Friday 29 May 2015

ஹலோ குட்மார்னிங்


   அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் பெரிய மகள் அருணாவும் மாப்பிள்ளை சிவாவும் வசிக்கிறார்கள். பெட்ஃபோர்ட் என்னும் பகுதியில் அமைந்துள்ள அவர்களது வளமனையிலிருந்து அதிகாலையில் நடைப்பயிற்சிக்காகப் புறப்பட்டேன்.
வரிசை வரிசையாக மூன்றடுக்குத் தொகுப்பு வீடுகள் அழகுற கட்டப்பட்டுள்ளன. எங்கு நோக்கினும் மரங்கள்., பசும்புல் தரைகள். தூய்மை தூய்மை எங்கு பார்த்தாலும் தூய்மை. கிழிந்த காகிதம், பாலித்தீன் பைகள் என்று எதையும் பார்க்க முடியவில்லை.

    சுத்தம் சோறு போடும் என்று நாம் சொன்னதோடு நிறுத்திக் கொண்டோம். ஆனால் இவர்கள் செயலில் காட்டுகிறார்கள்.

 அமெரிக்க நாட்டில் மனிதருக்கு அடுத்தபடியாக  நான் பார்த்த முதல் விலங்கினம் அணில்தான். அந்தக் காலைப் பொழுதில் மரங்களில் ஏறியும் இறங்கியும் குதித்தும் விளையாடின. இவை நம்மூர் அணில் போல இல்லை. பூனை அளவில் பெரிதாக இருக்கின்றன.

      எதிரில் தூரத்தில் ஒரு பெண்மணி கண்ணில் பட்டாள். என்னைக் கடந்து செல்லும்போது ஹலோ குட்மார்னிங் என்றாள். நானும் அவ்வாறே சொல்லி மேலே நடந்தேன். எதிரில் வந்த மற்றொருவர் ஹாய் என்று கையை உயர்த்திக் காட்டியபடி கடந்து சென்றார். இப்படியே நான் சந்தித்த அத்தனைபேரும் முன்பின் சந்தித்து அறியாத என்னை புன்னகைக்  காட்டி இன்சொல் கூறி வாழ்த்திச் சென்றது எனக்கு வியப்பாகவும் புதுமையாகவும் இருந்தது.

    நம்மூரில் ஒரே தெருவில் வசிப்பவர்கள் கூட பார்த்தும் பார்க்காத மாதிரி செல்வர். தன் ஆசிரியரைக் காணும் மாணவன் கண்டும் காணாமல் போவதைப் பார்த்திருக்கிறேன்.

     முன்பின் அறியாதவர்களிடத்திலும் இனியசொல் பேச வேண்டும் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னவர் நம்மூர் திருவள்ளுவர்.     யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொலர்(குறள் 94) என்று பதிவு செய்கிறார்.

    திருவள்ளுவர் கூறும் அறிவுரையை அமெரிக்கர் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள்.

      ஆனால், நாம்????


7 comments:

  1. Very good. Enjoy. After a long time the whole family is together in one location including son in law Sivaganesh.
    Bhuvana's US VISA made this possible. Determination of Shanthi won/ threatening to come to India to spend time with Bhuvana before going to Canada for higher studies.

    ReplyDelete
  2. தங்கள் பயணமும் அமெரிக்க அனுபவங்களும் அதை அழகுத் தமிழில் நீங்கள் விவரிக்கும் பாங்கும் அருமை.இனிமை.
    தங்கள் தமிழ்ப்பூ தொடர்ந்து மணக்கட்டும்

    ReplyDelete
  3. Very glad to hear that u r in US now. Ur words are true...Foreigners having a good habit of wishing others even to unknown people.We have to learn that good habit .ur writing style is awesome sir....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சார், வணக்கம். தங்களின் வெளிநாட்டு அனுபவங்களை எழுத்துருவில் காட்டியுள்ளீர்கள். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சார், வணக்கம். தங்களின் வெளிநாட்டு அனுபவங்களை எழுத்துருவில் காட்டியுள்ளீர்கள். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete