Friday, 11 March 2016

உண்டால் அம்ம இவ்வுலகம்



 இளம்பெருவழுதி என்னும் சங்கப் புலவன் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல் இதுவாகும். இந்த உலகம் அழிந்து படாமல் இன்னும் இயங்கிக் கொண்டு இருப்பதற்குக் காரணம் யார் என ஒரு வினாவை நாம் கேட்டால் அதற்குரிய விடையாக அமைகிறது இப்பாடல்.

Sunday, 6 March 2016

தெனாலிராமனும் நானும்

   
 “அடியே! நல்லா கவனி! இண்ணைக்கு ராத்திரி வெளியூர் போறமில்ல. நம்ம நக நட்டு முட்டை எல்லாம் இந்த இரும்பு பெட்டியில வச்சி பூட்டி நம்ம தோட்டத்து கிணத்துல போட்டுடுவோம். ஊட்டுல வச்சிட்டுப்போனா திருடனுங்க எடுத்திட்டு போய்டுவானுங்க” என்று தெனாலிராமன் தன் மனைவியிடம் சொன்னதை திருடர்கள் எப்படியோ ஒட்டுக் கேட்டுவிட்டார்கள்.

Tuesday, 1 March 2016

சிற்றுலாவில் வந்த சிக்கல்

   

    சுற்றுலா(tour) செல்வதைவிட சிற்றுலா(picnic) செல்வது எளிது என்பதால் ஊட்டி சிற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தேன். 47 மாணவியர், 7 ஆசிரியர்களுடன் ஊட்டிக்குச் சிற்றுலா சென்றோம். சாய்வு வசதியுள்ள இருக்கைகளுடன் கூடிய புதிய பேருந்தில் பயணித்தோம். திறமையும் அனுபவமும் உடைய ஓட்டுநரின் கைவண்ணத்திலும் கால் வண்ணத்திலும் பேருந்துப் பயணம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.