Tuesday 27 August 2019

அமேசான் காடும் அணையாத் தீயும்


    இயற்கையில், இயற்கையின் செயல்பாடுகளில் எப்பொழுதும் ஓர் ஒழுங்கும் ஒத்திசைவும்  இருக்கும். சென்ற நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் அந்த ஒழுங்கைக் கண்டு இரசித்தார்கள். அந்த ஒழுங்குக்கு ஊனம் நேராத வண்ணம் வாழ்ந்து மறைந்தார்கள்.
   சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லிவிடுகிறேன்.

Tuesday 20 August 2019

உலக ஒளிப்பட நாள் 2019



   காலையில் நடைப்பயிற்சி என்றாலும் தோளில் கேமரா தொங்கியபடிதான் நடப்பேன். ஆங்காங்கே நின்று சுற்றிலும் கண்ணில் படும் அரிய காட்சிகளைப் படம் பிடிப்பேன். சில படங்கள் என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளே. எழுத்தில் வடிக்காமல் ஒளித் தூரிகையால் வடிக்கப்பட்ட அந்த அழகிய கவிதைகள் சொல்லும் செய்திகள் எத்தனை! எத்தனை!

Friday 2 August 2019

தமிழில் பேசிய தருண் விஜய்


   உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்கள் தன் ஆங்கிலப் பேச்சின் நடுநடுவே தமிழில் பேசி கல்லூரி மாணவர்களின் கைதட்டலைப் பெற்றார். அம்மா செய்யும் பாயாசத்தில் உடைத்த முந்திரி பருப்புகள் வாய்க்கு வாய்த் தட்டுப்படுவது போல, அவரது பேச்சின் இடையே உச்சரித்த திருவள்ளுவர், திருக்குறள், ஆண்டாள், வேலுநாச்சியார், சுப்ரமணிய பாரதிபோன்ற  தமிழ்ச் சொற்கள் உண்மையில் செவிக்கு இன்பம் தருவதாகவே அமைந்தன.