ஆர்வம் இருந்தால் அதிகமாய்க்
கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு வள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களே சான்று.
வலைப்பூ உருவாக்கம் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் முதல்வர் டாக்டர் த.சாலைபற்குணன்
அவர்கள் ஓர் ஊக்கவுரை நிகழ்த்தித் தொடங்கிவைத்தார். பயிற்சி நிறைவில் கல்லூரித்
தாளாளர் திரு க.செங்குட்டுவன் அவர்கள் ஓர் ஆக்கவுரை நிகழ்த்தியது முத்தாய்ப்பாக அமைந்தது.
வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்
முதன்மைக் கருத்தாளராகச் செயல்பட்டார். நான் துணைக் கருத்தாளராகச் செயல்பட்டேன்.
பயிற்சியில் பங்கேற்ற நாற்பது
மாணவர்களுக்கும் இணைய வசதியுடன் கூடிய தனித்தனி கணினிகள் ஒதுக்கப்பட்டன.
அவர்களுக்கு உறுதுணையாகக் கணினித்துறையினர் ஓடியாடி உதவினர்.
பெரிய ஒளித்திரை உதவியுடன் தனபாலன்
அவர்கள் வலைப்பூ(Blog) உருவாக்கத்தை முறையாக விளக்க, மாணவ மாணவியர் அப்படியே பின்பற்றித்
தத்தம் வலைப்பூக்களை விரைவாகவும் நிறைவாகவும் உருவாக்கினர்.
பெண்கள் விடாப்பிடியாக இருந்து
சாதிப்பார்கள் என்பதற்கு மாணவி சத்தியபிரியா ஒரு பதச்சோறு ஆவார். மூன்று முறைகள் முயன்றும் அவரால் ஒரு கூகுள்
கணக்கைத் தொடங்க இயலவில்லை. எனினும் மிகுந்த பொறுமையுடன் நான் சொல்லிக்கொடுத்ததை
உள்வாங்கி, நிதானமாகச் செயல்பட்டுத் தன் வலைப்பூவை வெற்றிகரமாக அழகாக
வடிவமைத்தார்.
பயிற்சி நிறைவில் பார்த்தால்
பெருபான்மையோர் தம் வலைப்பூக்களை உருவாக்கி அசத்தினார்கள். திண்டுக்கல் தனபாலன்
முகத்தில் வெற்றிக் களிப்பு நன்றாகவே தெரிந்தது. நிறைவாக பலர் முன்வந்து மேடைபயம் சிறிதும்
இன்றிப் பின்னூட்டம் அளித்தமை கூடுதல் சிறப்பாக அமைந்தது.
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் |
பயிற்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்த
நண்பர் சீத்தாராமன், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
பயிற்சியில் பங்கேற்ற மாணாக்கச்
செல்வங்கள், தாம் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தி, தம் வலைப்பூக்கள் வாயிலாக தம்
வளமார்ந்த படைப்புகளை வையம் முழுதும் பரப்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு
இருக்கிறது.
முனைவர் அ. கோவிந்தராஜூ
நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தங்களுக்கு, என்றென்றும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்...
ReplyDeleteமேலும் இதுபோல் நடக்கப் போகும் பயிற்சிப் பட்டறையை மேம்படுத்த, சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் இருக்கிறேன்... மிகவும் நன்றி ஐயா...
This comment has been removed by the author.
Deleteஒரு திண்டுக்கல்காரருக்கு இன்னொரு திண்டுக்கல்காரனின் மனமார்ந்த பாராட்டுகள்,,,
Deleteவாழ்த்துகள் ஐயா
ReplyDeleteஎல்லாம் சரிதான் முன்னறிவிப்பு இன்றி நடத்தினால் மற்றவர்கள் கலந்து கொள்வது எப்படி ?
நண்பரே பொறுத்தருள்க.
Deleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் தனபால் அவர்களே.
ReplyDeleteமகிழ்ச்சி. மாணவர்களின் ஆர்வம் போற்றத்தக்கது. இளைய சமுதாயத்தினரை இவ்வாறான வழியில் நாம் நடத்துச் செல்லுதல் இக்காலத்திற்கான முதன்மைத் தேவையாகும். உங்களுக்கும், நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் வந்திருக்க வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.
ReplyDeleteநல்லது.... விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். புதிதாக வலைப்பூ ஆரம்பித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபோற்றுதலுக்கு உரிய முயற்சி
ReplyDeleteதொடரட்டும்