அமெரிக்காவில் டெல்லாஸ் பகுதியில் ஓர் இந்து கோயில் உள்ளது. அது நம்மூர் கோயிலைப் போல் இல்லை. ஒரு திருமண மண்டபம் போல் காட்சி அளிக்கிறது.
Tuesday, 10 December 2024
Saturday, 30 November 2024
தண்ணீரில் செதுக்கிய சிலைகள்
நாம் கல்லில் சிலைவடித்தால் அமெரிக்கர் தண்ணீரில் சிலை வடிக்கின்றனர். தண்ணீரில் சிலை வடிக்க இயலுமா? இயலும் எனச் சொல்லி சாதித்துக் காட்டியுள்ளனர். ஒரு சிலையா இரு சிலையா நூறு சிலைகளை வடித்துக் கண்காட்சியாகக் காட்டிவிட்டனர்.
Gaylord Texon Resort என்பது அந்த இடத்தின் பெயர். வடக்கு டெக்சாஸ் மாநிலம்
டெல்லாஸில் உள்ளது. ஆளுக்கு இருபத்து ஐந்து டாலர் கட்டணம். நுழைவாயிலில் நின்ற ஒருவர்
ஒரு சிறப்பு அங்கியைத் தந்து அணியுமாறு சொன்னார். அது Parka எனப்படும் அதிகக் குளிரைத்
தாங்கும் சிறப்பு உடை. ஷூ அணியாமல் யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. நல்ல வேளையாக
நாங்கள் ஆண், பெண், குழந்தை உட்பட அனைவரும் ஷூ அணிந்து சென்றோம். கதவைத் திறந்து நடந்தால்
வழி தவறி வடதுருவத்திற்கு வந்தது போல குளிர் நிலவியது. அந்தப் பாதை சரிவாகச் சென்றது;
அது ஒரு பாதாள அறையை நோக்கிச் சென்றது. நடக்க முடியாமல் போகுமோ என அஞ்சும் அளவிற்கு
உடல் குளிரால் விறைத்தது.
அங்கே இருந்தவரிடம் வெப்பநிலை என்னவென்று கேட்டேன். ‘எட்டு டிகிரி ஃபாரன்ஹீட்’
என்றார். நான் அடிப்படையில் ஓர் இயற்பியல் பட்டதாரி என்பதால், ஒரு மனக்கணக்குப் போட்டுப்
பார்த்தேன்; அது மைனஸ் பதின்மூன்று டிகிரி சென்டிகிரேட்!
சுழியன் டிகிரி சென்டிகிரேட் என்றாலே தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்துவிடும். மைனஸ் பதின்மூன்று டிகிரி என்றால் கேட்கவா வேண்டும்? இப்போதுதான் புரிந்தது இவர்களால் தண்ணீரில் எவ்வாறு சிலை செதுக்க முடிகிறது என்று.
பனிக்கட்டிகளில் கண்ணைக் கவரும் வகையில் வண்ணச் சிலைகளை வடித்து வைத்திருந்தனர்.
ஆனால் அங்கு நிலவிய கடுங்குளிரில் நின்று நிதானமாகப் பார்த்து மகிழ இயலவில்லை. காமிராவை
எடுத்து என்னால் கிளிக் செய்ய முடியவில்லை. கையுறை அணியாமல் சென்றதால் விரல்களை இயக்க
இயலவில்லை. எனது பயணக் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கும் வலைப்பூ வாசகர்களை ஏமாற்றக்கூடாது
என்னும் எண்ணத்தில் ஒருவாறு சமாளித்துக் கொண்டு படம் எடுத்தேன்; பாதிக்குப் பாதியே
தேறின.
A 30 sec. video
இந்தக் கொடுமையான குளிரிலும் அங்கே ஒரு கடை இருந்தது. அங்கும் சிலர் தேநீர் அருந்தியபடி நின்றனர்!
