Saturday, 28 November 2020

கட்டுரைக்கும் கண்ணில்லை

   காதலுக்குதான் கண்ணில்லை என்பார்கள். ஆனால் கட்டுரைக்கும் கண்ணில்லை என்பது இப்போது தெரிய வருகிறது. ஆம். தினமணியில் இம்மாதம் இருபதாம் நாள் வெளிவந்த “மநுவுக்கு ஏன் இந்த எதிர் மனு?’ என்னும் கட்டுரைக்குக் கண்ணில்லை என்பதற்கு அக் கட்டுரையால் எழுந்த எதிர்வினைகளே சான்று.

Tuesday, 24 November 2020

கடுங்குளிரைக் கொண்டாடும் கனடா

    கனடா நாட்டில் இரண்டே பருவங்கள். ஒன்று வசந்த காலம்; இன்னொன்று மழைக்காலம். அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரையிலும் மழைக்காலம் என்று சொல்லப்பட்டாலும் மழைப்பொழிவைவிட பனிப்பொழிவுதான் அதிகமாக இருக்கும்.

Wednesday, 18 November 2020

முந்நீரும் பன்னீரும்

    இணையதளக் குழு ஒன்றில் முந்நீர் என்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்கான சொற்பொருள் விளக்கத்தைப் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 முந்நீர் என்ற சொல்லுக்கு . கடல்நீர் என்ற பொருள் உண்டு. ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்னும் மூன்று நீர்கள் சேர்ந்ததே கடல்நீர் என்பதால் நம் முன்னோர் கடல்நீரை முந்நீர் என வழங்கினர். இந்த முந்நீர் என்னும் சொல்லுக்கு வேறு பொருள் உண்டா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி.

Thursday, 22 October 2020

சதுப்பு நிலக் காட்டில் சலிக்காத நடை

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் கனடா நாட்டுக்கு வந்தபோது ஒட்டாவா நகரில் வசிக்கும் என் நண்பர் முருகானந்தமும் நானும் ஒரு சதுப்பு நிலக்காட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தை வலைப்பூ வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

Tuesday, 29 September 2020

போக நினைத்தால் போகலாம்

        அவர் ஒரு பணி நிறைவுபெற்ற ஆசிரியை. கணவர் காலமாகிப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. பேரன் பேத்திகளைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தார். எழுபது வயதை நெருங்கிய அவர் நோயுற்றுப் படுக்கையில் கிடந்தார் ஆறுமாத காலமாக.

Wednesday, 23 September 2020

கண்டறியாதன கண்டேன்

      கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகள் தேசிய சொத்தாக மதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Wednesday, 9 September 2020

மழையில் மகிழ்ந்த மலர்கள்

    நம் ஊர் இரமணனும் புவியரசனும் தோற்றுப் போகும் அளவுக்கு இங்கே உள்ள வானியல் வல்லுநர் மழை வரும் நேரத்தை மிகத் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறார். அவர் இந்த நேரத்தில் பெய்யும் என்றால் அந்த நேரத்தில் மழை பெய்கிறது! இங்கே மணிக்கணக்கில் தொடர்ந்து மழை பெய்வதில்லை. மாதம் முழுவதும் அடிக்கடி  பேரிடி முழக்கத்துடன் சிறிது நேரம் மழை பெய்கிறது.

Sunday, 30 August 2020

பள்ளிகள் திறக்கும் பாடங்கள் நடக்கும்

    ஆம். பள்ளிகள் திறக்கும்; பாடங்கள் நடக்கும். நம் தமிழ் நாட்டில் அன்று; கனடா நாட்டில். கனடா நாட்டின் பல மாநிலங்கள் வருகிற செப்டம்பர் மூன்றாம் நாள் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளன.

Monday, 24 August 2020

எங்கும் இனிமை என்றும் இனிமை

    ஒட்டாவா என்பது கனடா நாட்டின் தலைநகரம். புதுமை, இனிமை, தூய்மை, வளமை இந்த நான்கும் நீக்கமற நிறைந்த நகரம். இந்த நகரின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது ஒட்டாவா ஆறு. ஓர் அழகிய இளம்பெண் புன்முறுவல் பூத்தபடி நகரின் நடுவே மெல்ல நடந்து சென்றால் எப்படியிருக்கும்! அப்படியிருக்கிறது நகரின் இடையிடையே ஒய்யார நடைபயிலும்  ஒட்டாவா ஆறு.      மூன்று ஆண்டுகளுக்குமுன் நான் இங்கே வந்தபோது இந்த ஆற்றின் பேரழகைக் கண்டு பெருவியப்படைந்து இப்படி எழுதினேன்.

Sunday, 16 August 2020

என்னைப் புரட்டி எடுத்த புத்தகம்

   பதினான்கு நாள் வனவாசம் இன்னும் ஒருமணி நேரத்தில் முடிவுக்கு வரும்.   இந்தப் பதினான்கு நாள் வனவாசத்தில் நான் செய்த உருப்படியான செயல்கள் ஏதேனும் உண்டா என்று தட்டிக் கொட்டிப் பார்க்கிறேன். மனைவியிடம் கேட்டேன். அவள் சொல்கிறாள்: பாத்திரங்கள் விளக்கியது; வீட்டைக் கூட்டிப் பெருக்கியது!” அவள் பார்வையில் அவை உருப்படியான செயல்கள். ஆனால் என் பார்வையில்.....

Tuesday, 11 August 2020

சூழலைக் கெடுக்கும் சூழ்ச்சி

     எனது சுற்றுச்சூழல் சார்ந்த ஆக்கப் பணிகள் எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிவிட்டன. 1993இல் நம்மாழ்வாரின் தொடர்பில் இணைந்தபோது சூழல் குறித்த எனது ஆர்வம் பன்மடங்காகியது. பவானி நதிநீர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயலராகவும் சிலகாலம் பணியாற்றினேன். என் மாணவர்களின் ஒத்துழைப்போடு ஒரு நஞ்சில்லா காய்கறிக் கடை கூட நடத்தினேன் என்பதை நம்புவீர்களா? இப்படியாக ஓர் ஆசிரியரின் சமூக மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளைக் கருத்தில் கொண்டே எனக்கு நடுவண் அரசு தேசிய விருதினை வழங்கிச் சிறப்பித்தது. ஒரு சூழல் செயற்பாட்டாளர் என்ற வகையில் இந்தச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020                (EIA-Environment Impact Assessment 2020) என்பது எனக்கு உடன்பாடாக அமையவில்லை.

Friday, 7 August 2020

கட்டுக்குள் இருக்கும் கரோனா

 


  பதினான்கு நாள் வனவாசத்தில் இன்று ஐந்தாம் நாள். ஆடி வெள்ளி என்பதால் வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கிருமிக்கொல்லியைக் கொண்டு துடைத்துத் தூய்மைப் பணியை மேற்கொண்டேன். பணிநிறைவுக் காலத்தில் துணைவியாரின் பணிகளைப் பகிர்ந்து கொள்வதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டேன்.

Tuesday, 4 August 2020

பிறந்த கதையும் பறந்த கதையும்

பிறந்த கதையும் பறந்த கதையும்

   எங்கள் பேரன் பிறந்த கதை முதலில் வரும். அவனைப் பார்க்க நாங்கள் பறந்த கதை அடுத்து வரும். எங்கள் இளைய மகளும் மாப்பிள்ளை தாயுமானவரும் கனடாவில் படித்து, மணம் முடித்து அங்கேயே வேலை பார்ப்பவர்கள் என்பது உறவுக்கும் நட்புக்கும் தெரிந்ததே. அவர்கள் அதே நாட்டில் சென்ற ஜூன் இருபத்தெட்டாம் நாள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருகின்றனர்.

