“கருவூர் கலை விழா நடக்கிறது. மாநில
அளவில் ஓவியப் போட்டி நடத்துகிறோம். பரிசளித்துப் பாராட்டிப் பேச வேண்டும். வர
இயலுமா?” என்று எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தொலைப்பேசி மூலம் கேட்டார்.
நையாண்டி நறுக்காண்டி என்று அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு குறித்த நாளில் குறித்த
நேரத்தில் சென்றேன். சாக்குப் போக்குச் சொல்லி வாய்ப்பை மறுத்திருந்தால் ஒரு
சிறப்பு மிக்க ஓவியத்தைக் காணும் வாய்ப்பு கிட்டாமல் போயிருக்கும் என இப்போது
உணர்ந்தேன்.
Tuesday, 28 May 2019
Sunday, 19 May 2019
பாங்குடன் விளங்கும் பூங்கா
பூங்கா சிறியதோ பெரியதோ அதைக்
கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும் பாங்கினை அமெரிக்காவிலும் கனடாவிலும் பார்த்து
வியந்துள்ளேன். இந்தியாவிலும் அத்தகைய பூங்கா ஒன்றினைக் காணும் வாய்ப்பு எனக்குச்
சென்றமாதம் கிடைத்தது.
Wednesday, 1 May 2019
உழுதுண்டு வாழ்வாரே வீழ்வார்
குஜராத் உயர்நீதிமன்ற வாயிலில்,
அம் மாநிலத்தைச் சேர்ந்த குறுநில
விவசாயிகள் ஒன்பது பேர்கள் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கின்றனர். இவர்கள்
ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடாக தனக்கு வழங்க வேண்டும் என வழக்குத்
தொடுத்துள்ளது பெப்சி என்னும் பன்னாட்டு நிறுவனம்.
Subscribe to:
Posts (Atom)