Monday 19 November 2018

காலமாகிப் போன கடிதம் எழுதும் கலை

     கைபேசி கைக்கு வந்ததும் கடிதம் எழுதும் வழக்கம் கடிதில் மறைந்து வருகிறது. கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. நகைச்சுவை, வருத்தம், வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி அழுகை என்னும் எண்வகை மெய்ப்பாடுகளையும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்துவன கலைகள். அப்படியே கடிதம் எழுதும்போதும் நாம் நம் அன்பை, பாசத்தை, மகிழ்ச்சியை, மனக்கவலையை, விருப்பை, வெறுப்பைத் தெரிவிக்கும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தகுந்த நிறுத்தல் குறியிட்டு எழுதி அனுப்புகிறோம். கடிதத்தைத் தொடங்கும்போது இடப்படும் விளிச்சொல்லும், மடலை முடித்து எழுதப்படும் முடிப்புச் சொல்லும் மிக முக்கியம். இந்த வரைமுறைகளெல்லாம் இன்றைய இளைஞர்க்குத் தெரியாது.

Tuesday 6 November 2018

தீருமா தீபாவலி?


இன்று தீபாவளி.
 எனக்கு நேற்று இருந்த மகிழ்ச்சி இன்று இல்லை. அறுபதைச் சில ஆண்டுகளில் எட்டிப்பிடிக்க உள்ள வயதிலும், என் மனைவி அதிகாலையில் எழுந்து இனிப்பு, காரங்களை வகை வகையாய்ச் செய்ததை வக்கணையாய்த் தின்ற பின்னும் மகிழ்ச்சி  இல்லை.