கும்பகோணம் கல்லூரியில் படிக்கும் இருபது வயது மாணவி தவறான வழியில் உறவு வைத்துக் கருவைச் சுமந்தாள். அவள் கழிவறைக்குள் சென்று தானே பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாள். மயங்கி விழுந்த அப் பெண்ணை, விடுதிக் காப்பாளர் மருத்துவமனையில் சேர்த்தார், தாயும் சேயும் நலம் என நம்மூர் நாளேடு செய்தி வெளியிட்டு நாலு காசு பார்த்தது.
திருமணத்திற்கு முன் கலவி கொள்ளும் ஆசை இப்பெண்ணுக்கு எப்படி வந்தது?
சென்ற விடத்தால் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
என்னும் ஒரு குறளை அவள் பின்பற்றியிருந்தால் இப்படிச் சீரழிந்திருக்கமாட்டாள்.
இணைத்யதளத்தில் ஒரு கும்பல் மறைமுகமாக இளைஞர்களைச் சீரழிக்க முனைகிறது. அண்மையில் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் குறித்த தரவுகளை நான் இணையத்தளத்தில் தேடியபோது விபச்சாரம் குறித்த விளம்பரம் வந்து முன்னாலே நிற்கிறது. என்ன கொடுமை! இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள்?
![]() |
வரவிருக்கும் தமிழ் சினிமா |
![]() |
இணையத்தில் வந்த விபச்சார விளம்பரம் |
இன்னொரு கும்பல் நேர்முகமாகவே நம் வீட்டுப் பெண் பிள்ளைகளைக் கெடுக்க முனைகிறது. விரைவில் ஓர் “அருமையான” தமிழ்த் திரைப்படம் வெளியாக உள்ளது. BAD GIRL என்பது அதன் பெயர். பன்னிரண்டு இலட்சம் பள்ளி மாணவியர்க்குப் பொதுத்தேர்வு நெருங்கும் சமயத்தில் இப் படம் வெளியாகி அவர்களைப் பாடாய்ப் படுத்தப் போகிறது.
இன்பம் துய்ப்பது துய்ப்பது – அதுவும் பொறுப்பைத் தட்டிக் கழித்து இன்பம் துய்ப்பது என்பது மகளிரின் தனி உரிமை. நினைத்தபோது அதைத் துய்க்கலாம்; பெற்றோர் குறுக்கிட்டால் தற்கொலை மிரட்டல் என்னும் கருத்தை மையமாக வைத்துப் படம் எடுத்துள்ளனர்.
கல்விக்கூடத்தைக் கலவிக்கூடமாகக் காட்டியுள்ளதாக முன்னோட்டப் படத்தைப் பார்த்த என் நண்பர் சுரேஜமீ வருந்தி, தன் கண்டனத்தைப் புலன வழியே பகிர்ந்துள்ளார்.
நானும் அந்த முன்னோட்டப் படத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன். நம்முடைய மரபுவழிச் சொத்தான கற்பு, தீவினை அச்சம், நாணம், பெற்றோர் சொல் கேட்டல், திருமண பந்தம் என அனைத்தையும் நாசமாக்கும் வகையில் படக்கதை அமைந்துள்ளது. திருமணம் இல்லாமல் சேர்ந்து வசித்தல் என்னும் புதுவகை அமைப்பைப் புகுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படம். ஒருகாலத்தில் மலையாள சினிமா இதுமாதிரி வந்ததுண்டு. அவர்கள் திருந்திவிட்டனர். இப்போது தமிழ் சினிமா தடம் மாறிச் செல்கிறது.
இப் படத்தைத் தயாரித்தவர், நடித்தவர், பாடல் எழுதியவர்
இவர்களுக்கெல்லாம் பெண் குழந்தைகளே இல்லையா? இருந்தும்
எப்படி இப்படியொரு படத்தைத் தயாரித்தனர்? பெண்களின் உடல்
என்ன வணிகப் பொருளா? நாய்கள் கூட பொதுவெளியில் உறவு கொள்ளக் கூசும் இக் காலத்தில், பெண்களை
நாயினும் தாழ்ந்தவராகக் காட்டும் படத்தை எடுத்துள்ளனர். இப் படத்தை
உடனே தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.
நீதிமன்றம் தானே முன்வந்து இப் படத்தைத் தடை செய்வதோடு, படத்தைத் தயாரித்தவர், இயக்கியவர், நடித்தவர், படத்தின் தணிக்கை அதிகாரி உட்பட அனைவருக்கும் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்.
நம் கண்ணுக்கு முன்னால் நம் வீட்டுப்
பெண் குழந்தைகள் கெட்டுப் போவதைக் கண்டும் என்னால் ஒதுங்கி நிற்க முடியவில்லை. அதனால்தான்
இந்தப் பதிவு.
முனைவர் அ. கோவிந்தராஜூ, துச்சில்: அமெரிக்கா
சிறப்பு அண்ணா! - சுரேஜமீ
ReplyDeleteAgreed. We feel ashamed about the happening in society. Two days read in a b news paper about father himself abusing girls.. Even young boys were misused by fathers by penetrative sex and teachers abusing girls. Where is the society going. Though India had achieved many things, fal moral values have fallen due to TVs telecasting 24 hours, pornography in internet etc. No political party has bothered about this.
ReplyDeleteOmandurar, Kamaraj had maintained very good standard. But all politicians are corrupted.. Interested in money making.. Not bothered about Society..
CA R. Saravana perumal
CA
சாட்டையடி கருத்துகள்...
ReplyDeleteமனம் போன போக்கில் போங்கள் என்கிறார்கள்...😔
ReplyDelete1080 எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.
வாய்ப்பு கிடைத்தால் கயவர்கள் தன்னையே விற்பதற்கு விரைவாக தயாராகி விடுவர்... அவர்களுக்கு கொள்கைகள் எதுவுமில்லை
சி இராஜேந்திரன்
வள்ளுவர் குரல் குடும்பம்
wwe.voiceofvalluvar.org