மறக்க இயலாத அமெரிக்கப் பயணம்
நிறைவுக்கு வருகிறது. நேற்று காலையில் டேலஸ் ஃபோர்ட்வொர்த் விமான நிலையத்தில்
வந்து இறங்கியது போல் உள்ளது. ஆனால் அறுபத்தைந்து நாள்கள் இறக்கை கட்டிப் பறந்து
விட்டதாகத் தோன்றுகிறது.
Thursday, 30 July 2015
Tuesday, 28 July 2015
தென்றலே நீசென்ற தடமெங்கே?
![]() |
blossomed 15.10.1931 withered 27.07.2015 |
உறுதிமிக்க வைரம்போல் உள்ளமதில்
உருவான அறிவியல் கலை எங்கே?
இறுதியாய் மறைந்துவிட்ட செய்தியாலே
இந்தியாவே கதறியழும் நிலை இங்கே.
தேசத்தின் பாசமிகு தலைமகனே
தென்றலே நீசென்ற தடம் எங்கே?
வாசத்தில் முல்லையென வாழ்ந்தவரே
வானத்தில் வசிக்கின்ற இடம் எங்கே?
பாதி உரை வழக்கம்போல் செவிகளிலே
பாலாகத் தேனாகப் பாய்ந்ததங்கே!
மீதி உரை முடியுமுன் ஒருநொடியில்
போதிமரம் திடுமென சாய்ந்ததங்கே!
சாதிக்கலாம் சாதிக்கலாம் எனச் சொன்ன
சான்றோன் அப்துல் கலாம் மறைந்தாலும்
மீதிக்கலாம் எனும்படியாய் இளைஞரெலாம்
சாதிப்பர் வேதனையில் உறைந்தாலும்!
-முனைவர் அ.கோவிந்தராஜூ,
கரூர்
(டாக்டர் அப்துல்கலாம்
அவர்களிடமிருந்து தேசிய விருது பெற்றவர்)
Saturday, 25 July 2015
உயிர் காக்கும் உன்னதப் பணி
உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
என்பது திருமூலரின் திருவாக்கு. மரபியல்(Hereditary) சார்ந்த, வாழ்வியல்(Life style) சார்ந்த
நோய்கள்தாம் எத்தனை எத்தனை! இடும்பைக்கே கொள்கலம் உடம்பு என்பார்
திருவள்ளுவர்.(குறள் 1029)
Wednesday, 22 July 2015
இந்த நிமிடம் இனியது
Monday, 20 July 2015
சாலை ஒழுக்கம்
நம் நாட்டில் சாலைகளில் வாகனங்களை
ஓட்டும்போது இடது புறம் செல்க (Keep Left) என்பது விதி. ஆனால் இங்கே Keep Right என்பதுதான் அடிப்படையான சாலை விதி. இந்த ஆங்கிலத் தொடருக்கு சரியாகச் செய்
என்றும் பொருள் உண்டு. ஆம். எனக்குத் தெரிந்தவரையில் அமெரிக்காவில் எல்லோரும் சாலை விதிகளை மிகச் சரியாகக்
கடைப்பிடிக்கிறார்கள்.
Thursday, 16 July 2015
நாசாவும் பீசாவும்
இந்தியாவின் தோசாவும் அமெரிக்காவின்
பீசாவும் உலகப் புகழ் பெற்றவை. எப்படி நம்மூரில் வகை வகயான தோசைகள் உண்டோ அப்படி
இங்கே வகை வகையான வண்ண மயமான பீசாக்கள் உண்டு. அமெரிக்காவின் தேசிய உணவு என்று
சொல்லத்தக்க வகையில் பீசா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
Tuesday, 14 July 2015
வணக்கம் ஹூஸ்டன்
முன் ஒரு சமயம் வெள்ளம் புயல்
அறிவிப்பின் காரணமாக கை கூடாமல் போன ஹூஸ்டன் பயணம் என் மகள் மற்றும் மாப்பிள்ளையின்
பெருமுயற்சியால் மீண்டும் வாய்த்தது.
Saturday, 11 July 2015
அனைவரும் அணுகும் அரசுப் பள்ளிகள்
நான் கடந்த 52 ஆண்டுகளாக
பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? ஒரு சிறிய கணக்கு.
எனக்கு இப்போது வயது 63. ஏழாம் வயது தொடக்கத்தில்தான் என்னைப் பள்ளியில்
சேர்த்தார்கள். நடுவில் ஐந்து ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு. 63-(6+5)=52.
Thursday, 9 July 2015
மரங்களை மதிக்கும் மனிதர்கள்
எங்கள் வீட்டுக்கு முன்னால் மூன்று
புளிய மரங்கள் இருந்தன. சிறு வயதில் அந்த மரங்களின் மீது ஏறி விளையாடுவேன். அம்
மரங்கள், அவற்றில் கூடி வாழ்ந்த காக்கை, குருவிகள் எல்லாம் எனது தோழர்கள். எங்கள்
கம்பங்கொல்லைக்குப் போனால் அங்கே இருந்த மாமரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டுதான்
கம்பங்கொல்லையைக் காவல் காப்பேன்.
Wednesday, 8 July 2015
இது படமல்ல., பாடம்
இன்று காலையில்
மேற்கொண்ட நடைப் பயிற்சியின்போது சென்னை தாம்பரத்தில் வசிக்கும் எனது இனிய நண்பர்
நீதிபதி புகழேந்தி அவர்களுடன் தொலைப் பேசியில் பேசினேன்.
Monday, 6 July 2015
எங்கெங்கு காணினும் எந்திரன்
எல்லாம் இயந்திர மயமாகி வரும் காலம்
இது. இதற்குக் காரணங்கள் பலவாக உள்ளன. இயந்திரங்களுக்கும், கணினிகளுக்கும்,
ரோபோக்களுக்கும் இரவு பகல் வேறுபாடு கிடையாது. அவை எப்பொழுதும் ஓய்வின்றி ஒரே
மாதிரியாகச் செயல்படும் தன்மையுடையன. அவை இலஞ்சம் கேட்பதில்லை. ஊதிய உயர்வு,
சங்கம் போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லை.
Saturday, 4 July 2015
துப்பாக்கி தேசம்
பொதுவாக மதிய உணவுக்குப் பிறகு பகல்
தூக்கத்தைத் தவிர்ப்பதற்காக கொஞ்ச நேரம் டி.வி. பார்ப்பதுண்டு. ஆனால் இன்று பொழுது
சரியாக விடிவதற்குள் தொலைக்காட்சியைப் பார்த்துத் தொலைத்தேன். HBO சேணலில் ஒளிபரப்பான ஒரு ஆவணப் படம்
(Documentary
film) என்னை சோபாவின்
விளிம்பில் உட்கார வைத்துவிட்டது.
Thursday, 2 July 2015
பெண்மை வாழ்க
இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் நான் நானாக பணிநிறைவு பெற்றுக்கொள்ளும் நாள்
வரும். அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த இரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா வருகை
அமைந்துள்ளது.
Wednesday, 1 July 2015
போற்றுதற்குரிய பொது நூலகம்
சில வாரங்களுக்கு முன்னால் என்
மகள் அருணா படித்துக் கொண்டிருக்கும் டெக்சாஸ் பல்கலைக்கழகம்- ஆர்லிங்டன் நூலகத்திற்குச்
சென்றிருந்தேன். அதைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை நீங்கள் படித்திருக்கலாம்.
பல்கலைக்கழக நூலகங்கள் சரி, பொது நூலகம் எப்படி உள்ளது எனக் கேட்டு சில வாசகர்கள் எனக்கு
மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)