Wednesday, 30 December 2015

குடி என்னும் குன்றா விளக்கம்

அமிழ்தினும் இனிய அருமை மகள் அருணாவுக்கு,

   வாழ்க வளமுடன். இன்று உன் பிறந்த நாள். நானும் உன் அம்மாவும் பிறந்ததும் இந் நாளில்தானே? குழப்பமாக உள்ளதா? அப்பா என்றும் அம்மா என்றும் புதிய அவதாரம் எடுத்தது அன்றுதானே? அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

Monday, 28 December 2015

மதுரை மாநகரில் மாபெரும் விழா


  பேராசிரியர் மோகனின் இலக்கிய அமுதம், பேராசிரியர் நிர்மலா மோகனின் மோகனம், கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ முதற்றே உலகு, அடியேனின்  அன்புள்ள அமெரிக்கா ஆகிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா 27.12.15 அன்று மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Saturday, 19 December 2015

அலைமோதும் அரும்புகள்

   நான் முதல்வராகப் பணியாற்றும் பள்ளியில் வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ் மிஸ் யெஸ் மிஸ் என்று குழந்தைகள் சொல்ல ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்துமிஸ் எங்கம்மா செத்துப் போயிட்டாங்கஎன்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.

Sunday, 13 December 2015

உதிரும் மொட்டுகள்

   காலை  நாளிதழை விரித்ததும் என் கண்ணில் பட்ட அந்தச் செய்தி என்னைக் கதிகலங்கச் செய்துவிட்டது. சந்தித்த அத்தனை பேரும் அந்தச் செய்தி குறித்தே பேசினார்கள். ஆங்கில நாளிதழிலும் அந்தச் செய்தி வந்திருந்தது.

Monday, 7 December 2015

மணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா?

  ன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்; பை நிறைய சம்பளம்; பெங்களூரில் சொந்த வீடு; வசதிக்கும் குறைவில்லை; விடுகிற மூச்சை நிறுத்தினாலும் நிறுத்துவார் எழுதுவதை நிறுத்த மாட்டார்.

Friday, 4 December 2015

கொடுப்பார் உள்ளார் கொள்வார் இல்லை

    தேசியப் பேரிடர் என அறிவிக்கும் அளவிற்குத் தமிழ் நாட்டில் வெள்ளத்தின் பாதிப்புகள் மிகக் கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும் கடலோர மவட்டங்களில் வாழும் மக்கள் வாரக்கணக்கில் வெள்ள நீரால் சூழப்பட்டுப் பரிதவிக்கின்றனர்.

Monday, 30 November 2015

இலக்கிய இணையரின் இல்ல நூலகம்

    இரண்டு மாத விடுப்பில் அமெரிக்கா சென்று வந்து, பயணக்களைப்பு தீர்வதற்குள்ளாகவே மீண்டும் பள்ளிப்பணியில் மூழ்கிவிட்டேன். தேங்கிக் கிடந்தக் கோப்புகள், சோம்பிக்கிடந்த மாணவர்கள் அனைத்தையும் அனைவரையும் ஒழுங்குபடுத்த ஒரு மாத காலம் ஆயிற்று.

Sunday, 22 November 2015

பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாப்போம்

         இப் பூவுலகு மிகப்பழமையானது. பல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய பெருமை உடையது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பாரம்பரியமும் கலாச்சாரமும் இரு கண்களைப் போன்றவை.

Monday, 16 November 2015

நான் விரும்பும் நன்னூல்

   இங்கே நான் குறிப்பிடும் நூல் பவணந்தியார் எழுதிய நன்னூல் அன்று. பேராசிரியர் இரா. மோகன் எழுதியுள்ள இலக்கியச் சால்பு என்னும் நூலே நான் விரும்பும் நன்னூலாகும்.

Monday, 9 November 2015

வகுப்பறை வன்முறைகள்

     என் மகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி  பட்டப் பேற்றுக்காக ஆய்வு செய்கிறாள். அங்கு இளம் அறிவியல் பட்ட வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு உயிரி தொழில்நுட்பப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியப் பணியும் அவளுக்கு வாய்த்துள்ளது. அவளுக்கு  இக் கல்வி ஆண்டின் இறுதியில் முனைவர் பட்டப் பேறு கிடைக்கும். பிறகு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவோ ஆராய்ச்சி ஆய்வகங்களில் விஞ்ஞானியாகவோ பணியேற்கலாம்.

