இன்று உன் பிறந்தநாள். வாழ்க
வளமுடன் என நானும் அம்மாவும் நெஞ்சார வாழ்த்துகிறோம். இந்த ஆண்டும் மின்னஞ்சல் மூலமாகவே உனக்கு வாழ்த்தினைச் சொல்ல வேண்டிய
நிலை.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
என்பது ஒரு பொருள் நிறைந்த பொன்மொழியாகும். இன்றைக்குப் பள்ளிகளில் படிக்கும்
சிறுவர் சிறுமியர் பலரும் தடம் மாறிப் போவதைப் பார்க்கும்போது நெஞ்சு நெக்குருகிப்
போகிறேன்.
'அரைச் சாண்
வயித்துக்காகதான் பாடா' படுகிறோம் என்று உழைக்கும் மக்கள் உரக்கச் சொல்வது நம்
செவிகளில் விழத்தான் செய்கிறது. நம் நாட்டில் பத்துப் பேர்களில் மூன்று பேர் இரவு உணவு
இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.
இன்று(14.10.16) புலரும் பொழுதில்
வந்த தொலைபேசிச் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன். கோபிசெட்டிபாளையத்தில்
இயங்கிவரும் புகழ் வாய்ந்த வைரவிழா மேனிலைப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர்
ஓ.கு.தியாகராசன் அவர்கள் காலமாகிவிட்டதாகஓர் உறுதிப்படுத்தப்படாதசெய்தி
காதில் விழுந்தது என இந்நாள் தலைமையாசிரியர் பி.கந்தசாமி தெரிவித்தார்.
ஆராய்ச்சிக்கு உரிய நூலாக மட்டுமே இருந்த திருக்குறளை,
அறிஞர்களுக்கு மட்டுமே எட்டும் வகையில் பரண் மீது கிடந்த திருக்குறளை மீட்டெடுத்து
அனைவரும் படிக்க வேண்டிய நூல் என அறிமுகம் செய்த பெருமை திரு.தி.சு.
அவினாசிலிங்கம் அவர்களையே சாரும்.