பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும் 892
‘பெரியார்’ என்னும் சொல்லுக்குப் பொருள்கள் பலவாகும். இதற்கு இணையான வழக்குச் சொல் பெரியவர் என்பதாகும். பெரியவர் எனின் ஆற்றலில் பெரியவர், கல்வியில் பெரியவர், செல்வத்தில் பெரியவர், செல்வாக்கில் பெரியவர், பதவியில் பெரியவர், புகழில் பெரியவர், வயதில் பெரியவர் எனப் பற்பல பொருள்கள் நம் நினைவில் தோன்றும்.