைஞன் சுவர் ஏறி உள்ளே குதித்தான். பந்தை எடுக்கவும் ஒரு பெரியவர் கதவைத் திறந்து
வெளியில் வந்து சத்தம் போடவும் நிலவரம் இல்லை இல்லை கலவரம் சூடு பிடித்தது.
“நான்சென்ஸ் அறிவிருக்கா?
காலங்காத்தால கிரிக்கெட்டா?”
“பெரிசு கொஞ்சம் அடங்குறியா?”
அடுத்து நடந்ததுதான் உச்சக் கட்டமான
நகைச்சுவை! அவனுடைய நண்பன் ஓடிச்சென்று உரக்கக் கூறினான்:
,” ஏன் இப்படி திட்டுறீங்க, ஒங்க பேரனை?”
இல்லம் திரும்பி கீழே கிடந்த ஆங்கில நாளேட்டைப் பார்த்தேன்.ஒரு பக்க
விளம்பரம். Home
for sale என்று போட்டிருந்தார்கள். Home என்னும் சொல்லுக்கு கணவன் மனைவி
மக்கள் வாழும் இல்லம் என்று பொருள். .House என்னும் சொல்லுக்கு கம்பி, செங்கல்,
சிமெண்ட்டினால் ஆன வீடு என்று பொருள்
மனைவி மக்களோடு விற்கப் போகிறார்களா?
Home for sale என்பது எவ்வளவு
மோசமான பிழையுடன் கூடிய வாசகம்!. House for rent என்றுதான் எழுத வேண்டும். Home for rent என்று எழுதினால்
பொருள் வேறாகிவிடும்!
Please
consult an English teacher before you release an ad என்று ஒரு
குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுக் குளிக்கச் சென்றேன்.
No comments:
Post a Comment