எங்கள் வீட்டையொட்டி ஒரு சிறிய தோட்டம். அதில் செடி, கொடி, மரங்கள் அதிகம். பூச்சி பொட்டுகள் தங்கும் வகையில் குப்பைக் கூளங்களைக் குவித்துப் போட்டு வைப்பதில்லை. அப்படியிருந்தும் நேற்று ஒரு பாம்பு வீட்டிற்கே வந்து, துண்டைக் காயப்போட வெளியில் வந்த என்னைப் பார்க்க, நான் அதைப் பார்க்க ஒரு கணம் திகைத்து நின்றேன்.
Saturday, 26 August 2023
Thursday, 3 August 2023
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
மனிதருக்குத் துன்பம் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் கூற்று இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். பிறர் தர நன்று வருகிறதோ இல்லையோ தீது வருகிறது.
Sunday, 30 July 2023
முன்னேர் ஆன முத்துலட்சுமி ரெட்டி
பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
பெண் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாவம் எனப் பெற்றோர் கருதிய காலம் அது. பத்து வயது முடிவதற்குள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். பகலில் வக்கணையாய் சமைத்துப் போட்டுக் கணவனின் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதும், இரவில் அவன் விரும்பும் போதெல்லாம் காமப்பசியைத் தீர்ப்பதும், ஆண்டு தோறும் குழந்தை பெற்றுத் தருவதும் அவளது வேலை என்றிருந்த காலக்கட்டம் அது.
Subscribe to:
Posts (Atom)