Tuesday 24 January 2017

தொன்மை மறவேல்

  எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்பார் தொல்காப்பியர். சொற்களின் உண்மைப் பொருள் தெரியாமல் உழல்வோர் உளர்; உளறுவோரும் உளர், கயிற்றைப் பாம்பெனவும் பாம்பைக் கயிறெனவும் பிறழ உணர்வதைப் போல பழந்தமிழ்ச் சொற்களைப் பார்க்கின்றோம்.


    தொன்மை மறவேல் என்பது ஒளவையாரின் ஆத்திசூடி ஆகும். தொன்மை என்னும் சொல்லுக்குப் பழமை எனப் பொருள்கொண்டு, பழமையை மறத்தல்தானே சரி என ஒரு நண்பர் மேடையில் உரக்க முழங்கினார். அவரது அறியாமையை என்னென்பேன்!

    தொன்மை என்பது ஆழமான பொருளுடையது. காலம் காலமாக சமுதாயம் கடைப்பிடித்து வரும் நல்ல மரபுகளைக் குறிப்பது இச்சொல். நல்ல மரபுகளை நாசம் செய்வது என்பது, பாரதி சொல்வது போல நல்லதோர் வீணையை எடுத்து அதன் நலம் கெடும் வகையில் புழுதியில் எறிவதற்குச் சமமாகும்.

     கற்பு என்பது தமிழன் கண்ட மிகப்பெரிய சமுதாய ஒழுங்காகும். கற்பென சொல்லவந்தால் அதை இரு கட்சிக்கும்- அதாவது ஆணுக்கும் பெண்ணூக்கும்- பொதுவில் வைப்போம் என்று நெருப்புக் கவிஞன் பொறுப்போடு சொல்லிச் சென்றதை மறந்ததன் விளைவுதான் இன்று நாடெங்கும் பரவிவரும் பாலியல் நெறிபிறழ்வுகள்.

      குடும்பம் என்பது குடும்ப உறுப்பினர்களின் கற்பைக் காக்கும் வேலி. அந்த வேலியைத் தகர்த்தெறியும் வகையில் நமது திரைப்படங்களும், எழுத்தும், பேச்சும், இணையமும் திசைமாறிச் செல்கின்றன. புதுமை என்ற பெயரில் தொன்மங்களைத் தொலைத்துவிட்டு தொல்லைகளை விலைகொடுத்து வாங்கும் இளம் பெண்கள் பலராக உளர்.

    
   
சென்றவாரம் அத்தகைய இளம்பெண் ஒருத்தி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினாள். திருமண ஆசை காட்டி மோசம் செய்து விட்டதாகத் தன் காதலன்மீது அவள் வழக்குத் தொடர்ந்தாள். கருவைச் சுமக்கும் அவள் கூண்டில் ஏறி கோவென்று அழுதாள். கருவுக்குக் காரணமான அவனைச் சிறையில் தள்ள வேண்டும் என வாதிட்டாள். ஆனால் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அவளுக்குச் சாதகமாக அமையவில்லை. திருமணத்துக்கு முன்னர் ஒரு பெண் கருவுற்றால் அதற்கு அப்பெண்ணே பொறுப்பேற்க வேண்டும் என அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை வழங்கியவர் ஒரு பெண் நீதிபதி என்பது குறிப்பிடத் தக்கது.

    இப்போது புரியுமே ஒளவையார் தொன்மை மறவேல் என்று சொன்னதன் உண்மைப் பொருள். என்னதான் புதுமைப் பெண்களாக வலம் வர ஆசைப்பட்டாலும் திருமணத்திற்குமுன் உடலுறு புணர்ச்சி என்பதை மனத்தால் கூட நினைத்தல் கூடாது.


  “வேலி கட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது?” என்று சொல்லிவிடுவதே புத்திசாலிப் பெண்ணுக்கு அடையாளமாகும்.

24th January: National Girl Children Day

10 comments:

 1. உண்மை ஐயா
  தொன்மை மறவோம்

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Meanwhile, western countries started to embrace family culture more! Sadly India is on fastest track towards (so-called) modernism.