Thursday, 18 June 2020

கொரோனா கொடுத்த புதிய வாய்ப்புகள்


   “கொரோனா பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார். அது குறித்துச் சிந்தித்ததன் விளைவே இப்பதிவு.

Friday, 5 June 2020

மண்ணாகிப் போவான் மனிதன் இன்று காலையில் எழுந்ததும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு இன்றியமையாத பணியில் ஈடுபட்டேன். ஆம். சாலையோரத்தில் ஒரு பூவரசு மரக்கன்று நட்டேன்.

Saturday, 23 May 2020

மாணாக்கர் அணியில் ஒரு மாணிக்கம்


   இந்தப் பிறவியில் ஓர் ஆசிரியனாய்ப் பணியாற்றக் கிடைத்த அரிய வாய்ப்பு என்பது என் பெற்றோர் செய்த தவப்பயனால் என்பேன். என்னிடம் படித்து அணியணியாய் ஆயிரக்கணக்கில் வெளியேறிய மாணாக்கர் பலரும் உலகெங்கும் பல்வேறு துறைகளில் வெற்றிவாகை சூடி வலம் வருகிறார்கள்.

Friday, 15 May 2020

நினைவில் நிற்கும் நிலவுக் கவிஞர்  கு.மா.பா. என அனைவராலும் அறியப்பட்ட குறிச்சி மாரிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள வேளுக்குடி என்னும் கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர்.

Wednesday, 22 April 2020

புரிதல் இல்லாத புல்லறிவாளர்கள்


   மகுடத் தொற்று நச்சில் நோய்19. இதன் பிடியில் சிக்கி பதினைந்து நாள்கள் போராடித் தோற்றுப் போனார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். தன் மரணத்திற்குப்பின் அரங்கேறிய சோக நிகழ்வுகளைக் கண்ட அவரது ஆன்மா அமைதியடையுமா என்றால் அடையாது என்றே சொல்லத் தோன்றுகிறது,

Saturday, 18 April 2020

பார்த்தாலே இனிக்கும் பால் கொழுக்கட்டை    நான் வீட்டை விட்டு வெளியில் அடி எடுத்து வைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வீட்டைத் தேடிவரும் பால், காய்கறி, வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு அருமையாகச் சமாளிக்கிறோம். நானும் என் மனைவியும் சேர்ந்தே சமைக்கிறோம்; பாத்திரம் கழுவுகிறோம்; வீட்டைப் பெருக்குகிறோம்.

Sunday, 29 March 2020

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்


   
    இப்போது மக்கள் மன அழுத்தத்தில் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதற்கு நகைச்சுவை ஒன்றுதான் மாற்று மருந்து. இன்றைய சூழலுக்கேற்ற நகைச்சுவை துணுக்குகள் சிலவற்றை உருவாக்கி இங்கே பதிவிடுகிறேன்.

“மருமகளே! ஆச்சரியமா இருக்கு.
எண்ட்ற பேரன் கறிவேப்பிலைய
ஒதுக்கி வக்காம திங்கறான்.
என்னடி மந்திரம் போட்ட?”

“கறிவேப்பிலை தின்னா
 கொரோனா வராதுன்னு சொன்னேன்” 
        &&&&&&&&

“ஏண்டா எண்ட்ற பேரனைப் போட்டு
 இப்பிடி அடிக்கிற”

“பின்னே என்னாம்மா. பரீட்சை எழுதாம
 பாஸ் ஆகிறதுக்கு அடுத்த வருஷமும்
கொரோனா வருமான்னு கேக்கிறான்.”
       &&&&&&&&

கணவன்: “போ போ போய்த்தொலை!”