Tuesday, 3 November 2015

துவரம்பருப்பு ஹைக்கூ


அப்பப்பா....ஹைக்கூ கவிதை எழுதி எத்தனை மாதங்களாயிற்று! இப்போது துவரம்பருப்பு விலை உயர்வு என்னை எழுதத் தூண்டியது. கவிஞனுக்கு எதுவும் பாடு பொருள் ஆகுமே!

இப்போது புரிகிறதா
யார் பெரியவன் என்று
கேட்டது துவரம்பருப்பு.

மாப்பிள்ளை வருகிறாரே
என்ன ஸ்பெஷல்
துவரம்பருப்பு சாம்பார்!

கிராம் கணக்கில் வாங்குவது
தங்கம்.  இன்னொன்று?
து.பருப்பு

அப்பா: சொல்லுடா ...து.பருப்பு
பையன்: டு பருப்பு
அம்மா: சரியாத்தான் சொல்றான்

அம்மா விழி பிதுங்கினாள்
குழந்தை அடம் பிடித்தது
பருப்பு சாதம் கேட்டு. 


கணவன் மனைவி சண்டை
நீ ஒரு துப்பு கெட்ட ஆம்பிளே
நகை உண்டா நல்ல து.பருப்பு உண்டா!

நீண்ட யோசனைக்குப் பின்
மனைவி சொன்னாள்:
2020 இல் இந்தியா துவரஞ்செடி வளர்ந்த நாடாக வேண்டும்.

வாக்கு வாதம் முற்றியது
நீ என்ன பிஸ்தாவா
நீ என்ன துவரம் பருப்பா?

வங்கி மேலாளர்
கண்டித்துச் சொல்லிவிட்டார்
லாக்கரில் து.பருப்பை வைக்கக் கூடாது.

கல்லூரி விடுதியில் கலாட்டா
என்ன பிரச்சனை  --முதல்வர்
துவரம் பருப்பு சாம்பார் வேண்டும்.

எதிர்க் கட்சித் தலைவர் முழங்கினார்
ஆட்சி மாற்றம் உறுதி

துவரம்பருப்பு வாழ்க.

Saturday, 31 October 2015

நாடாது நட்டலின் கேடில்லை

அறிவும் ஆற்றலும் உடைய அன்பு மகள் புவனாவுக்கு,

   நலம். நலமே சூழ்க. இப்போது நீ வசிக்கும் நாட்டில் தாங்க முடியாத குளிர் என்று உன் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தாய். இப்போது பருவ நிலை எப்படி உள்ளது? கொடும் குளிரைத் தாக்குப் பிடிக்கக்கூடிய ஆடைகளை அணிந்துகொள்.

    இன்று உன் பிறந்த நாள். முதலில் உனக்கு அம்மாவும் நானும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Tuesday, 20 October 2015

நா காக்கும் நற்பண்பு

   இடம் பொருள் சூழல் அறிந்து பேச வேண்டும் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். யா காவாராயினும் நா காக்க என்று என் பூட்டாதி பூட்டன் வள்ளுவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தீப்புண்ணைவிட நாப்புண் மோசமானது என அவர் மேலும் சொன்னது என் நினைவுக்கு வருகிறது.

Monday, 12 October 2015

பார் வியக்கும் பதிவர் திருவிழா

   என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மன நிலையில் சென்ற நான் நடந்த நிகழ்வுகளைக் கண்டு வியந்து போனேன். முகம் தெரியாத பதிவர்களை ஒன்று சேர்ப்பது என்பது பகீரத முயற்சிதான்.

Monday, 5 October 2015

வான் புகழ் கொண்ட வலைப் பதிவர்


  
   வலைப் பூ, வலைத்தளம், வலைப் பதிவர், மின் தமிழ், இணையத் தமிழ் போன்ற சொற்றொடர்கள் தமிழின் வரவுக் கணக்கில் வைக்கத்தக்கத் தகுதியைப் பெற்றுவிட்டன. வலைப் பதிவர் என்பதில் செருக்கும் மிடுக்கும் கொள்ளத் தொடங்கிவிட்டோம். ஒரு புதிய அங்கீகாரம் நமக்குக் கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. வண்டமிழ் இலக்கிய வரலாற்றில் இனி வலைப் பூக்கள் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புதிய பகுதியைச் சேர்க்க வேண்டிய காலம் வந்து விட்டது.

