மகுடத் தொற்று நச்சில் நோய்19. இதன்
பிடியில் சிக்கி பதினைந்து நாள்கள் போராடித் தோற்றுப் போனார் சென்னையைச் சேர்ந்த
மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். தன் மரணத்திற்குப்பின் அரங்கேறிய சோக நிகழ்வுகளைக்
கண்ட அவரது ஆன்மா அமைதியடையுமா என்றால் அடையாது என்றே சொல்லத் தோன்றுகிறது,
Wednesday, 22 April 2020
Saturday, 18 April 2020
பார்த்தாலே இனிக்கும் பால் கொழுக்கட்டை
நான் வீட்டை விட்டு வெளியில் அடி
எடுத்து வைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வீட்டைத் தேடிவரும் பால், காய்கறி, வீட்டுத்
தோட்டத்தில் கிடைக்கும் கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு அருமையாகச் சமாளிக்கிறோம்.
நானும் என் மனைவியும் சேர்ந்தே சமைக்கிறோம்; பாத்திரம் கழுவுகிறோம்; வீட்டைப்
பெருக்குகிறோம்.
Sunday, 29 March 2020
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
“மருமகளே! ஆச்சரியமா இருக்கு.
எண்ட்ற பேரன் கறிவேப்பிலைய
ஒதுக்கி வக்காம திங்கறான்.
என்னடி மந்திரம் போட்ட?”
“கறிவேப்பிலை தின்னா
கொரோனா
வராதுன்னு சொன்னேன்”
&&&&&&&&
“ஏண்டா எண்ட்ற பேரனைப் போட்டு
இப்பிடி
அடிக்கிற”
“பின்னே என்னாம்மா. பரீட்சை எழுதாம
பாஸ்
ஆகிறதுக்கு அடுத்த வருஷமும்
கொரோனா வருமான்னு கேக்கிறான்.”
&&&&&&&&
கணவன்: “போ போ போய்த்தொலை!”
மனைவி: “நீங்க சரியான ஆம்பிளையாயிருந்தா
இப்பவே என்ன ரயிலேத்தி விடுங்க.
நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்”
&&&&&&&&&
“என்னால இனிமே என் ஒய்ஃபோட
குடுத்தனம் நடத்த முடியாது”
“ஏம்பா என்னாச்சு/”
“இருமட்டுமா இல்ல
தும்மட்டுமான்னு பயங்காட்றா.”
&&&&&&&&
மனைவி: “சும்மா சும்மா கைகழுவினா மட்டும் ஆச்சா.
அப்படியே அப்பப்ப
விழற பத்துப் பாத்திரங்களையும் கழுவி வைக்கணு”
கணவன்:!?!?!?
&&&&&&&&&
“ஹலோ காமு இந்த க்வாரண்டையனோட தாக்கம்
எங்காத்துல நன்னாவே தெரியறது. ஆமாண்டி... என் மாட்டுப்பொண்ணு உண்டாகியிருக்கிறா.”
“எங்காத்திலயும் அப்பிடித்தான். மூக்கப் பிடிக்க
மூணுவேளையும் தின்னுட்டு என் ஆத்துகாரர் குண்டாகியிருக்கிறா”
&&&&&&&&&&
“அடியே காமு! காலிங் பெல் சத்தம் கேக்குதே..போய்
பார்.”
“போலீஸ் வந்திருக்கா ஒங்களை விசாரிக்க”
“நான் ஒரு தப்பும் பண்ணலையேடி.”
“நேத்திக்கு நம்ம ஆத்துக்கு வந்த ஹெல்த் கேர்
கேர்ள்கிட்ட நீங்க சிரிச்சிப் பேசி கைகுலுக்கியதை சிசிடிவி யில பாத்துட்டாங்களாம்!.”
&&&&&&&&&
“ஏங்க இந்த அநியாயத்த கேட்டிங்களா?”
“என்னம்மா வேலைக்காரிகிட்ட சண்ட?”
“அவளுக்கும் ஒர்க் அட் ஹோம் வேணுங்கிறா”.
&&&&&&&&
ஜெயில் வார்டன்: ஒன்ன தூக்குல போட்ற நாளும்
வந்தாச்சு. ஒன்னோட
கடைசி ஆசை என்னான்னு சொல்லு”.
கைதி: “ஒங்க கையப் புடுச்சி கைகுலுக்குனு சார்.”
&&&&&&
“ஹலோ மேனேஜர் சாருங்களா?
எனக்கு கோரோனா பாசிட்டிவ் ஆயிடுச்சு.
21 நாள் சம்பளத்தோட லீவு வேணுங்க.
என்ன....குடுக்க மாட்டிங்களா.
அப்பசரி நான் ஒடனே ஆபீசுக்கு வந்துட்றேன்.”
&&&&&&&
அப்பா: “இப்பவே ஒன்னை கன்னத்தில அறையறேன் பாரு”
மகன்: அறைங்க. ஆனா ஆறடி தள்ளி நின்னு அறைங்க”
&&&&&&&
“ஏம்பா பச்ச கொழந்தைய இப்படிப் போட்டு
அடிக்கிற?”
“ஏ ஃபார் ஆப்பிள்; பி ஃபார் பலூன்ங்கிறான்”
“சரியாத்தானே சொல்றான்”
“அதுக்கப்புறம் சி ஃபார் கொரோனாங்கிறானே!”
&&&&&
நகைச்சுவை துணுக்குகள் ஆக்கம்
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
Subscribe to:
Posts (Atom)