அறிவும் ஆற்றலும் மிகுந்த புகழ்
நிறை மருத்துவர் டாக்டர் சங்கரபாண்டியன் அவர்கள். சிறுநீரகம் சார்ந்த மருத்துவத் துறையில்(Nephrology) கரை கண்டவர்.
அமெரிக்காவில் Tarrant Nephrology
Associates என்னும்
நிறுவனத்தை உருவாக்கி அதன் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.
பதினேழு டயாலிசஸ் மையங்கள், இருபதுக்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவர்கள்,
நூற்றுக்கணக்கில் ஊழியர்கள் என ஆலமரம்போல் பல்கிப் பெருகி அமெரிக்கர்களே வியக்கும்
வண்ணம் வளர்ந்து நிற்கும் நிறுவனம் அது.
அமெரிக்காவின் செல்வந்தர்களுக்கு
இணையாக வளம்பெற்று வாழ்வதோடு, முயற்சியால் ஈட்டிய பெரும்பொருளின் ஒரு பகுதியை நல்ல
பணிகளுக்கு நயந்தளிக்கும் நன்கொடையாளராகவும் திகழ்கிறார்.
அவர்தம் துணைவியார் டாக்டர் பங்கஜம் அவர்கள் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர், கரும வீரர் காமராசரின் சிறைத்தோழர் வாடிப்பட்டி பழனிச்சாமி ரெட்டியார் அவர்களின் மூத்த மகள் ஆவார்.
1970 இல் மருத்துவப் படிப்பில்
பட்டம் பெற்றார். உடனே திருமணம். அடுத்த ஆண்டே அமெரிக்காவில் வேலை கிடைக்க,
குடும்பத்தோடு வந்தவர், இப்போது என் பெரிய மகள் அருணா படிக்கும் ஆர்லிங்டன்
டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியவர். அமெரிக்கக் குடியுரிமைப் பெற்று, இங்கேயே
வாழ்வாங்கு வாழ்கிறார்.
சுற்றத்தினரைப் பேணிப் பாதுகாத்தலே ஒருவர்
செல்வம் சேர்த்ததன் பயன் என்பார் திருவள்ளூவர். 35 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில்
குடியேறி, முன் ஏர் போல பீடுநடை போட, பின் ஏர் போல உறவும் நட்பும் தொடர்ந்துவர,
அணுகியோர்க்கு வழிகாட்டியாகவும் வளம் காட்டியாகவும் விளங்குகின்றனர் இந்த இமயம்
தொட்ட இணையர்.
படங்களை இணைப்பில் காண்க:
https://photos.google.com/share/AF1QipN0FISVixslDC6fSlWUzkblQXU_2xsWdYtI5jgWdCg5zN0Ruk_hvZPw0gos6WpXoQ?key=bjkxWm1yVldNc3ppZHJlQWswZkQ3TmpwdVRrdnN3
வேர்கள்
அன்னிய மண்ணில் என்றாலும் கிளைகளை தாய்த் திருநாட்டின் மீது பரப்பி நடு ஊரில்
இல்லை இல்லை நடு உலகில் பழுத்த மரமாக நிற்கும் இவர்கள் மற்ற அயலகத் தமிழர்களுக்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.
.....அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்
என்னும் பாரதியாரின் கருத்துக்கு ஏற்ப இலட்சக்
கணக்கில் கொடை நல்கிய இலட்சிய இணையரை வாழ்த்துவோம்; வணங்குவோம்.
இணைப்பிற்கு செல்கிறேன் ஐயா... நன்றி...
ReplyDeleteபோற்றுதலுக்கு உரியவர்கள்
ReplyDeleteபோற்றுவோம்
வணங்குவோம்
அறம் செய்ய விரும்பு என்ற வாக்கிற்கு இணங்க பொருள் ஈட்டுவது வெளிநாடு என்றாலும் உணர்வுகள் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. டாக்டர் சங்கரபாண்டியன் அவர்களைப் பற்றி தங்களது அன்புள்ள அமெரிக்கா நூலில் படித்துள்ளேன், இருப்பினும் மீண்டும் அவர்களது சேவை மனப்பான்மையை அறிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். அவர்களது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறம் செய்ய விரும்பு என்ற வாக்கிற்கு இணங்க பொருள் ஈட்டுவது வெளிநாடு என்றாலும் உணர்வுகள் தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. டாக்டர் சங்கரபாண்டியன் அவர்களைப் பற்றி தங்களது அன்புள்ள அமெரிக்கா நூலில் படித்துள்ளேன், இருப்பினும் மீண்டும் அவர்களது சேவை மனப்பான்மையை அறிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். அவர்களது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete