Wednesday 30 August 2017

புல்லிலே புதுவண்ணம் கண்டான்

    மொசைக் கன்னடா பற்றிய விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அங்கு சென்று நேரில் பார்க்கும் நாள் எப்போது வாய்க்குமோ என எண்ணி ஏங்கியது உண்டு. அந்த இடம் நாங்கள் குடியிருக்கும் ஆன்டாரியோ மாநிலத்தில் இல்லை. அது அருகிலுள்ள க்யூபெக் மாநிலத்தில் கெட்டினியூ என்ற இடத்தில் உள்ளது. அது நகரப் பேருந்தில் செல்லும் தூரத்தில்தான் இருக்கிறது என்பது என் மகள் சொல்லிதான் அறிந்தேன்.

Saturday 26 August 2017

படியேறிச் செல்லும் படகுகள்

 
Courtesy:Rideau canal world heritage site
 
நான் கனடா நாட்டுக்கு வந்த புதிதில் ஒட்டாவா நகரில் வசிக்கும் இந்நாட்டுக் குடிமகன் நண்பர் முருகானந்தம் அவர்கள் படியேறும் படகு பற்றிச் சொன்னபோது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. பிறகு ஒரு நாள் என்னையும் என் துணைவியரையும் நேரில் அழைத்துச் சென்று காட்டியதோடு விளக்கமாகவும் சொன்னார். உண்மையிலேயே கனடா நாட்டுக்காரர்களின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொழில் நுட்பம் என்னை வியந்து நிற்கச் செய்தது.

Wednesday 23 August 2017

பிறந்த நாட்டைப் பெரிதும் மதிப்பவர்கள்

  பிறந்த நாட்டைப் பெரிதும் மதிப்பவர்களாக இந்தியர் இருக்கிறார்கள் என்பதற்குக் கனடாவில் நடந்தேறிய இந்திய விடுதலைநாள் விழாவைக் குறிப்பிடலாம்.

Monday 21 August 2017

பிடித்ததில் பிடித்தது



   உலக நிழற்பட தினத்தைப் பின்னிட்டு நான் பிடித்ததில் எனக்குப் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னவள் இனியவள்

ஒரு பொன்மாலைப்  பொழுது

மேடையிலே நான்..... பார்வையாளர் எங்கே?

அமைதியான அழகான ஏரி

யார் ஜெயிப்போம் பார்க்கலாமா?

அடுக்கடுக்காய் அழகழகாய்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

இங்கிருந்து பார்த்தால் எல்லாமே தெரிகிறது

வெண் முத்துகள்

நிஜமும் நிழலும்

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா?

கண்ணைக் கவரும் காட்டுப் பூ

கூஃபர் என்னும் எலி

பட்டாம் பூச்சிக்குப் பிடித்தது....


இயற்கை அன்னை மரத்தில்  ஏற்றிய தீபம்

இன்னொரு தீபம்

மரத்தில் பூத்த தாமரை

நம்ம ஊர் செம்பருத்தி

வட்டம் வட்டமாய்.....

மரத்தில் பழுத்த செம்பவளம்

காத்திருந்து காத்திருந்து.....

பாறை இடுக்கில் பேரழகு

ஒற்றைக் காலில் நிற்கும் வாத்து

புல்லில் பூத்த  பூ

வண்ணம் மட்டும் வேறு

குடைப் பிடிக்கும் வெண்காளான்

வணக்கம் நண்பரே
ஒட்டாவா பாராளுமன்ற நூலகம்

மழையில் நனைந்த மலர்

Thursday 17 August 2017

செய் அல்லது செத்துமடி

     மரங்களைத் துதித்தவர்கள் நம் முன்னோர். பதச் சோறாக, கோவில்களில்  தல விருட்சம் என்னும் பெயரில் ஒரு மரத்தை  வளர்த்து வழிபடுவதைக் .குறிப்பிடலாம். சிறு தெய்வங்களான ஐயனார், கருப்பசாமி, வீரனார், பத்ரகாளி சிலைகள் யாவும் மரங்கள் சூழ்ந்த இடங்களில்தாம் இருக்கும். இவை கோவில் வனம் என அழைக்கப்படும்.

Saturday 12 August 2017

இதுவல்லவா அதிசயம்!

    உலகில் ஏழு அதிசயங்கள் மட்டும் உள்ளன என்பதை நான் ஒத்துக் கொள்வதில்லை. முதலில் இப்படி வகைப்படுத்துவதையே தவறு என்கிறேன். ஒருவர் அதிசயம் எனச் சொல்வதை இன்னொருவர் சாதாரணம் என்பார்;  மற்றொருவர் சாதாரணம் என்பதை வேறொருவர் உலக மகா அதிசயம் என்பார்.

Thursday 10 August 2017

சிறுகதை

கன்னத்தில்  முத்தமிட்டால்
முனைவர்.அ.கோவிந்தராஜூ

   ஒட்டாவா சிவிக் ஹாஸ்பிட்டல் என்பது கனடா நாட்டில் ஆன்டாரியோ மாநிலத்தின் அரசு தலைமை மருத்துவ மனையாகும். ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்று உள்ளது. ப வடிவில் அமைந்துள்ள பத்துமாடிக் கட்டடம். எண்  417 நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு முன்னால் நூறு கார்களை நிறுத்த முடியும். அதிகாலை நேரம் என்பதால் ஏழெட்டுக் கார்களே நிற்கின்றன.

Tuesday 8 August 2017

ரக்க்ஷா பந்தன் என்னும் உறவுப் பாலம்

   ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முழுநிலா நாளில் சகோதரிகள் தம் சகோதரர்களின் கையில் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ராக்கி கட்டுவது நம் இந்தியத் திருநாட்டின் இனிய பாரம்பரிய நிகழ்வாகும்.

Sunday 6 August 2017

ஒற்றை மனிதர் வீடுகள்

   இல்லம் வீடு என்பன ஒரு பொருள் குறித்தப் பல சொல்கள் என்றாலும் சற்று எண்ணிப் பார்த்தால் சிறு வேறுபாடு இருப்பது தெரியும். வீடு என்பது மனிதர்கள் வசிக்காத இடம் எனலாம். எடுத்துக்காட்டாக நீண்ட நாள்களாகப் பூட்டிக் கிடக்கும் வீட்டைக் குறிப்பிடலாம்.