Wednesday, 30 September 2015

வீழினும் வேங்கையென எழுகவே!

  இளமையிலே சோம்பிநீ இருக்கலாமா?
    வளமையிலே வாழ்வதற்கு மறுக்கலாமா?
இளமயிலே!  சோம்பிநீ இருக்கலாமா?
   வளமயிலே!  வாழ்வதற்கு மறுக்கலாமா?

இளந்தமிழில் இனிதாகப் பேசிடவும்
   இயல்பாகப் பிழையின்றி எழுதிடவும்
இளமையிலே விட்டுவிட்டால் படியுமா?
   முதுமையிலே முயன்றாலும் முடியுமா?

உறங்கிக் கிடந்தால் இந்நாளில்
        ஊரே சிரிக்கும் பின்னாளில்
பிறந்ததும் வாழ்வதும் எதற்காக?        
        பெரும்புகழ் பெறுதல் அதற்காக!  
               

தொலைக்காட்சி இப்போது இனிக்கும்
           தொலைந்துவிடும் எதிர்காலம் கசக்கும்!
அலைப்பேசி உனை ஈர்த்து மயக்கும்
            அடுக்கடுக்காய் தீமைகளைப் பயக்கும்! 


இளங்காலை நேரத்திலே எழுவாய்
            இனிதாக இறைவனைத் தொழுவாய்
வளங்காண நாள்தோறும் படிப்பாய்
            வாழ்வினிலே சாதித்து முடிப்பாய்!

துடிப்புடன் செயலாற்று துன்பமிலை
    துணிந்திடு படிப்பதற்கே இன்றுமுதல்!
விடிந்ததும் இந்நாட்டின் தலைவன் நீ
    வீழினும் வேங்கையென எழுகவே!
                                     முனைவர் அ.கோவிந்தராஜூ
 ----------------------------------------------------------------------------------------------------------------------

 உறுதி மொழி
1. இது எனது சொந்தப் படைப்பாகும்
          2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
            இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்      
            போட்டிகள் 2015 (வகை 5 மரபுக் கவிதை) க்காகவே                எழுதப்பட்டது.

          3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
            வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்படமாட்டாது.

             
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------           

Monday, 28 September 2015

பெண் என்னும் பெருஞ்செல்வம்

    இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது!. ஆக உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை இப்போது எப்படி உள்ளது?

Monday, 21 September 2015

இலக்கை அடைய இனிமுயல் வாரே!

வளரிளம் சிறுமியர் வகைவகை யான
இளமைக் கனவில் இன்புற் றிருப்பர்
கண்டது காட்சி கொண்டது கோலம்
கண்டதை எண்ணிக் கருத்தழி வார்கள்
வளரிளம் சிறுவர்  வயதில் என்றும்
இளமைக் குறும்பு இயல்பாய் இருக்கும்
கண்டதைக் கிறுக்கி கவிதை என்பர்
உண்பதை மறுத்து உறங்கிடு வாரே!

பள்ளி வயதில் கொள்ளும் காதல்
பாலினக் கவர்ச்சி பிறிதொன் றில்லை
பள்ளி வயதில் காதல் கொள்ளல்
கொள்ளி யால்தலை வாரல் ஒக்கும்.
 பள்ளிப் பருவம் துள்ளும் பருவம்
கொள்ளி நெருப்பாம் காதலில் சிக்கி
பெற்றோர்  வருந்தி பெருந்துயர்  எய்த
கற்றலில் தாழ்ந்து கதிகலங் குவாரே!

 பள்ளிசெல் வயதில் காதல் தீது
காதல் செய்யின் மோதல் நிகழும்
மோதலின் பின்னே சாதலும் உண்டு
ஆதலால் பள்ளிக் காதல் தவறே! 
அவர்களை அழைத்து அருகில் அமர்த்தி
தவத்தொடு மூச்சுப் பயிற்சி யளித்து
இலக்கை அடைய இதுவழி என்றிட
இலக்கை அடைய இனிமுயல் வாரே!