என்னால் இருபது நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. விரைவாக -இல்லை
இல்லை- விறைப்பாக வெளியேறினேன், அவர்கள் கொடுத்த அங்கியைத் கழற்றித் தந்துவிட்டுப்
போதுமடா சாமி என நினைத்துக்கொண்டு கார் நிறுத்தகத்தை நோக்கி நடந்தேன். ஆனாலும் ஏதோ
ஒன்றைச் சாதித்த உணர்வும் உள்ளத்தில் தோன்றி மறைந்தது.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
Monday, 25 November 2024
என் உணர்வில் கலந்த சைக்கிள்
எங்கள் சொந்த ஊரான கூவத்தூரில் மிஞ்சிப் போனால் பத்து வீடுகளில் சைக்கிள் இருக்கும். ஒருவர் சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கிறார் என்றால் அவர் வசதியானவராகக் கருதப்பட்ட காலம்(1960) அது. சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதியான நிதிநிலை இருந்தும் எங்கள் அப்பா ஏனோ சைக்கிள் வாங்கவில்லை. அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
Saturday, 23 November 2024
சைவ உணவுக்குச் சரியான இடம்
அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் டெல்லாஸ் நகரில் ஏராளமான அசைவ உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் சைவ உணவு வகைகளும் கிடைக்கும். நாம் தக்காளிச் சோற்றை உண்ணும்போது பக்கத்தில் உள்ளவர் தந்தூரிக் கோழியை உண்பார். நிறைய சகிப்புத்தன்மை உள்ள சைவ உண்ணிகள் இங்கே சாப்பிடலாம். இத்தகைய உணவகங்களில் என்னால் உண்ண முடியும். ஆனால் என் துணைவியாருக்கு ஒத்து வராது. சுத்த சைவம்.
Monday, 18 November 2024
நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நடித்த நல்ல நாடகம்
எங்கள் உறவினர் வீட்டுக் குழந்தை படிக்கும் பள்ளியில்(Bear Creek School) நடந்த கலைவிழா ஒன்றைக் காண்பதற்காக நான், என் துணைவியார், மகள், மாப்பிள்ளை ஆகிய அனைவரும் சென்றோம்.
Saturday, 9 November 2024
இணைய வழியே வரும் இழப்புகள்
தாம் உழைத்துச் சேர்த்த பணத்தை இணையவழி மோசடியால் இழப்போர் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தாம் ஆசை ஆசையாய்ப் பெற்று வளர்த்த இளம் பிள்ளைகளை இழக்கும் சோகம் இணையவழியில் அரங்கேறுவதைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
Monday, 4 November 2024
அன்றில் பறவைகள் அமெரிக்கா சென்றன
இரண்டு மகள்கள் இரண்டு நாடுகளில் வாழ்வதால் எனக்கும் என் மனைவிக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வானில் பறப்பது வாடிக்கை ஆகிவிட்டது. என்னை Frequent flier என்று சொல்லி என் மாப்பிள்ளை கிண்டல் செய்வதும் உண்டு. இதுவரை நான் வானில் பறந்த அனுபவங்களை என் வலைப்பூவில் அவ்வப்போது மிக விரிவாக எழுதியுள்ளேன். அவற்றையும் அவற்றிற்கு வாசகர்கள் தந்த பின்னூட்டங்களையும் தொகுத்தால் ஒரு தனி நூலாகவே வெளியிடலாம்.
Friday, 1 November 2024
எங்கெங்கு காணினும் பேய்கள்
சென்ற வாரம் கனடா முழுவதும் ஒரே கலக்கலாக இருந்தது! கடுங்குளிர் நிலவிய போதிலும் பரவசமாகக் கொண்டாடினார்கள். உலகில் ஆவிகளைக் கொண்டாடும் நாடுகள் பலவாக உள்ளன. அவற்றுள் கனடாவும் ஒன்று. அக்டோபர் 31ஆம் தேதிதான் அவர்களுக்கு ஆலவின் எனப்படும் பேய்கள் தினம். Halloween Day என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.
Monday, 21 October 2024
மனமிருந்தால் மாற்றம் உண்டு
பயனுள்ள வாழ்வு, பகட்டான வாழ்வு. இவ்விரண்டில் இன்று பெரும்பாலோர் வாழ நினைப்பது பகட்டான வாழ்வே. இதுதான் இன்றைய இளைஞர்கள் மனத்திலே ஒரு கருத்தேற்றமாகத் திணிக்கப்படுகிறது.
Friday, 11 October 2024
கண்டறியாதன கண்டேன்
நம் நாட்டில் சாலையின் இடப்பக்கத்தில்(Keep Left) வாகனம் செல்ல வேண்டும். கனடா நாட்டில் வலப்பக்கத்தில்(Keep Right) செல்ல வேண்டும்.
நம் நாட்டில் வாகனத்தின் வலப்பக்கத்தில் ஓட்டுநர் அமர்ந்து ஓட்டுவார். இங்கே இடப்பக்கத்தில்(Left Hand Drive) அமர்ந்து ஓட்டுவார்.
Monday, 30 September 2024
ஆழ்வார் பாடலில் அறிவியல் நுட்பம்
அடிப்படையில் நான் இயற்பியல் படித்த அறிவியல் பட்டதாரி. பின்னர் முதுகலையில் தமிழைப் படித்துத் தமிழாசிரியராய் ஆனேன். எனவே என் சட்டைப் பையில் அறிவியல் என்னும் கண் கண்ணாடி எப்போதும் இருக்கும். அவ்வப்போது அதை அணிந்து கொண்டு தமிழில் அமைந்த பழம்பாடல்களைப் பார்ப்பதுண்டு.
Thursday, 26 September 2024
தழுவுதல் என்பதும் தகைசால் பண்பே
வழக்கம்போல் இந்த வாரமும் கனடா நாட்டில் நாங்கள் வாழும் பகுதியில் உள்ள உள்ளூர் நூலகத்திற்குச் சென்றேன். படிப்பதற்காகச் சில நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். வீட்டுக்குச் சென்று தின்னலாம் என்று கூறி அப்பா கடையில் வாங்கித் தந்த தின்பண்டத்தில் அங்கேயே சிறிதை வாயிலே போட்டுச் சுவைக்கின்ற சிறு பிள்ளையைப்போல் அவற்றுள் ஒரு நூலை அங்கேயே அமர்ந்து புரட்டினேன். சிறிது நேரம் ஆனதும் அது என்னைப் புரட்டிப் போட்டது.
Tuesday, 27 August 2024
மழலையர் விரும்பும் மாபெரும் நூலகம்
செந்தமிழ் நாடு என்று சொல்லக் கேட்டவுடன், காதிலே தேன் வந்து பாய்ந்ததாகப் பாடுவான் பாரதி. எனக்கும் அப்படியே. கனடா நாட்டு நூலகம் ஒன்றைப் பார்த்தவுடன் கட்டுக் கரும்பை வெட்டித் தின்ற உணர்வு ஏற்பட்டது.
Sunday, 14 July 2024
இருமல் இனிது
இருமல் இனிது, தும்மல் இனிது, தலை வலி இனிது. இப்படியெல்லாம் எனக்கு எழுதத் தோன்றுகிறது என்றால் அதற்குக் காரணம் பாரதியார்தான். நீர் இனிது, காற்று இனிது என எழுதிச் சென்றவர், தொடர்ந்து தீ இனிது, மின்னல் இனிது, இடி இனிது என எழுதினார்!
Wednesday, 3 July 2024
வியக்க வைத்த விமான அணி வகுப்பு
கடந்த ஒரு வாரமாகவே கனடா நாள்(Canada Day) குறித்த பேச்சு காதில் விழுந்து கொண்டிருந்தது. Talk of the town என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அப்படியொரு பேச்சு அது.
Monday, 24 June 2024
வான் வழியே வலம் வந்தோம்
சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையம். 21.6.2024 வெள்ளி நள்ளிரவு 12.20 மணி. மின் விளக்குகள் இரவைப் பகலாகக் காட்டுவதில் போட்டியிட்டன. நாங்கள் பயணம் செய்ய வேண்டிய கத்தார் வான்வழி நிறுவனத்தின் விமானம் நான்கு மணி நேரம் கழித்துப் புறப்படும்.
Monday, 6 May 2024
Thursday, 2 May 2024
உலகப் பெருநூல்
கிறித்துவர்களின் பைபிள் எந்தத் தாளில் அச்சடிக்கப்படுகிறதோ அந்தத் தாளில் அமெரிக்காவில் அச்சடித்து வெளிவந்த முதல் நூல் இது எனலாம்.
Tuesday, 9 April 2024
வாக்காளர் விழிப்புணர்வு வெண்பா
வாக்காளர் விழிப்புணர்வு பெறும் வகையில் என் பங்குக்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எனப் பத்து வெண்பாக்களை எழுதி புலன வழியே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. அவற்றை இப்போது வலைப்பூ வாசகரிடையே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
Monday, 1 January 2024
நாளும் கேட்போம் நலந்தரும் சொல்லை
‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்னும் வள்ளுவரின் கூற்று, செவிடர் செவியில் ஊதிய சங்காகப் போனதோ என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழும்.