Thursday 21 June 2018

நரேந்திர மோடியும் நானும்

   காலை எழுந்தவுடன் தோட்டம் பின்பு வியர்வை தரும் மெல்ல ஓட்டம் என்று இருக்கும் நான் இன்று காலை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் ஒரு விரிப்பை விரித்து ஒரு மணி நேரம் யோகா செய்தேன் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

Wednesday 13 June 2018

நாடுவார் இல்லா நந்தனார் கோவில்

    சிதம்பரம் வந்து ஒரு வாரம் தங்க நேர்ந்தது. காலை நடைப் பயிற்சியின் போது அறிமுகமான ஒருவரிடம், “சிதம்பரத்தில் நந்தனார் கோவில் எங்கே உள்ளது?” என்று கேட்டேன். “தெருவுக்குப் பத்து கோவில்கள் உள்ளன. எந்த கோவிலுக்கும் பெயர்ப்பலகை இல்லை. அதனால் எது நந்தனார் கோவில் என்று எனக்குத் தெரியாதுஎன்றார். நான் கேட்டது அறியா வினா அன்று; அறிவினா.

Wednesday 6 June 2018

பூட்டுப் போடலாம் பூம்புகார் நகருக்கு


   காவிரி புகும் பட்டினம் என்னும் காரணப்பெயர் பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் ஆனது. காலப்போக்கில் அது மருவி பூம்புகார் ஆனது. பண்டையத் தமிழ்நாட்டின் பழைய துறைமுக நகரங்களில் மிகவும் பழமையானது பூம்புகார்.