 -    முனைவர் அ.கோவிந்தராஜூ


------------------------------------------ உறுதி மொழி---------------------------------------------------------------

             1. இது எனது சொந்தப் படைப்பாகும்
            2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
                 இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்       
                போட்டிகள் 2015 வகை 5 போட்டிக்காகவே எழுதப்பட்டது.

              3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
                   வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்பட
                    மாட்டாது.            



Sunday, 20 September 2015

காலம் எல்லாம் குறள்வழி நிற்க

என்னால் முடியுமெனும் எண்ணம் வேண்டும்
            ஏன்முடி யாதென எண்ணல் வேண்டும்
முன்னேற வேண்டுமென முழுதாய் எண்ணி
         முனைப்போடு முயன்று நடத்தல் வேண்டும்
நன்னெறி சிந்தனை நல்வழி காட்டும்
          நற்செயல் செய்க., நானிலம் போற்றும்
தன்னால் நடக்கும் தலைவிதி என்று
         தயங்கி நின்றால் தவறி வீழ்வாய்!

காலம் கருதிநீ கருத்துடன் பணிசெய்தால்
        ஞாலம் கைகூடும் நவின்றார் வள்ளுவரும்
பாலம் எனும்படியாய் பலகுறள் இங்கிருக்க
        பாவம்! ஏனப்பா பரிதவித்து நிற்கின்றாய்?
ஓலம் ஒப்பாரி ஒருபோதும் உதவாது
        ஓரடி முன்வைத்தால் ஒருகாத வழிதெரியும்!
ஆலம் விழுதென அவனியைத் தாங்கும்
         ஆற்றல் இருப்பது உனக்கே புரியும்!

வெற்றி வந்தால் பெற்றுக் கொள்க
        வீழ்ந்து விட்டால் கற்றுக் கொள்க
கற்க விரும்பிடின் இளமையில் கற்க
        காலம் எல்லாம் குறள்வழி நிற்க
     நெற்றி வியர்வை நிலத்தில் வீழ
              நல்லுடல் பயிற்சி நாளும் செய்க!
    பற்பல மொழிகள் கற்றிடல் தெம்பு
              பைந்தமிழ் மொழியே உயிரென நம்பு!

                           -முனைவர் அ.கோவிந்தராஜூ

-----------------------------------------------------------------------------------------------------------------------
                          உறுதி மொழி

..:               1. இது எனது சொந்தப் படைப்பாகும்

         2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
            இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்       
           போட்டிகள் 2015-வகை 5 மரபுக் கவிதைப் போட்டிக்காகவே
            எழுதப்பட்டது.

        3.இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு வெளிவரும் 
          வரை இப்படைப்பு வேறு எந்த இதழுக்கும் அனுப்பப்பட    மாட்டாது.

Thursday, 17 September 2015

வேலியே பயிரை மேய்ந்தது

  பண்டைக் காலத்தில் வாழ்ந்த சிபி சக்கரவர்த்தியை உங்களுக்குத் தெரியும். வேடன் ஒருவனிடமிருந்து தப்பித்துத் தன்னிடம் அடைக்கலம் என ஒரு புறா வந்தபோது அவர் அதைக் காப்பாற்றிய விதமும் உங்களுக்குத் தெரியும்.

Friday, 4 September 2015

ஆசிரியர்களைக் கொண்டாடிய அரும்புகள்

    ஆசிரியர் தினத்தில் மாணாக்கச் செல்வங்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். காலையில் பள்ளிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் குழந்தைகள் வந்து சூழ்ந்து கொண்டனர்.

Saturday, 29 August 2015

சிந்தை கவர்ந்த சிவா

    கணினித் துறையில் ஒரு புரட்சி செய்ய, ஒரு கருப்பு நிலா மும்பை நகரில் 1963 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதியன்று உதித்தது. இணைய வரலாற்றில் இமெயில் என்னும் புதிய மின்னஞ்சல் முறையைக் கண்டுபிடித்து அமெரிக்க நாட்டின் அரசிடமிருந்து காப்புரிமையைப் பெறப்போகும் குழந்தை இது என தந்தை வெள்ளயப்ப அய்யா துரைக்கும் தெரியாது., தாயார் மீனாட்சி அய்யா துரைக்கும் தெரியாது.

