அறுபத்தாறு ஆண்டுகளுக்குமுன் - 1959ஆம் ஆண்டு - என் பெற்றோர் ஏழு வயது சிறுவனான என்னை, அன்றைய திருச்சி மாவட்டம்
இன்றைய அரியலூர் மாவட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதலாம் வகுப்பில்
சேர்த்தபோது என் வலக்கை ஆட்காட்டி விரலைப்பிடித்து, தட்டில் பரப்பியிருந்த பச்சரிசிமேல்
ஆனா ஆவன்னா எழுதச் செய்தவர் இராஜாத்தி டீச்சர். அப்போது அவருக்கு பதினெட்டு அல்லது
பத்தொன்பது வயது இருக்கலாம். நான் நான்காம் வகுப்புக்குச் செல்லும் வரையில் எனக்கு
ஆசிரியராக இருந்தார்.