ஆறாம் பாடல்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

அருமைப் பெண்ணே! இன்னுமா நீ உறங்குகிறாய்? இது
பறவைகள் கீச் கீச் என ஒலி எழுப்பும் விடியற்காலை நேரம். கருடனுக்குத் தலைவனான
திருமாலின் கோவிலில் வருக வருக என அழைப்பதுபோல் வெண்சங்கை ஊதுகிறார்களே- அந்தப்
பேரொலி உன் செவிகளில் விழவில்லையா?