  ReplyDelete
 4. Recently I read the book" one Indian girl "by Chetan Bhagat. The author of my age wrote many best selling English novels... Each novel sold more than crore copies.in all his novels heroine had pre marital sex .. Safe sex. What sort of cultural impact will be created among readers !!...I wonder after reading his latest novel ..��

  ReplyDelete
 5. I hope the judgement will make young women think twice. What our elders said is only for a cultured life. This is not realized by youngsters. Prof.Pandiaraj

  ReplyDelete
 6. நான் பணியிலிருந்த காலத்தில் இது போன்ற நிறைய வழக்குகளைப் பார்த்துள்ளேன். சட்டத்திற்குட்பட்டு அவரவர் சிந்தனைக்கேற்ப தீர்ப்புகள் அமையும். இந்தத் தீர்ப்பைப்பற்றி நான் ஏதும் சொல்வது சரியல்ல. தவறுகள் ஏற்படின் சரிசெய்துக் கொள்ளவே மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உள்ளன.என்னுடைய பார்வையில் அப்படிப்பட்ட அபலைகளுக்கு சில வழக்குகளில் இருதரப்பின் வழக்குரைஞர்களின் ஒத்துழைப்போடு அவரைக் கெடுத்தவரையே மணம் முடித்து வைத்துள்ளேன். அவை மகிழ்ச்சிகரமான செய்திகளே. எனினும் இளம்பெண்கள் தங்களை எந்த நிலையிலும் இழந்து விடாதபடி காத்துக்கொள்வதே பெண்மைகழகு. ஜல்லிக்கட்டுப்போராட்டத்தைப் பார்த்தாவது மனவலிமை இல்லாதப் பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொலவேண்டும். அந்தப் போராட்டாம் தமிழ் இளைஞர்களின் சுயகட்டுப்பாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதைக் கண்டு நாம் பெருமைப்படவேண்டும். பெண்மை வாழ்க! நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 7. ஒரு புறம் புதுமை என்று சொல்லிக்கொள்கிறோம். பழமையின் பெருமையை மறக்கிறோம். பின்னர் வருத்தப்படுகிறோம். என்ன செய்வது. வேதனையே.

  ReplyDelete
 8. தொன்மை மறவேல் என்ற தலைப்பில் தொன்மை என்பதற்குப் பழமை எனப் பொருள் உண்டு. உண்மை தான், அதேசமயம் பொருள் விளங்காச் சொற்களும் இச்சமுதாயத்தில் அதிகம் உலவுகின்றன. உதாரணத்திற்கு, எங்கு வந்தீர்கள்? என்ற வினாவிற்குச் சும்மா வந்தேன் எனப்பலரும் சொல்லக்கேட்டிருப்பீர்கள். சும்மா என்பதன் பொருள் என்ன? அதேபோல் வாழைத்தோப்பை யானை அட்டகாசம் செய்தது என்பர். இதற்கு யானை சேதப்படுத்தியது என்பதே பொருள் எனப் பலரும் கூறுவர். ஒரு நடிகர் நடித்த திரைப்படத்தைப் பார்த்த இரசிகர் படம் அட்டகாசமாக இருந்தது என்கிறார். இந்த இடத்தில் படம் நன்றாக இருந்தது எனப் பொருள் கொள்கிறோம். கம்முனு இருக்கனும் என்போம். அநதக் கட்டளைக்கு அமைதி எனப்பொருள் கொண்டு அமைதியாய் இருப்பர். மேற்காண் சொற்கள் எம்மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது என அறியவில்லை. தொன்மை என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் கொள்கின்றனர். தமிழில் ஒரு சொல்லுக்குப் பலபொருள் இருப்பதைப் போல. தங்கள் கட்டுரையின் தொன்மை பெண்களின் நிலை குறித்தது. மெய்யுறு புணர்ச்சி குறித்த நீதிபதியின் கருத்துப் பொருத்தமானதே என நான் கருதுகிறேன். காரணம் கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். ஊசி இடம்கொடுத்தால் தான் நூல் நுழையமுடியும் என்று சொல்வர். ஒரு பெண் பழமையைப் பாரம்பரியத்தை தன் குடும்பத்தைப் பெற்றோரை உறவுகளை ஏன் இந்த சமுதாயத்தின் ஏச்சுப் பேச்சுகள் (சங்க இலக்கியத்தில் - அலர் தூற்றல்) முதலானவற்றை மறந்து தன்னிலை மறந்தால் மட்டுமே தொன்மை மறந்தவள் ஆகிறாள். இந்நிலை மாற பெண்கள் தான் கவனமாக சமுதாயத்தில் உலவவேண்டும்.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  கரூர்.

  ReplyDelete