Wednesday, 31 January 2018

அமெரிக்காவின் அழகிய சந்திர கிரகணம்

   ஒருவன் குண்டூசிகளை எடுத்து நம் உடல்மீது குத்திக்கொண்டே இருந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு குளிர் அதிகாலையில். காலை ஐந்து மணிக்கு எழுந்து குளிர் தாங்கும் உடையணிந்து காமிராவும் கையுமாக புறப்பட்டு, வெளியில் ஓடிப் பார்த்தால் அம்புலி மாமா என் கண்ணுக்கு அகப்படவே இல்லை. சுற்றிலும் உயர்ந்த கட்டடங்களும் மரங்களும் இருந்தால் எப்படித் தெரியும்?

Tuesday, 30 January 2018

காந்தியாரிடம் கற்றுக் கொள்வோம்

   மகாத்மா காந்தி இலண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்ததால், மாநாடு முடிந்ததும் அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு பலவேறு வினாக்களைக் கேட்டனர். நிறைவாக ஒரு நிருபர், “நீங்கள் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி என்ன?” என்று கேட்டார். காந்தியடிகள் சற்றும் தாமதிக்காமல், “My life is my message“ என்று சொன்னார். இப்படி என் வாழ்வே என் செய்தி என்று சொல்வதற்கு முற்றிலும் தகுதியுடையவர் அவர். இன்றையத் தலைவர்கள் யாரேனும் இப்படிச் சொன்னால் சிறந்த நகைச்சுவை என்று சிரிக்கலாம்.

Thursday, 25 January 2018

சிரம் தாழ்த்தினேன் சீனக் கலைஞர்களுக்கு

   ஷென் யூன் நிகழ்த்துக் கலைக்குழு(Shen Yun Performing Arts) என்பது சீன நாட்டின் புகழ் பெற்ற பாரம்பரிய கலைக்குழுக்களில் முதன்மையானதாகும். இவர்கள் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் நிகழ்த்துக்கலை பயிற்சிக் கல்லூரி ஒன்றைச் சிறப்பாக நடத்துகிறார்கள்.  உலகம் முழுவதும் சென்று முக்கிய நகரங்களில் முகாமிட்டுக் கலைநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

Monday, 22 January 2018

விளையாடலாம் மீண்டும்

         
  விளையாடுதல் என்பது விலங்கினங்களுக்கே உரித்தான ஓர் இயல்பூக்கமாகும். மேய்ந்து வயிறு நிரம்பிய ஆடுகள், மாடுகள் ஒன்றுடன் ஒன்று கொம்புகளால் உரசித் துள்ளி விளையாடுவதை நாம் பலகாலும் பார்த்திருக்கிறோம். நாய்கள் சேர்ந்து ஓடித் தழுவி விளையாடும் அழகே அழகு.

Tuesday, 16 January 2018

முகநூல் ஹைக்கூ

                
முகநக நட்பதே
 நட்பு
முகநூலில் 

அகநக நட்பு
வேண்டாம்
முகநூலில் 

ஒரே சொடுக்கில்
ஓராயிரம் நட்பு
முகநூலில் 

பெண்ணே உன்
படம் இடேல்
முகநூலில் 

பாம்பின் படம் தொடலும்
முகநூலில் படம் இடலும்
ஒன்றே.

வாழ்ந்தவரும் உண்டு
மாய்ந்தவரும் உண்டு
முகநூலால். 

கல்யாணம் பண்ணியும்
சந்நியாசிகள் இருவரும்
முகநூலால். 

லைக் இல்லாவிட்டால்
 லைஃப் இல்லை
முகநூலில்.

அப்பா  அம்மா
குழந்தைகள்
தனித்தனித் தீவுகளாய்.

மேதையும்
பேதையும்
முகநூல் போதையில்.

காலை எழுந்ததும் முகநூல்
கருத்தாய் உள்ளாள்
 பாப்பா.

மாலை முழுதும் முகநூல் என
வழக்கப்படுத்திக் கொண்டாள்
பாப்பா.

பொழுதுபோக்க
நுழைந்தாள் முகநூலில்;
விழுந்தாள் பழுதாகி.

அளவுக்கு மிஞ்சினால் விஷம்
அமுதம் மட்டுமல்ல
முகநூலும்.

உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய்
முகநூல் புதுமொழி. 

செல்லெல்லாம்
செல்லாகா
முகநூலின்றி.

வழக்கொழிந்தன
பல நூல்கள்
ஒரு நூல் உலாவர.

முகநூல் பார்த்தவனின்
முகம் சிதைந்தது
கார் விபத்தில்.

முகநூலில் லைக் போட்டவள்
சாம்பாரில்
உப்பு போடவில்லை!

முகநூலில் லைக் போட்டவன்
 மனைவியின் சமையலுக்கு
 லைக் போடவில்லை!

ஒவ்வொருவர் கையிலும்
ஒரே நூல்தான்
முகநூல்.

முகநூல் இல்லாமல்
முனியம்மா இல்லை
முனிவரும் இல்லை!

முகநூல் என்பது
இருமுனைக் கத்தி
கையாள்க கவனமுடன்.

முகநூலும் இருக்கட்டும்
ஒரு மூலையில்
ஊறுகாய் அளவில்.

   -கவிஞர் இனியன், கரூர்.





Saturday, 13 January 2018

அருந்தமிழ் வளர்த்த அயல்நாட்டார்

   கவின் தமிழ்ச் செல்வர் கணக்காசிரியர்
   கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு,

இனியன் எழுதும் இனிய மடல். நலம். நலமே சூழ்க. நன்றே வாழ்க.

  நீங்கள் பல ஊர்களுக்கும் சென்று மறக்கப்பட்ட மாமனிதர்களின் சிறப்புகளை வெளிக்கொணர்ந்து வலைப்பக்கத்தில் வரைந்து காட்டுகிறீர்கள். வாய்ப்பு நேருமாயின் சிதம்பரம் என்னும் தில்லையம்பதிக்குச் செல்லுங்கள். கூடவே முனைவர் ஜம்புலிங்கம் அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். தகவல்களைச் சேகரித்துத் தக்கவாறு வலைப்பக்கத்தில் எழுதுங்கள்.

Tuesday, 9 January 2018

வைரத்தைக் கொச்சைப் படுத்தும் வைரமுத்து

  திரைப்படங்களுக்குப் பாட்டெழுதும் வைரமுத்து அவர்கள் இன்று(8.1.18) தினமணியில் தமிழை ஆண்டாள் என்னும் தலைப்பில் ஒரு நெடுங்கட்டுரையை (கொடுங்கட்டுரையை) எழுதியுள்ளார். வழக்கம்போல் சொற்சிலம்பம் ஆடியுள்ளார்.

Wednesday, 3 January 2018

நாநலம் என்னும் நாகரிகம்

  உலகில் மிகப் பெரிய குடியரசு நாடு நம் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் முதன்மையானது பேச்சுரிமை ஆகும். நம் நாட்டுடன் தொடர்புடைய யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் விமர்சிக்கலாம். ஆனால் அதற்கும் ஓர் எல்லையுண்டு என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம். நா என்னும் நல்ல கருவியை நச்சு வாளாக மாற்றி பிறர்மீது வீசிக் காயப்படுத்துவதில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறோம்.