மனைவி: “நீங்க சரியான ஆம்பிளையாயிருந்தா
          இப்பவே என்ன ரயிலேத்தி  விடுங்க.
          நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்”
              &&&&&&&&&

“என்னால இனிமே என் ஒய்ஃபோட
குடுத்தனம் நடத்த முடியாது”

“ஏம்பா என்னாச்சு/”

“இருமட்டுமா இல்ல
தும்மட்டுமான்னு பயங்காட்றா.”
     &&&&&&&&


மனைவி: “சும்மா சும்மா கைகழுவினா மட்டும் ஆச்சா. அப்படியே அப்பப்ப
          விழற பத்துப் பாத்திரங்களையும் கழுவி வைக்கணு”
கணவன்:!?!?!?
                 &&&&&&&&&

“ஹலோ காமு இந்த க்வாரண்டையனோட தாக்கம் எங்காத்துல நன்னாவே தெரியறது. ஆமாண்டி... என் மாட்டுப்பொண்ணு உண்டாகியிருக்கிறா.”

“எங்காத்திலயும் அப்பிடித்தான். மூக்கப் பிடிக்க மூணுவேளையும் தின்னுட்டு என் ஆத்துகாரர் குண்டாகியிருக்கிறா”
           &&&&&&&&&&
“அடியே காமு! காலிங் பெல் சத்தம் கேக்குதே..போய் பார்.”

“போலீஸ் வந்திருக்கா ஒங்களை விசாரிக்க”

“நான் ஒரு தப்பும் பண்ணலையேடி.”

“நேத்திக்கு நம்ம ஆத்துக்கு வந்த ஹெல்த் கேர் கேர்ள்கிட்ட நீங்க சிரிச்சிப் பேசி கைகுலுக்கியதை சிசிடிவி யில பாத்துட்டாங்களாம்!.”
          &&&&&&&&&

“ஏங்க இந்த அநியாயத்த கேட்டிங்களா?”

“என்னம்மா வேலைக்காரிகிட்ட சண்ட?”

“அவளுக்கும் ஒர்க் அட் ஹோம் வேணுங்கிறா”.
            &&&&&&&&


ஜெயில் வார்டன்: ஒன்ன தூக்குல போட்ற நாளும் வந்தாச்சு. ஒன்னோட
                  கடைசி ஆசை என்னான்னு சொல்லு”.

கைதி:           “ஒங்க கையப் புடுச்சி கைகுலுக்குனு சார்.”
                 &&&&&&

“ஹலோ மேனேஜர் சாருங்களா?
எனக்கு கோரோனா பாசிட்டிவ் ஆயிடுச்சு.
21 நாள் சம்பளத்தோட லீவு வேணுங்க.
என்ன....குடுக்க மாட்டிங்களா.
அப்பசரி நான் ஒடனே ஆபீசுக்கு வந்துட்றேன்.”
        &&&&&&&

அப்பா: “இப்பவே ஒன்னை கன்னத்தில அறையறேன் பாரு”

மகன்: அறைங்க. ஆனா ஆறடி தள்ளி நின்னு அறைங்க”
        &&&&&&&

“ஏம்பா பச்ச கொழந்தைய இப்படிப் போட்டு அடிக்கிற?”

“ஏ ஃபார் ஆப்பிள்; பி ஃபார் பலூன்ங்கிறான்”

“சரியாத்தானே சொல்றான்”

“அதுக்கப்புறம் சி ஃபார் கொரோனாங்கிறானே!”
       &&&&&
நகைச்சுவை துணுக்குகள் ஆக்கம்
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

Tuesday, 24 March 2020

நோயை விரட்டும் நுட்பம் அறிவோம்


    இன்னும் சில வார காலம் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். இதை ஆக்க வழியிலும் அறிவார்ந்த வழியிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆக்க வழியில் எப்படிப் பயன்படுத்தலாம்?

Saturday, 14 March 2020

புலம்ப வைக்கும் புதுநோய்


  கனடா நாடு டொரண்டோ நகரில் வசிக்கும் என் நண்பர் அகில் அவர்கள் நேற்று என்னைப் புலன வழியே அழைத்தார். “நீங்கள் கனடாவுக்கு வருவதைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள்” என்று ஒரு வரியில் சொல்ல வேண்டிய செய்தியை காரண காரியங்களோடு கால்மணி நேரம் பேசினார்.

