வாழ்க வளமுடன். இன்று உன் பிறந்த
நாள். நானும் உன் அம்மாவும் பிறந்ததும் இந் நாளில்தானே? குழப்பமாக உள்ளதா? அப்பா
என்றும் அம்மா என்றும் புதிய அவதாரம் எடுத்தது அன்றுதானே? அதனால்தான் அப்படிச்
சொன்னேன்.
பேராசிரியர் மோகனின் இலக்கிய அமுதம், பேராசிரியர் நிர்மலா மோகனின் மோகனம்,
கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ முதற்றே உலகு, அடியேனின் அன்புள்ள அமெரிக்கா ஆகிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா 27.12.15 அன்று மதுரை
வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நான் முதல்வராகப் பணியாற்றும்
பள்ளியில் வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள்
தொடங்கின. குழந்தைகளின்பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ் மிஸ் யெஸ் மிஸ் என்று
குழந்தைகள் சொல்ல ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்து “மிஸ் எங்கம்மா செத்துப்
போயிட்டாங்க” என்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.
காலை நாளிதழை
விரித்ததும் என் கண்ணில் பட்ட அந்தச் செய்தி என்னைக் கதிகலங்கச் செய்துவிட்டது.
சந்தித்த அத்தனை பேரும் அந்தச் செய்தி குறித்தே பேசினார்கள். ஆங்கில நாளிதழிலும்
அந்தச் செய்தி வந்திருந்தது.
பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்; பை நிறைய சம்பளம்; பெங்களூரில்
சொந்த வீடு; வசதிக்கும் குறைவில்லை; விடுகிற மூச்சை நிறுத்தினாலும் நிறுத்துவார்
எழுதுவதை நிறுத்த மாட்டார்.
தேசியப் பேரிடர் என அறிவிக்கும் அளவிற்குத் தமிழ் நாட்டில் வெள்ளத்தின்
பாதிப்புகள் மிகக் கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும்
கடலோர மவட்டங்களில் வாழும் மக்கள் வாரக்கணக்கில் வெள்ள நீரால் சூழப்பட்டுப்
பரிதவிக்கின்றனர்.