இன்று காலை நாளிதழைப் புரட்டியபோது
என் கண்ணில் பட்ட ஒரு செய்தியால் என் மனம் பட்டப் பாடு எனக்குதான் தெரியும்.
மதிப்பெண் தொழிற்சாலைகளாக பள்ளிகள் மாறிவரும் இன்றைய சூழலில் மன அழுத்தம் காரணமாகப்
பள்ளி மாணவர்கள் போதைப் பொருள், புகைத்தல் என்னும் புதைகுழிகளில் விழுகின்றார்கள்;
பாலியல் நெறி பிறழ்வுகளில் ஈடுபடுவோர் பலராக உள்ளனர்.
Saturday 23 November 2019
Tuesday 5 November 2019
கானுயிர் காக்கும் கால்நடை மருத்துவர்
ஜெயமோகன் எழுதியுள்ள ‘யானை டாக்டர்’ என்னும் புகழ்பெற்ற சிறுகதையைப் பல ஆண்டுகளுக்கு முன்
படித்தேன். அது கற்பனைக் கதையன்று. டாக்டர் கே என்றும் யானை டாக்டர் என்றும்
அறியப்படும் கால்நடை மருத்துவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய உண்மைக் கதை.
கதைக் களமும் உண்மையே. முதுமலைக் காடுதான் அது. இதுவரை அந்தக் கதையைப்
படிக்காதவர்கள் இனியாவது படிக்க வேண்டும். இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என
எண்ணத் தோன்றும்.
Saturday 2 November 2019
வள்ளுவர் கல்லூரியில் வலைப்பூக்கள்
ஆர்வம் இருந்தால் அதிகமாய்க்
கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு வள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களே சான்று.
வலைப்பூ உருவாக்கம் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் முதல்வர் டாக்டர் த.சாலைபற்குணன்
அவர்கள் ஓர் ஊக்கவுரை நிகழ்த்தித் தொடங்கிவைத்தார். பயிற்சி நிறைவில் கல்லூரித்
தாளாளர் திரு க.செங்குட்டுவன் அவர்கள் ஓர் ஆக்கவுரை நிகழ்த்தியது முத்தாய்ப்பாக அமைந்தது.
Subscribe to:
Posts (Atom)