Saturday, 29 March 2025

சுந்தர் பிச்சையும் கரப்பான் பூச்சியும்

     ஓர் உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அந்தக்  கரப்பான் பூச்சியை அவர் மீதிருந்து விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

 மிகவும் முயன்று அவர் அந்த கரப்பான் பூச்சியைத் தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த அது இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

    இதைப் பார்த்துக் கொண்டிருந்த உணவகப் பணியாளர் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்தப் பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் தோளின் மீது அமர்ந்த கரப்பான் பூச்சியின் நடத்தையைக் கவனித்தார். அது அமைதியாக இருந்ததைக் கவனித்த ஊழியர், கொஞ்சமும் பதறாமல் தன் விரல்களால் அதைப் பிடித்து உணவகத்திற்கு வெளியே விட்டார்.

    நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித என் மனம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே அந்தப் பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அன்று. அந்தக் கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம். சுருங்கச் சொன்னால் அந்தப் பெண்கள் react செய்தனர். அந்த ஊழியர் respond செய்தார்.

     இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தைக் கையாள முடியாத என் இயலாமைதான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியைக் குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமைதான் என்னைத் தொந்தரவு செய்கிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, மாறாகப் பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு சில நிகழ்ச்சிகள் நடக்கும்.. அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அச்சூழலில் நாம் எப்படி நடக்கவேண்டும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.


     கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தப் பதிவை ஆழ்ந்து வாசித்தால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையைக் கொண்டாடத் துவங்குவீர்கள்!

இது தொடர்பாக நான் எழுதியுள்ள ஓர் ஆங்கிலக் கவிதை:

React or Respond

 

Well! You are physically well

But you are psychologically ill

Making the whole world a hell

Maybe one thing I want to tell

 

Don’t allow your mind to rule you

Make it a good servant for you

People always react to a situation

Very few respond; it’s my speculation

 

React means you are emotionally ill

Respond means you are emotionally well!

 

 

முனைவர் அ.கோவிந்தராஜூ,

துச்சில்: அமெரிக்கா.

 

5 comments:

  1. excellent post sir

    ReplyDelete
  2. Nice poem, and interpretation.

    ReplyDelete
  3. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு! ஆங்கிலக் கவிதையும் அற்புதம்!

    ReplyDelete
  4. தி.முருகையன்29 March 2025 at 10:41

    கடுமையான பேச்சு ஒருவரை அமைதியிழக்கச் செய்வதில்லை, அந்த வாக்குவாதத்தைக் கையாள முடியாத இயலாமைதான் அவரைத் தொந்தரவு செய்கிறது. அமைதியைக் குலைக்கிறது

    இதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை அமைதியாக இருக்கும் என்பது நிதர்சனம்
    ஐயா .
    நன்றிகள் பல.

    ReplyDelete
  5. சுந்தர் பிச்சை அவர்களின் இந்தப் பதிவு வாசித்திருக்கிறேன் ஐயா.

    உங்கள் ஆங்கிலக் கவிதை அருமை

    கீதா

    ReplyDelete