ஆம். பள்ளிகள் திறக்கும்; பாடங்கள் நடக்கும். நம் தமிழ் நாட்டில் அன்று; கனடா நாட்டில். கனடா நாட்டின் பல மாநிலங்கள் வருகிற செப்டம்பர் மூன்றாம் நாள் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளன.
Sunday, 30 August 2020
Monday, 24 August 2020
எங்கும் இனிமை என்றும் இனிமை
ஒட்டாவா என்பது கனடா நாட்டின் தலைநகரம். புதுமை, இனிமை, தூய்மை, வளமை இந்த நான்கும் நீக்கமற நிறைந்த நகரம். இந்த நகரின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது ஒட்டாவா ஆறு. ஓர் அழகிய இளம்பெண் புன்முறுவல் பூத்தபடி நகரின் நடுவே மெல்ல நடந்து சென்றால் எப்படியிருக்கும்! அப்படியிருக்கிறது நகரின் இடையிடையே ஒய்யார நடைபயிலும் ஒட்டாவா ஆறு. மூன்று ஆண்டுகளுக்குமுன் நான் இங்கே வந்தபோது இந்த ஆற்றின் பேரழகைக் கண்டு பெருவியப்படைந்து இப்படி எழுதினேன்.
Sunday, 16 August 2020
என்னைப் புரட்டி எடுத்த புத்தகம்
பதினான்கு நாள் வனவாசம் இன்னும் ஒருமணி நேரத்தில் முடிவுக்கு வரும். இந்தப் பதினான்கு நாள் வனவாசத்தில் நான் செய்த உருப்படியான செயல்கள் ஏதேனும் உண்டா என்று தட்டிக் கொட்டிப் பார்க்கிறேன். மனைவியிடம் கேட்டேன். அவள் சொல்கிறாள்: பாத்திரங்கள் விளக்கியது; வீட்டைக் கூட்டிப் பெருக்கியது!” அவள் பார்வையில் அவை உருப்படியான செயல்கள். ஆனால் என் பார்வையில்.....
Tuesday, 11 August 2020
சூழலைக் கெடுக்கும் சூழ்ச்சி
எனது சுற்றுச்சூழல் சார்ந்த ஆக்கப் பணிகள் எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிவிட்டன. 1993இல் நம்மாழ்வாரின் தொடர்பில் இணைந்தபோது சூழல் குறித்த எனது ஆர்வம் பன்மடங்காகியது. பவானி நதிநீர் பாதுகாப்புக் கூட்டமைப்பின் செயலராகவும் சிலகாலம் பணியாற்றினேன். என் மாணவர்களின் ஒத்துழைப்போடு ஒரு நஞ்சில்லா காய்கறிக் கடை கூட நடத்தினேன் என்பதை நம்புவீர்களா? இப்படியாக ஓர் ஆசிரியரின் சமூக மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளைக் கருத்தில் கொண்டே எனக்கு நடுவண் அரசு தேசிய விருதினை வழங்கிச் சிறப்பித்தது. ஒரு சூழல் செயற்பாட்டாளர் என்ற வகையில் இந்தச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவறிக்கை 2020 (EIA-Environment Impact Assessment 2020) என்பது எனக்கு உடன்பாடாக அமையவில்லை.
Friday, 7 August 2020
கட்டுக்குள் இருக்கும் கரோனா
பதினான்கு நாள் வனவாசத்தில் இன்று ஐந்தாம் நாள். ஆடி வெள்ளி என்பதால் வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கிருமிக்கொல்லியைக் கொண்டு துடைத்துத் தூய்மைப் பணியை மேற்கொண்டேன். பணிநிறைவுக் காலத்தில் துணைவியாரின் பணிகளைப் பகிர்ந்து கொள்வதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டேன்.
Tuesday, 4 August 2020
பிறந்த கதையும் பறந்த கதையும்
பிறந்த கதையும் பறந்த கதையும்
எங்கள் பேரன் பிறந்த கதை முதலில் வரும். அவனைப் பார்க்க நாங்கள் பறந்த கதை அடுத்து வரும். எங்கள் இளைய மகளும் மாப்பிள்ளை தாயுமானவரும் கனடாவில் படித்து, மணம் முடித்து அங்கேயே வேலை பார்ப்பவர்கள் என்பது உறவுக்கும் நட்புக்கும் தெரிந்ததே. அவர்கள் அதே நாட்டில் சென்ற ஜூன் இருபத்தெட்டாம் நாள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருகின்றனர்.