Monday, 30 January 2017
Thursday, 26 January 2017
தாயின் மணிக் கொடி
இன்றைக்கு நெடு நேரம்
தொலைக்காட்சிப் பெட்டிமுன் தவமாய்க் கிடந்தேன். ஒன்பதுமணி வரையிலும் சென்னையில்
நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வையும், தொடர்ந்து பதினொன்று முப்பது வரை புதுதில்லியில்
நடந்த குடியரசுநாள் விழா நிகழ்வுகளையும் கண்டு மகிழ்ந்தேன். அவ்வப்போது நாட்டுப்பண்
இசைக்கப்படும்போது எழுந்து நிற்பதும் பின்னர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதுமாய் பொழுது கழிந்தது. மனதெல்லாம் மத்தாப்பாய் நம் நாடு குறித்த பெருமித
உணர்வே பூத்துக் குலுங்கியது.
குடியரசுத் தலைவர் தம் வயதையும்
பொருட்படுத்தாமல் கால்கடுக்க நின்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும், கண்
கொட்டாமல் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்ததும் மெய்சிலிர்க்க வைத்தது.
நம்மிடையே மதத்தில், உடுக்கும்
உடையில் உண்ணும் உணவில் வேறுபாடுகள் பல இருந்தாலும் மலரிடை நார் போல மணியிடை
இழைபோல நாட்டுப்பற்று உள்ளது என்பதை உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறோம்.
நம் சிறுவர் சிறுமியர் நிகழ்த்திக்
காட்டிய கலைநிகழ்ச்சிகளில் “நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம்” என்னும்
உணர்வு அவர்தம் முகங்களில் வெளிப்பட்டதைப் பார்த்து வியந்து போனேன்.
தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சற்றே ஓய்வாக அமர்ந்த நேரத்தில் என் துணைவியார்
அவளது வாட்ஸப்பில் வந்த ஒரு குறும்படத்தைப் பார்க்கச் சொன்னாள்.
பள்ளிக்குச் செல்லாமல் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடைநின்ற மூன்று சிறியவர்கள்
ஒரு மெட்ரிக் பள்ளியின் கொடியேற்று விழாவைக் காண விரும்புகிறார்கள். ஆனால் பள்ளிக்
காவலர் விரட்டியடிக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் ஒரு செயலை உடனே செய்கிறார்கள்.
அந்த வழியாக வந்த ஆட்சியர் கூட தன் காரை நிறுத்தி இறங்கி அச் சிறுவர்களின் செயலில்
தானும் பங்கேற்கிறார்.
அவர்கள்
செய்த செயல் செயற்கரிய செயல். எவருடைய கற்பனைக்கும் எட்டாத செயல்.
குறும்படத்தை இணைப்பில் காணலாம்.
Tuesday, 24 January 2017
தொன்மை மறவேல்
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே
என்பார் தொல்காப்பியர். சொற்களின் உண்மைப் பொருள் தெரியாமல் உழல்வோர் உளர்; உளறுவோரும்
உளர், கயிற்றைப் பாம்பெனவும் பாம்பைக் கயிறெனவும் பிறழ உணர்வதைப் போல பழந்தமிழ்ச்
சொற்களைப் பார்க்கின்றோம்.
Friday, 20 January 2017
வெள்ளையர் செய்த சூது
வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்டபோது
செய்த சூழ்ச்சிகளைவிட இப்போது அதிகமாகவே செய்கிறார்கள். அதுவும் நம் நாட்டின்
இளைஞர்கள் இளம்பெண்களைக் குறிவைத்துத் திரை மறைவில் பல சதி வேலைகளைச்
செய்கிறார்கள்.
Monday, 16 January 2017
உங்களுக்குக் குறள் மொழி தெரியுமா?
பல வருடங்கள் கழித்து நண்பர் இருவரும்
சந்திக்கின்றனர். அவர் அவருடைய மனைவி, வந்த நண்பர் அனைவரும் குறள்மொழியில்
பேசுகின்றனர்.
Sunday, 15 January 2017
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
பொங்கல் என்றால் மகிழ்ச்சிக்குக்
குறைவிருக்காது. மாட்டுப் பொங்கலன்று எல்லோருக்கும் புத்தாடைகளைக் கொடுப்பார்
எங்கள் அப்பா. முதலில் தலைமைப் பண்ணையாள் நாயகனுக்கும் அவர் மனைவிக்கும்
கொடுப்பார். தொடர்ந்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுப்பார். பிறகு
என் அண்ணன் இருவருக்கும் வேட்டி சட்டை கொடுப்பார். அம்மாவை அழைத்து சேலை
கொடுப்பார்; இரவிக்கை எல்லாம் கிடையாது. எங்கள் அம்மா இரவிக்கை போட்டு நான்
பார்த்தது இல்லை; அப்பா சட்டை போட்டும் பார்த்ததில்லை. கடைக்குட்டி என்பதாலோ
என்னவோ என்னைக் கடைசியாக அழைத்து, புது அரைக்கால் சட்டை, அரைக்கை சட்டை இரண்டையும்
எடுத்துக் கொடுப்பார்.
Friday, 13 January 2017
படிப்பறிவு இருந்தும் படிக்காதவர்கள்
வாங்கிய
புத்தகங்களை எத்தனைப் பேர் வாசிக்கிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் வினா.
சலவைத் தொழிலாளியின் கழுதையும், புத்தகங்களை வாங்கி அவற்றைப் படிக்காதவரும் ஒன்றுதான் என்று அறிஞர் அண்ணா எப்போதோ சொன்னது இப்போது என் நினைவில் வந்து போகின்றது.
Thursday, 5 January 2017
படிப்பும் பகுதிநேர வேலையும்
நான் மகள் இருவரைப் பெற்ற மகராசன். பெரியவள் திருமணமாகி அமெரிக்காவில் தன் ஆய்வுப் படிப்பைத் தொடர்கிறாள். சின்னப் பெண் கனடா நாடு ஒட்டாவா நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிக்கிறாள்.
Tuesday, 3 January 2017
கரூர் மாநகரில் கவின்மிகு விழா
ஒரே சமயத்தில் ஏழு நூல்கள் வெளியாவது கரூர்நகரம் கண்டிராத நிகழ்வு என நண்பர்கள் தமக்குள் வியப்பு மேலிட பேசிக் கொண்டிருந்தார்கள். வள்ளுவர் உணவகம் வழங்கிய தேநீரைச் சுவைத்தபடி ஒருவர்க்கொருவர் அறிமுகமாகி உற்சாகமாக அளவளாவி நின்றபோது
நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு ஆர்.முரளி அவர்கள் விழா தொடங்க இருப்பதை அழகு தமிழில் அறிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)