நெஞ்சம் நிறைந்த நன்றி
மார்கழி மாதம். இருபத்து ஒன்பது நாள்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு
மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து திருப்பாவையின் அந்தந்த நாள் பாசுரத்துக்கு உரை எழுதி ஆறு
மணிக்குள் அன்பர்களின் புலனத் தளத்தில் பதிவிடுவது அன்றாட திருப்பணியாய் இருந்தது.
எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இப்பணியை நிறைவேற்றிட அருள் செய்த இறைவனுக்கு முதல்
நன்றி.