Saturday, 7 March 2020

கொவைட்19 என்னும் கொள்ளை நோய்


  இன்றைய(7.3.2020) நிலவரப்படி இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முப்பத்து நான்கு என நடுவண் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

  Corona Virus Disease என்னும் ஆங்கிலச் சொல் தொடர்களில் சில எழுத்துகளைப் பொறுக்கிப் போட்டு, அதனுடன் அது பிறந்த ஆண்டையும் சேர்த்து, இந்நோய்க்கு COVID19 என்னும் செல்லப்பெயரைச் சூட்டியுள்ளார்கள்! உருவாகும் புயலுக்கும் ஒரு பெயர்; பரவிவரும் கொள்ளை நோய்க்கும் ஒரு பெயர்! இனி பிறக்கும் குழந்தைகளுக்கு கரோனா என்றுகூட பெயர் சூட்டுவார்கள்!

  கரோனா நோயின் பாதிப்புக்குள்ளான எழுபது நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஆகிவிட்டது.    இந்தச் சூழலில் அந்த நோயின் படையெடுப்பை நாம் எப்படி எதிர்கொள்ளலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

Friday, 21 February 2020

தன்மானம் இல்லாத் தமிழன்


           
       மானத்தோடு வாழ்ந்த மறத்தமிழன் இன்றைக்கு மரத்தமிழன் ஆகிவிட்டான். கொங்கு வட்டார வழக்கில் சொல்வதென்றால் ஒணத்தி இல்லாத தமிழன் ஆகிவிட்டான். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை என்று இலங்கைவாழ் தமிழரும் மலேசியத் தமிழரும் நம் காதுபடவே பேசுகிறார்கள்.

Sunday, 16 February 2020

உலகெங்கும் அறிந்த உள்ளூர்ப் பழுத்த பயன்மரம்


    ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுப்பெரிக்க விறகு சுமந்தவர் ஆந்திர மாநில அரசின் ஆலோசகராய் ஆனதை யார் நம்புவார்? திண்ணைப் பள்ளித் தொடங்கி உயர்நிலைப் பள்ளி முடிய தமிழ் வழியில் படித்தவர் பின்னாளில் நடுவண் அரசின் தேர்வாணையக் குழு உறுப்பினராகிக் கொடிகட்டிப் பறந்ததை எவர்தான் நம்புவார்? நானும் நம்பாதவர் கட்சியில்தான் இருந்தேன்.    ஆனால் அந்த மாமனிதரின் வழ்க்கை வரலாற்று நூலைப் படித்தபோது அவர் குறித்தான எனது மதிப்பீடு இமயம் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது.

Thursday, 16 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 26-30நெஞ்சம் நிறைந்த நன்றி
  மார்கழி மாதம். இருபத்து ஒன்பது நாள்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து திருப்பாவையின் அந்தந்த நாள் பாசுரத்துக்கு உரை எழுதி ஆறு மணிக்குள் அன்பர்களின் புலனத் தளத்தில் பதிவிடுவது அன்றாட திருப்பணியாய் இருந்தது. எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இப்பணியை நிறைவேற்றிட அருள் செய்த இறைவனுக்கு முதல் நன்றி.

Sunday, 12 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 21-25


பாடல் எண்: 21
ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
   மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
   ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
   மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து அடிபணியுமா போலே
   போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

Sunday, 5 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 15-20


பாடல் எண்:15 
photo courtesy: Google
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
    
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாய் அறிதும்
    
வல்லீர்கள் நீங்களே, நான் தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?
    
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
    
வல்லானை, மாயானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்.

Friday, 3 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 11-15


பாடல் எண்: 11
கற்றுக் கறவைகள் கணங்கள் பலகறந்து
  செற்றார் திறனழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
  புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
  முற்றம் புகுந்து முகில்வண்னன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
  எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்!