Wednesday 30 September 2015

வீழினும் வேங்கையென எழுகவே!

  இளமையிலே சோம்பிநீ இருக்கலாமா?
    வளமையிலே வாழ்வதற்கு மறுக்கலாமா?
இளமயிலே!  சோம்பிநீ இருக்கலாமா?
   வளமயிலே!  வாழ்வதற்கு மறுக்கலாமா?

இளந்தமிழில் இனிதாகப் பேசிடவும்
   இயல்பாகப் பிழையின்றி எழுதிடவும்
இளமையிலே விட்டுவிட்டால் படியுமா?
   முதுமையிலே முயன்றாலும் முடியுமா?

உறங்கிக் கிடந்தால் இந்நாளில்
        ஊரே சிரிக்கும் பின்னாளில்
பிறந்ததும் வாழ்வதும் எதற்காக?        
        பெரும்புகழ் பெறுதல் அதற்காக!  
               

தொலைக்காட்சி இப்போது இனிக்கும்
           தொலைந்துவிடும் எதிர்காலம் கசக்கும்!
அலைப்பேசி உனை ஈர்த்து மயக்கும்
            அடுக்கடுக்காய் தீமைகளைப் பயக்கும்! 


இளங்காலை நேரத்திலே எழுவாய்
            இனிதாக இறைவனைத் தொழுவாய்
வளங்காண நாள்தோறும் படிப்பாய்
            வாழ்வினிலே சாதித்து முடிப்பாய்!

துடிப்புடன் செயலாற்று துன்பமிலை
    துணிந்திடு படிப்பதற்கே இன்றுமுதல்!
விடிந்ததும் இந்நாட்டின் தலைவன் நீ
    வீழினும் வேங்கையென எழுகவே!
                                     முனைவர் அ.கோவிந்தராஜூ
 ----------------------------------------------------------------------------------------------------------------------

 உறுதி மொழி
1. இது எனது சொந்தப் படைப்பாகும்
          2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
            இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்      
            போட்டிகள் 2015 (வகை 5 மரபுக் கவிதை) க்காகவே                எழுதப்பட்டது.

          3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
            வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்படமாட்டாது.

             
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------           

4 comments:

  1. தொலைக்காட்சி இப்போது இனிக்கும்
    தொலைந்துவிடும் எதிர்காலம் கசக்கும்!

    தமிழ் நாட்டில் அனைவரும் உணர வேண்டிய வரிகள் ஐயா இது
    வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    ReplyDelete
  3. மரியாதைக்குரிய ஆசிரியப்பெருந்தகையீர்,
    வணக்கம்,தங்கள் முன்னாள் மாணவன் C.பரமேஸ்வரன் அன்புடன் எழுதுவது.இளைய சமூகத்திற்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது தங்களது கவிதை.கடந்த 35ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் தற்போது தங்களை சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு -2015 விழாக்குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..தங்களை வணங்கி வாழ்த்துகிறேன். தங்களது வெற்றியே எனது வெற்றியாக எண்ணி பேருவகை கொள்கிறேன்.
    (வைரவிழா மேல்நிலைப் பள்ளி - கோபிசெட்டிபாளையம்,ஆண்டு 1977முதல் 1981 வரை)
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,9585600733
    paramesdriver@gmail.com
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    ReplyDelete
  4. வணக்கம்... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு உங்களை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்

    ReplyDelete