அந்தக் காலத்தில் அதாவது 1960 களில்
ஐந்தாம் வகுப்பில் சமூகம் என்று ஒரு பாடநூல் இருந்தது. அட்லஸ் புத்தக அளவில்
இருக்கும். அதில் ஒரு பாடம் அமெரிக்க நாடு பற்றியது. அப் பாடத்தில் நயாகரா
நீர்வீழ்ச்சி எனக் குறிப்பிட்ட ஒரு பத்தியும் ஒரு படமும் இருந்தது நன்றாக
நினைவிருக்கிறது. அதற்குப் பிறகு 52 வருடம் கழித்து
Tuesday, 30 June 2015
Sunday, 28 June 2015
விண்ணை முட்டும் கட்டடங்கள்
நியுஜெர்சி துறைமுகத்திலிருந்து
புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில்
நியுயார்க் மன்ஹட்டன் பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் காருக்கு ஓய்வு
கொடுத்தார் என் மாப்பிள்ளை சிவகணேஷ். வெளியில் வந்து ஒரு கட்டடத்தை அண்ணாந்து
பார்த்தேன்., என் தலை மேலிருந்த தொப்பி கீழே விழுந்தது.
Saturday, 27 June 2015
வியத்தகு விடுதலைச் சிலை
நியுயார்க்கிலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள
நியுஜெர்சிக்கு காரில் பயணித்து, அங்குள்ள படகுத் துறையிலிருந்து ஓர் இயந்திரப்
படகு மூலம் எல்லீஸ் தீவில் இறங்கினோம்.
Friday, 26 June 2015
கண்ணைக் கவரும் கடற்கரைகள்
ஒரு வழியாக வாஷிங்டன் நகரிடம் விடை
பெற்றுக்கொண்டு நியுயார்க் நகருக்கு இரவு பத்து மணி அளவில் வந்து சேர்ந்தோம்.
Thursday, 25 June 2015
எப்படி நம் நாடு உருப்படும்?
ஒரு வித்தியாசமான வழக்கம் என்னிடத்தில் உண்டு.
இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை ஆறு மணிக்கு முன்னர் எழுந்து விடுவது
என்பதுதான் அது. நாடு விட்டு நாடு வந்தும் இவ் வழக்கம் மாறவில்லை. அமெரிக்காவில்
இது கோடை காலத்தின் தொடக்கம்.
Sunday, 21 June 2015
வண்ணமிகு வாஷிங்டன் I
இரண்டு நாள்களாகவே மனத்தில் ஓர் இனம் புரியாத பரபரப்பு. 1983 ஆம் ஆண்டு பொம்மலாட்டப் பயிற்சிக்காக நம் நாட்டின் தலைநகர்
புதுதில்லிக்கு நான் சென்றபோது இருந்த பரபரப்பைவிட இது அதிகம். அமெரிக்கத் தலைநகர்
வாஷிங்டனுக்குச் செல்கிறோம் என்பதால் ஏற்பட்ட கூடுதல் பரபரப்பு.
Tuesday, 16 June 2015
உழைப்பு உயிரினும் ஓம்பப்படும்
உழைப்பால் உயர்ந்தவர்கள் அமெரிக்கர்கள் என்பதைப்
பல சமயங்களில் நான் கண்கூடாகப் பார்த்தேன். ஆண் பெண் வேறுபாடு இன்றி அனைவரும்
அர்ப்பணிப்பு உணர்வோடு உழைக்கிறார்கள்.
ஒரு நாள் காலை நடைப்பயிற்சியின்போது கண்ட
காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. வயதான முதியவர் அவர்., குறைந்தது எண்பது வயது
இருக்கலாம்.,
Sunday, 14 June 2015
இமயம் தொட்ட இணையர்
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
என்று
வழக்கப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுவார் பாரதியர். அமெரிக்காவுக்கு நான் வந்த
பின்னால்,
Friday, 12 June 2015
ஜுராசிக் பார்க் அன்றும் இன்றும்
1993 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம்
வள்ளி திரையரங்கில் ஜுராசிக் பார்க் படம் பார்த்ததை நேற்று டேலஸ் மாநகரில் பெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள சினிமார்க் என்னும்
மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கில் நின்று கொண்டு நினைத்துப் பார்த்தேன்.
அமெரிக்காவின் மறுபக்கம்
உலகில் பிறந்தவர் யாரும் பசியால் வாடுதல் கூடாது. உணவு, உடை, உறையுள் என்பவை
மனிதனின் பொதுவான அடிப்படைத் தேவைகள் என்றாலும், உணவுதான் மிக மிக அடிப்படையான
அவசியமான தேவையாகும்.
Thursday, 11 June 2015
தண்ணீர் விளையும் தோட்டம்
பரபரப்பான பெருநகரின் நடுவில்
இப்படி ஒரு கண்ணைக் கவரும், கருத்தைக் கவரும் இடமா என்று வியப்பில் உறைந்து
போனேன்.
Wednesday, 10 June 2015
ஒரு லட்டு ஒரு லட்சம்
அமெரிக்கா வந்து பத்து நாள்கள் ஆகிவிட்டன. எங்காவது
கோயில் இருந்தால் போகலாம் என்று தோன்றியது.
Monday, 8 June 2015
மானும் நானும்
ஒரு நாள் முழுவதும் அடர்ந்த காட்டில்
திரிந்தால் எப்படியிருக்கும்? காட்டு விலங்குகளைத் தொட்டுத் தழுவிக் கொஞ்சினால்
எப்படியிருக்கும்? பையில் உள்ள நொறுக்குத் தீனியை
கையில் எடுத்து நீட்ட, வரிக்குதிரை வந்து வாயை வைத்து உண்டால்
எப்படியிருக்கும்?
Friday, 5 June 2015
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
மதிய உணவுக்குப் பிறகு சூழல் வாய்க்கும் போதெல்லாம் இருபது நிமிடம்
தூங்குவதுண்டு. இன்றைக்கும் அப்படிதான் தூங்கலாம் என்று யோசித்தேன்.
Wednesday, 3 June 2015
எங்கெங்கு காணினும் வெள்ளமடா
சில நாள்களாக பெய்த பேய்மழையால் ஊரே
வெள்ளக்காடாகி விட்டது. அடடே! எங்கே என்று சொல்லவில்லயே
மரங்கள் வெட்டி மனை செய்குவீரே
மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே
மரங்கள் வெட்டி மனை செய்குவீரே
என்ற பாரதியாரின் பாடல் வரிகளில் முதல் வரியை நாம் எடுத்துக்கொண்டோம்.,
Monday, 1 June 2015
மழைக்கு ஒதுங்கினேன் மகளின் பல்கலைக் கழகத்தில்
விடாது மழை பெய்தாலும் அடாது வெயிலடித்தாலும்
செயல்படுவது எனது வழக்கம். இங்கே அமெரிக்காவில் அப்படியெல்லாம் முடியாது.
மாமழை தூற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
என்று மழையைப் போற்றிப் பாடினார் இளங்கோ
அடிகள். இங்கே அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்து மக்கள் மாமழை தூற்றுதும்
என்று வசைபாடுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)