Halloween என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் பெறும் பேய்கள் விழா இன்று கனடா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் தீபாவளியைப் போல வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
Sunday, 31 October 2021
Friday, 29 October 2021
குறிஞ்சி நிலத்தில் குறு நடையாக….
நீண்ட காலம் எந்தப் போரும் நடக்காமல், களத்தில் இறங்கிப் போர் புரிய வாய்ப்பில்லாமல், வீட்டில் முடங்கிக் கிடக்கும் பண்டைக் காலத்துத் தமிழ் மறவர்களின் தோள்கள் தினவெடுக்குவாம். எனக்கும் அதே நிலைதான்.
Saturday, 23 October 2021
கட்டுடல் கொண்ட கனடா மக்கள்
இப்போது கனடா நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ மூன்றரை கோடி! இவருள் சுமார் முப்பது விழுக்காடு அளவு வெளிநாட்டினராக இருக்கலாம். கனடாவைத் தாயகமாய்க் கொண்ட மக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்வதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
Thursday, 14 October 2021
பாரதியும் ஹைக்கூ கவிதையும்
ஹைக்கூ கவிதையை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியே.
அவர் அக்டோபர் 18, 1916 சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இது:
Monday, 11 October 2021
நாடு முழுவதும் நன்றித் திருவிழா
மனிதருக்கே உரிய பண்புகளில் முதன்மையானது உற்றுழி உதவுதல். அதனினும் சிறந்த பண்பு ஒன்று உண்டென்றால் அது பெற்ற உதவியை நன்றியுடன் நினைத்துப் பார்த்தல் ஆகும். ஒருவர் செய்த உதவி தினையளவே என்றாலும் அதைப் பனையளவாய்க் கொண்டு நன்றி பாராட்டுதல் தலைசிறந்த பண்பாகும். இந்தப் பண்பின் வெளிப்பாடாக ஒரு நாளை ஒதுக்கி உற்சாகமாகக் கொண்டாடுவதைக் கனடா நாட்டில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இன்று காலை நடைப்பயிற்சியின் போது நான் கண்ட காட்சிகளே அதற்குச் சான்று.
Saturday, 2 October 2021
அம்மா வந்தாள்
தி.ஜானகிராமன் எழுதியுள்ள 'அம்மா வந்தாள்' நாவலை, அம்மா தனக்குத் தந்த சிறு மைசூர்பா துணுக்கை ஒரே மூச்சில் தின்னாமல் மெல்ல நக்கிச் சுவைத்துத் தின்ற குழந்தையைப்போல் மெதுவாக எழுத்தெண்ணிப் படித்து முடித்தேன்.