Saturday 28 February 2015

புலியூருக்குக் கெட்ட பெயர்



     புலியூர் முருகேசன் விவகாரத்தில் பெருமாள் முருகனை இழுக்கவே கூடாது. பெருமாள் முருகனின் நிழலின் பக்கம் கூட இந்த ஆள் வரமுடியாது. பெருமாள் முருகன் மாணிக்கக்கல்; புலியூர் முருகேசன் கூழாங்கல். 

   சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டார் என்று ஒரு சாதியினர் அந்த எழுத்தாளர் என்று சொல்லப்படக்கூடிய  முருகேசனை அடித்து நொறுக்கிவிட்டனர்
.
   எழுதியிருக்கக்கூடாது; எழுதியதையும் கொச்சையாகவும் பச்சையாகவும்(obscene), நீலமாகவும்(blue film), மஞ்சளாகவும்(yellow literature)- ஆக மொத்தம் அசிங்கமாக எழுதிவிட்டார். உப்புக்குப் பெறாத ஒரு கருவை எடுத்துக்கொண்டு கதை எழுதுகிறேன் என்று மக்களை மாக்களாக இனம்காட்டிவிட்டார்
.
   அந்தக் குறிப்பிட்ட கதையில் வரும் சுப்பிரமணியைப் போல சமுதாயத்தில் இலட்சம் பேர்களில் ஒருவன் இருப்பான். அந்த பாலியல் வக்கிரத்தை எழுத்தில் கொண்டு வந்து அவனுக்கும் அந்த அசிங்கத்திற்கும் அங்கீகாரம் தர வேண்டுமா என்ன?

      Oral sex என்பது இயல்புக்கு மாறானது; தவறானது; அது மன நோயின் முற்றிய நிலைப்பாடு. தேமே என்று இருக்கும் தெரியாதவர்களுக்கும் தெரிவிக்கிறார் இந்த பதடி எழுத்தாளர்.

    பயன் இல்லாதவற்றைச் சொல்பவனை மக்களுள் பதடி என்று திட்டுகிறார் திருவள்ளுவர். பயன் இல்லாதவற்றை எழுதியுள்ள புலியூர் முருகேசனும் பதடிதான்.
     இளைஞர்களும் இளம்பெண்களும் அவர் எழுதியுள்ள அசிங்கத்தைப் படித்தால் மனம் தடுமாறி, தடம் மாறி கிளர்ச்சியுறுவார்கள்.
   அவரை அடித்து நொறுக்கியதை நான் ஆதரிக்கவில்லை. பொதுநல வழக்குப் போட்டு அவரை சிறைக்கு அனுப்பியிருக்கலாம்.
   

2 comments:

  1. மக்களுக்கு கொஞ்சம் கூட உபயோகமற்ற செய்திகளை
    எழுதாமல் இருப்பதே மேல்

    ReplyDelete
  2. சரிதான் சார்.மஞ்சள் கதை எழுதியவனை வழக்கில் சிறைக்கு அனுப்புவதே சரியானது. அடித்துதைத்து அவனைப் விளம்பரப் படுத்தி விட்டனர்.

    ReplyDelete