இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் இப்போது என் மனைவி சுட்ட புதுமையான புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.
Monday 19 June 2023
Wednesday 7 June 2023
தென்காசிச் சங்கமம்
இடையிடையே அரசியல் வாடை வீசிய காசிச் சங்கமத்திற்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் நான் செல்லவில்லை. ஆனால் முழுக்க முழுக்க இலக்கிய வாடை வீசும் தென்காசிச் சங்கமத்திற்கு, வள்ளுவர் குரல் குடும்ப நிறுவுநர் திருமிகு சின்னசாமி இராஜேந்திரன் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று, இரண்டுநாள் தங்கி, திருக்குறள் சான்றோர் பெருமக்களைக் கண்டு, அவர்தம் சொற்பொழிவைக் கேட்டு, ஓர் அமர்வில் ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ எனும் தலைப்பில் உரையாற்றி, விழாக் குழுவினர் அளித்த அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.
Subscribe to:
Posts (Atom)