இரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா
சென்று வந்து, பயணக்களைப்பு தீர்வதற்குள்ளாகவே மீண்டும் பள்ளிப்பணியில்
மூழ்கிவிட்டேன். தேங்கிக் கிடந்தக் கோப்புகள், சோம்பிக்கிடந்த மாணவர்கள்
அனைத்தையும் அனைவரையும் ஒழுங்குபடுத்த ஒரு மாத காலம் ஆயிற்று.
Monday, 30 November 2015
Sunday, 22 November 2015
பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாப்போம்
இப் பூவுலகு மிகப்பழமையானது.
பல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய பெருமை உடையது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன்
பாரம்பரியமும் கலாச்சாரமும் இரு கண்களைப் போன்றவை.
Monday, 16 November 2015
நான் விரும்பும் நன்னூல்
இங்கே நான் குறிப்பிடும் நூல் பவணந்தியார் எழுதிய நன்னூல் அன்று.
பேராசிரியர் இரா. மோகன் எழுதியுள்ள இலக்கியச் சால்பு என்னும் நூலே நான் விரும்பும்
நன்னூலாகும்.
Monday, 9 November 2015
வகுப்பறை வன்முறைகள்
என் மகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ்
பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டப்
பேற்றுக்காக ஆய்வு செய்கிறாள். அங்கு இளம் அறிவியல் பட்ட வகுப்பில் படிக்கும்
மாணவர்களுக்கு உயிரி தொழில்நுட்பப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியப் பணியும்
அவளுக்கு வாய்த்துள்ளது. அவளுக்கு இக்
கல்வி ஆண்டின் இறுதியில் முனைவர் பட்டப் பேறு கிடைக்கும். பிறகு
பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவோ ஆராய்ச்சி ஆய்வகங்களில் விஞ்ஞானியாகவோ
பணியேற்கலாம்.
Tuesday, 3 November 2015
துவரம்பருப்பு ஹைக்கூ
அப்பப்பா....ஹைக்கூ
கவிதை எழுதி எத்தனை மாதங்களாயிற்று! இப்போது துவரம்பருப்பு விலை உயர்வு என்னை
எழுதத் தூண்டியது. கவிஞனுக்கு எதுவும் பாடு பொருள் ஆகுமே!
இப்போது
புரிகிறதா
யார் பெரியவன்
என்று
கேட்டது
துவரம்பருப்பு.
மாப்பிள்ளை வருகிறாரே
என்ன ஸ்பெஷல்
துவரம்பருப்பு சாம்பார்!
கிராம் கணக்கில் வாங்குவது
தங்கம். இன்னொன்று?
து.பருப்பு
அப்பா: சொல்லுடா ...து.பருப்பு
பையன்: டு பருப்பு
அம்மா: சரியாத்தான் சொல்றான்
அம்மா விழி பிதுங்கினாள்
குழந்தை அடம் பிடித்தது
பருப்பு சாதம் கேட்டு.
கணவன் மனைவி சண்டை
நீ ஒரு துப்பு கெட்ட ஆம்பிளே
நகை உண்டா நல்ல து.பருப்பு உண்டா!
நீண்ட யோசனைக்குப் பின்
மனைவி சொன்னாள்:
2020 இல் இந்தியா துவரஞ்செடி வளர்ந்த நாடாக வேண்டும்.
வாக்கு வாதம் முற்றியது
நீ என்ன பிஸ்தாவா
நீ என்ன துவரம் பருப்பா?
வங்கி மேலாளர்
கண்டித்துச் சொல்லிவிட்டார்
லாக்கரில் து.பருப்பை வைக்கக் கூடாது.
கல்லூரி விடுதியில் கலாட்டா
என்ன பிரச்சனை --முதல்வர்
துவரம் பருப்பு சாம்பார் வேண்டும்.
எதிர்க் கட்சித் தலைவர் முழங்கினார்
ஆட்சி மாற்றம் உறுதி
துவரம்பருப்பு வாழ்க.
Subscribe to:
Posts (Atom)