இன்றைய(7.3.2020) நிலவரப்படி இந்தியாவில் கரோனா
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முப்பத்து நான்கு என நடுவண் அரசு வெளியிட்ட
செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
Corona
Virus Disease என்னும்
ஆங்கிலச் சொல் தொடர்களில் சில எழுத்துகளைப் பொறுக்கிப் போட்டு, அதனுடன் அது பிறந்த
ஆண்டையும் சேர்த்து, இந்நோய்க்கு COVID19 என்னும் செல்லப்பெயரைச் சூட்டியுள்ளார்கள்!
உருவாகும் புயலுக்கும் ஒரு பெயர்; பரவிவரும் கொள்ளை நோய்க்கும் ஒரு பெயர்! இனி பிறக்கும்
குழந்தைகளுக்கு கரோனா என்றுகூட பெயர் சூட்டுவார்கள்!
கரோனா நோயின் பாதிப்புக்குள்ளான எழுபது நாடுகளில்
இந்தியாவும் ஒன்று என ஆகிவிட்டது. இந்தச் சூழலில் அந்த நோயின் படையெடுப்பை நாம் எப்படி
எதிர்கொள்ளலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.