தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
செந்தமிழ் நாடு என்று சொல்லக் கேட்டவுடன், காதிலே தேன் வந்து பாய்ந்ததாகப் பாடுவான் பாரதி. எனக்கும் அப்படியே. கனடா நாட்டு நூலகம் ஒன்றைப் பார்த்தவுடன் கட்டுக் கரும்பை வெட்டித் தின்ற உணர்வு ஏற்பட்டது.