கடுங்குளிர் காரணமாக ஒருவார
இடைவெளிக்குப் பிறகு இன்று மணிக் கணக்கில் நீண்டதூரம் நடந்தேன். கொடைக்கானலில்
மாலை நேரத்தில் நடப்பது போல தட்பவெப்ப நிலை சுகமாக இருந்தது.
Wednesday 22 November 2017
Wednesday 15 November 2017
நாய் தொடங்கிய புத்தகக் கடை
அமெரிக்காவில் டெல்லாஸ் நகரில் என்
பெரிய மகள் டாக்டர் அருணா வசிக்கிறாள். ஒட்டாவாவிலிருந்து டெல்லாஸ் செல்லும்
வழியில் விமானத்தைச் சற்று நிறுத்தச் சொல்லி நியூயார்க்கில் வசிக்கும் என் சகலை
மகள் ஆனந்தி, அவள் பெற்ற சுட்டிக் குழந்தைகளைப் பார்ப்பதற்காக இறங்கிவிட்டோம்.
Friday 10 November 2017
ஆவிகளை அழைக்கும் அமெரிக்கர்
உலகில் ஆவிகளைக் கொண்டாடும் நாடுகள் பலவாக
உள்ளன. அவற்றுள் கனடாவும் அமெரிக்காவும் முதலிடத்தில் இருக்கின்றன. அக்டோபர் 31ஆம்
தேதிதான் அவர்களுக்குப் பேய்கள் தினம். ஹாலவின் டே(Halloween Day) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.
Tuesday 7 November 2017
Saturday 4 November 2017
விழி நிறைய விடை பெறுகிறோம்
கனடாவில் எங்கள் அருமை மகள் செல்வி
புவனாவுடன் ஐந்து மாதங்கள் வசித்தோம். அவள் காட்டிய அன்பில் திளைத்தோம். ஐந்து
மாதங்கள் ஐந்து மணித்துளிகளாய் பறந்து விட்டன. இன்று விடை பெறும் நாள். “அப்பா,
இது உங்களுக்கும் அம்மாவுக்குமான விமான டிக்கெட்” என்று சொன்னபடி அச்சியந்திரம்
துப்பிய பயணச் சீட்டைக் கொடுத்தாள். அதில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கும்போதே
விழிகளும் மனமும் நிறைந்தன; கண்ணீராலும் நினைவுகளாலும்.
Friday 3 November 2017
நூல் மதிப்புரை
சொல்லயில்
மரபுக் கவிதைகள்
அண்மையில்
நான் டொரெண்டோ தமிழ்ச் சங்கத்திற்குப் பேசச் சென்றிருந்தபோது தானே வந்து
என்னிடத்தில் அறிமுகம் செய்து கொண்ட பேராசிரியர் சு. பசுபதி அவர்கள், தாம் எழுதிய சொல்லயில் என்னும் நூலில் வாழ்த்தொப்பமிட்டுத்
தந்தார்.
Subscribe to:
Posts (Atom)