Tuesday, 20 August 2019

உலக ஒளிப்பட நாள் 2019



   காலையில் நடைப்பயிற்சி என்றாலும் தோளில் கேமரா தொங்கியபடிதான் நடப்பேன். ஆங்காங்கே நின்று சுற்றிலும் கண்ணில் படும் அரிய காட்சிகளைப் படம் பிடிப்பேன். சில படங்கள் என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளே. எழுத்தில் வடிக்காமல் ஒளித் தூரிகையால் வடிக்கப்பட்ட அந்த அழகிய கவிதைகள் சொல்லும் செய்திகள் எத்தனை! எத்தனை!

      இந்தப் படங்களும் புதுக்கவிதை போன்றவையே. ஏன் எனில் இவற்றின் உள்ளடக்கம் பலருக்குப்  புரியாது. சிலருக்கே புரியும்.
தயவு செய்து தோட்டக்காரரிடம் சொல்லாதீர்
சொன்னால் என்னை பிரியாணி போட்டுவிடுவார்
   எங்கள் வீட்டுத் தோட்டம் பறவைகளும் விலங்குகளும் வந்து இளைப்பாறிச் செல்லும் இடம். எங்கள் வீடும் அப்படியே.
    இங்கே பதிவிடப்படுகின்ற  படங்களில் தொண்ணூறு விழுக்காடு எங்கள் தோட்டத்தில் எடுக்கப் பட்டவை.
எனது பின்னழகு எப்படி இருக்கு?

நான் தாய்ப்பால் கொடுக்கிறேன்
நீங்க கொடுக்கிறீங்களா?

நான் மரம் கொத்துவதால் மரம் அழிவதில்லை!

ஒங்களால இப்படி பகல் முழுக்க தலகீழா தொங்க முடியுமா?

எங்களுக்கும் தண்ணி பிரச்சனைதான்!

(பெரிதினும் பெரிது கேள் -பாரதியார்)
பெரிய மீனுக்காய் காத்திருக்கேன்



 
எப்பமா எனக்கு கண்ணு திறக்கும்?

எப்படி இருக்கு என் வாலு?



கால் கடுக்கக் காத்திருக்கிறேன். நீ வருவியா?

உனக்கு நேரம் நல்லால்ல. என்னிட்ட மாட்டிட்ட!

எங்க எனம் அழிஞ்சா ஒங்க எனமும் அழியும்

கண்ணுக்கு எட்னவரக்கும் மரத்தைக் காணம்
நல்ல வேளை மின்சார கம்பியாவது இருக்கு.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கின்றாய்?

கொளத்துல தண்ணியில்ல
கொத்தித் திங்க மீனுமில்ல.

இப்ப கிளிக் பண்ணுங்க!

சும்மாதான் வந்தேன்

எங்களை வாழ வச்சா நாங்க ஒங்கள வாழ வப்போம்.



11 comments:

  1. படங்கள் அற்புதம் என்றால், அதற்கான ஒவ்வொரு விளக்கமும் தனியாக பதிவு எழுதுமளவிற்கு சிந்திக்க வைப்பவை...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. Beautiful pics..funny and thoughtful comments thaatha !!!

    ReplyDelete
  3. அருமையான கவிதைக் காட்சிகள் ஐயா

    ReplyDelete
  4. மரம் கொத்திப் பறவை கொத்துவதால் "மரங்கள்" அழிவதில்லை. மனிதர்கள் கொத்துவதால் மட்டும் "மனிதம்" எப்படி அழிந்து போகிறது....!

    ReplyDelete
  5. Beautiful photos ! Thoughtful captions !

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்னங்க எழுதுனிங்க...., சபைக் குறிப்புல இருந்து நீக்கீட்டாங்க...?

      Delete
  7. உங்கள் ரசனைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  8. அழகழகான அனைத்துமே அழகுதான். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  9. அழகழகான அனைத்தமே அழகுதான். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete