![]() |
blossomed 15.10.1931 withered 27.07.2015 |
உறுதிமிக்க வைரம்போல் உள்ளமதில்
உருவான அறிவியல் கலை எங்கே?
இறுதியாய் மறைந்துவிட்ட செய்தியாலே
இந்தியாவே கதறியழும் நிலை இங்கே.
தேசத்தின் பாசமிகு தலைமகனே
தென்றலே நீசென்ற தடம் எங்கே?
வாசத்தில் முல்லையென வாழ்ந்தவரே
வானத்தில் வசிக்கின்ற இடம் எங்கே?
பாதி உரை வழக்கம்போல் செவிகளிலே
பாலாகத் தேனாகப் பாய்ந்ததங்கே!
மீதி உரை முடியுமுன் ஒருநொடியில்
போதிமரம் திடுமென சாய்ந்ததங்கே!
சாதிக்கலாம் சாதிக்கலாம் எனச் சொன்ன
சான்றோன் அப்துல் கலாம் மறைந்தாலும்
மீதிக்கலாம் எனும்படியாய் இளைஞரெலாம்
சாதிப்பர் வேதனையில் உறைந்தாலும்!
-முனைவர் அ.கோவிந்தராஜூ,
கரூர்
(டாக்டர் அப்துல்கலாம்
அவர்களிடமிருந்து தேசிய விருது பெற்றவர்)
எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
ReplyDeleteஅப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...
ReplyDeleteகாலம் ஆனார் கலாம் - நம் எதிர்
ReplyDeleteகாலமானார் கலாம்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மனிதருள் மாணிக்கம் இவரே...
ReplyDeleteமறையும் நாள் வரையில்
சுற்றுப்பயணம்..
இளைஞர்கள் மத்தியில்
எப்பொழுதும் எழுச்சியுரை...
வாழ்க நீ எம்மான்..
வரலாறு உள்ளவரை
உன் பேர் புகழுடன் இருக்கும்...
😪😪😪😪😪😪😪
அன்பின் பேருவம், அமைதியின் இருப்பிடம். அனைவரும் விரும்பும் அன்புள்ளம். ஆற்றல் மிக்க அறிவியல் மாமேதை. இந்திய ஜனநாயகத்தின் தனிப்பெருந்தலைவர். இளைஞர்களின் எழுச்சி தீபம். இந்தியர்களின் கனவு நாயகன். இன்முகமே அடையாளம் காட்சிக்கு எளியவர் கடுஞ்சொல் உதிர்க்காதவர். இறவாப் புகழைப் பெற்றவர். இவரது பிறப்பு ஒரு சம்பவம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரம். இனி அவர் கூறிய வாக்கினை மனதில் இருத்தி இந்தியத் திருநாட்டை வல்லரசாக்க உழைக்க வேண்டும். அவர் காட்டிய நெறியில் செல்ல வேண்டும். அய்யா அவர்களின் ஆன்மா அமைதி பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ReplyDelete