Sunday 20 September 2015

காலம் எல்லாம் குறள்வழி நிற்க

என்னால் முடியுமெனும் எண்ணம் வேண்டும்
            ஏன்முடி யாதென எண்ணல் வேண்டும்
முன்னேற வேண்டுமென முழுதாய் எண்ணி
         முனைப்போடு முயன்று நடத்தல் வேண்டும்
நன்னெறி சிந்தனை நல்வழி காட்டும்
          நற்செயல் செய்க., நானிலம் போற்றும்
தன்னால் நடக்கும் தலைவிதி என்று
         தயங்கி நின்றால் தவறி வீழ்வாய்!

காலம் கருதிநீ கருத்துடன் பணிசெய்தால்
        ஞாலம் கைகூடும் நவின்றார் வள்ளுவரும்
பாலம் எனும்படியாய் பலகுறள் இங்கிருக்க
        பாவம்! ஏனப்பா பரிதவித்து நிற்கின்றாய்?
ஓலம் ஒப்பாரி ஒருபோதும் உதவாது
        ஓரடி முன்வைத்தால் ஒருகாத வழிதெரியும்!
ஆலம் விழுதென அவனியைத் தாங்கும்
         ஆற்றல் இருப்பது உனக்கே புரியும்!

வெற்றி வந்தால் பெற்றுக் கொள்க
        வீழ்ந்து விட்டால் கற்றுக் கொள்க
கற்க விரும்பிடின் இளமையில் கற்க
        காலம் எல்லாம் குறள்வழி நிற்க
     நெற்றி வியர்வை நிலத்தில் வீழ
              நல்லுடல் பயிற்சி நாளும் செய்க!
    பற்பல மொழிகள் கற்றிடல் தெம்பு
              பைந்தமிழ் மொழியே உயிரென நம்பு!

                           -முனைவர் அ.கோவிந்தராஜூ

-----------------------------------------------------------------------------------------------------------------------
                          உறுதி மொழி

..:               1. இது எனது சொந்தப் படைப்பாகும்

         2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
            இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்       
           போட்டிகள் 2015-வகை 5 மரபுக் கவிதைப் போட்டிக்காகவே
            எழுதப்பட்டது.

        3.இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு வெளிவரும் 
          வரை இப்படைப்பு வேறு எந்த இதழுக்கும் அனுப்பப்பட    மாட்டாது.

6 comments:

  1. காலம் எல்லாம் குறள் வழி நிற்போம்
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. குறள்வழி நடந்தால் குவலயம் சிறக்கும்

    ReplyDelete
  3. வணக்கம் !
    அருமையான விருத்தம் ! மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் கருத்துக்கள்
    நிறைந்த பாவரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  4. தங்களின் படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.

    நன்றி.

    ReplyDelete
  5. வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. மரியாதைக்குரிய ஆசிரியப்பெருந்தகையீர்,
    வணக்கம்,தங்கள் முன்னாள் மாணவன் C.பரமேஸ்வரன் அன்புடன் எழுதுவது.புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு -2015 விழாக்குழுவினருக்கு ஊக்கமருந்தாக தங்களது கவிதை அமைந்துள்ளது.தங்களை வணங்கி வாழ்த்துகிறேன். தங்களது வெற்றியே எனது வெற்றியாக எண்ணி பேருவகை கொள்கிறேன்.
    (வைரவிழா மேல்நிலைப் பள்ளி - கோபிசெட்டிபாளையம்,ஆண்டு 1977முதல் 1981 வரை)
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,9585600733
    paramesdriver@gmail.com
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    ReplyDelete