Saturday, 15 August 2015

விடுதலை உணர்வை விதைப்போம்

    1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் பேறு வாய்க்கப் பெற்றவன் நான்.

   கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் விடுதி மாணவர்கள் சிலரும் விருப்பமுள்ள பிற மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரும் சேர்ந்து கொடியேற்றிக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

Saturday, 8 August 2015

படித்தால் மட்டும் போதுமா?

  இன்றைய(7.8.15) இந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தி ஒன்றைப் படித்து  முடித்ததும் இந்தியாவில் வழங்கப்படும் கல்வி மீதிருந்த எனது நம்பிக்கை தவிடுபொடி ஆகிவிட்டது.

Thursday, 30 July 2015

மறப்பது இலமே

   மறக்க இயலாத அமெரிக்கப் பயணம் நிறைவுக்கு வருகிறது. நேற்று காலையில் டேலஸ் ஃபோர்ட்வொர்த் விமான நிலையத்தில் வந்து இறங்கியது போல் உள்ளது. ஆனால் அறுபத்தைந்து நாள்கள் இறக்கை கட்டிப் பறந்து விட்டதாகத் தோன்றுகிறது.

Tuesday, 28 July 2015

தென்றலே நீசென்ற தடமெங்கே?


blossomed 15.10.1931
withered    27.07.2015 


உறுதிமிக்க வைரம்போல் உள்ளமதில்
   உருவான அறிவியல் கலை எங்கே?
இறுதியாய் மறைந்துவிட்ட செய்தியாலே
   இந்தியாவே கதறியழும் நிலை இங்கே.

தேசத்தின் பாசமிகு தலைமகனே
   தென்றலே நீசென்ற தடம் எங்கே?
வாசத்தில் முல்லையென வாழ்ந்தவரே
   வானத்தில் வசிக்கின்ற இடம் எங்கே?

பாதி உரை வழக்கம்போல் செவிகளிலே
   பாலாகத் தேனாகப் பாய்ந்ததங்கே!
மீதி உரை முடியுமுன் ஒருநொடியில்
   போதிமரம் திடுமென சாய்ந்ததங்கே!

சாதிக்கலாம் சாதிக்கலாம் எனச் சொன்ன
   சான்றோன் அப்துல் கலாம் மறைந்தாலும்
மீதிக்கலாம் எனும்படியாய் இளைஞரெலாம்
   சாதிப்பர் வேதனையில் உறைந்தாலும்!
           
            -முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்
(டாக்டர் அப்துல்கலாம் அவர்களிடமிருந்து தேசிய விருது பெற்றவர்)
          


Saturday, 25 July 2015

உயிர் காக்கும் உன்னதப் பணி

    உடம்பால் அழியின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் திருவாக்கு. மரபியல்(Hereditary) சார்ந்த, வாழ்வியல்(Life style) சார்ந்த நோய்கள்தாம் எத்தனை எத்தனை! இடும்பைக்கே கொள்கலம் உடம்பு என்பார் திருவள்ளுவர்.(குறள் 1029)

Wednesday, 22 July 2015

இந்த நிமிடம் இனியது

   
   நிகழ் காலத்தில் வாழுங்கள் என்று சொன்னார் நம் நாட்டின் சுவாமி சச்சிதானந்தா அவர்கள். அவர் எழுதியுள்ளThe Golden Present என்னும் நூலை அவசியம் படிக்க வேண்டும். அவர் சொன்னதை நாம் கேட்டோமா? இப்படி எல்லாம் ஆகிவிட்டதே என்று அதையே நினைத்து இறந்த காலத்தில் வாழ்கிறோம் அல்லது கற்பனையாகக் கோட்டைக் கட்டி எதிர்காலத்தில் வாழ்கிறோம்.

Monday, 20 July 2015

சாலை ஒழுக்கம்

   நம் நாட்டில் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது இடது புறம் செல்க (Keep Left) என்பது விதி. ஆனால் இங்கே Keep Right என்பதுதான் அடிப்படையான சாலை விதி. இந்த ஆங்கிலத் தொடருக்கு சரியாகச் செய் என்றும் பொருள் உண்டு. ஆம். எனக்குத் தெரிந்தவரையில் அமெரிக்காவில் எல்லோரும்  சாலை விதிகளை மிகச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள்.