என்னுடைய பணிக்காலத்தில் எத்தனையோ
சோதனைகளைச் செய்து பார்த்துள்ளேன். விழாக்களைக் கூட ஆண்டுதோறும் வெவ்வேறு விதமாக
நடத்துவேன். ஒரு மாணவன் ஓடிவந்து ஒரு மாற்றத்தைப் புகுத்த விரும்பினால் கூட
ஏற்றுக் கொள்வேன்.
மாற்றி யோசித்து வித்தியாசமாகச் செய்வதற்கு ஒரு தனித்திறன்
வேண்டும். ஒரே மாதிரியாகச் செய்வது எளிது. ஆனால் நாளடைவில் புதியன காணும்
சிந்தனைத்திறன் மழுங்கிவிடும். செய்வதையே செய்வதற்கு நாம் என்ன செக்கு
மாடுகளா?
கல்வியாண்டின் இடையிலே சுற்றுலா
செல்வது வழக்கம். இதை மாற்றி பொதுத்தேர்வு முடிந்து சுற்றுலாவை அமைத்தால் என்ன
என்று எண்ணி கடந்த சில ஆண்டுகளில் நடைமுறைப் படுத்தினேன். இரவு பகலாக
கண்விழித்துப் படித்துத் தேர்வெழுதி சோர்ந்த மனநிலையில் உள்ள மாணவர்களுக்கு
இத்தகைய post exam tours கூடுதலாகப் புத்துணர்ச்சி அளித்ததை அறிந்தேன்.
இரவு
மூன்று மணியளவில் நேந்திரங்காய் சிப்சுக்குப் புகழ் பெற்ற வடக்கஞ்சேரி என்னும் ஊரில் வண்டி நின்றது. அங்கே
இருந்தது ஒரு பாடாவரி கழிவறை; அதில் ஒன்றுக்குப் போகவே ஐந்து ரூபாய்! “என்ன சரியாக
வெளிச்சம் கூட இல்லையே” என்று என் மனைவி
கேட்க, “உங்கள் ஊரில் இந்த வெளிச்சம் கூட இருக்காது” என்று கூறி உண்மையைப் போட்டு
உடைத்தானாம் அந்தக் கழிவறை ஆள்.
அதிகாலை
ஐந்தரை மணிக்குக் கொச்சியில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் முன் பேருந்து நின்றது. எங்களுக்காக
அறைகள் முன்பதிவு செய்யப் பட்டிருந்தன. இரண்டு மணி நேரம் உறங்கி எழுந்து குளித்து
முடித்துத் தயாரானதும் சுவையான காலை உணவு
(தோசை, புட்டு முதலியன) அறைக்கே வந்தது. உண்டு மகிழ்ந்தோம்.
அடுத்து,
அரபிக் கடல் உப்பங்கழி படகுத் துறையை நோக்கிச் சென்றோம். பேருந்தை ஓரிடத்தில்
நிறுத்திவிட்டு நீண்ட தூரம் நடந்து படகுத் துறையை அடைந்தோம். முதியவர்களுக்கும்
குழந்தைகளுக்கும் நடப்பது சிரமந்தான். அங்கு பேட்டரி கார் வசதி எதுவும் இல்லை.
நூறு பேர் பயணிக்கக் கூடிய அழகிய அன்னம் வடிவில்
அமைந்த இரண்டடுக்குப் படகு அது. அதன் நடுவில் ஒலி பெருக்கி வசதியுடன் கூடிய ஒரு
சிறிய அரங்கம். சுற்றுலா அமைப்பாளர் எங்கள் குழுவுக்காக மட்டும் அப் படகைப்
பிடித்திருந்தார்.
on top of the boat |
dancing while boating |
world's biggest cooking vessel |
மீண்டும்
படகு சவாரி தொடர்ந்தது. ஆடல், பாடல், இசை நாற்காலி, பலகுரல் என அரங்கம்
களைகட்டியது. திடீரென என ஒரு போலீஸ் ரோந்து படகு படு வேகத்தில் வந்து எங்கள் படகை
உரசிக் கொண்டு நின்றது; எங்கள் படகும் உடனே நின்றது. அந்த போலீசார் எங்கள் படகு
ஆவணங்கள், நாங்கள் யார் எவர் என்பதையெல்லாம் சோதனை செய்தனர். எல்லாம் சரியாக இருந்ததால் வந்த சுவடு
தெரியாமல் விரைந்தனர். அடுத்தப் பத்து நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்குப் படகு
வந்து சேர்ந்தது.படகுப் பயணத்தில் நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை.
Cherai beach |
அந்தப்
பகுதியில் ஒரு கழிவறை கூட கண்ணில் படவில்லை. உணவு விடுதியில் கேட்டால் ஒரு ஆளுக்கு
இருபது ரூபாய் என்றனர். அவசரம் வேறு வழியில்லாமல் கொடுத்துத் தொலைத்தனர். நம்
நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இதில்தான் பெருத்த வேறுபாடு உள்ளது. சுற்றுலா
பயணிகள் கூடும் இடங்களில் எப்பக்கம் திரும்பினாலும் தூய்மையான விசாலமான
கழிப்பறைகள் அங்கு இருக்கும். கட்டணம் ஏதும் இருக்காது. God’s own country என்று தம்பட்டம்
அடிக்கிறார்கள். அங்கேதான் சுற்றுலாத் தலங்கள் மகா கேவலமாக உள்ளன. இது குறித்து
கேரள முதல்வர் உம்மன் சண்டிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
Lulu mall |
இரவு உணவு
முடிந்ததும் கரூரை நோக்கிப் பயணம் தொடர்ந்தது. அந்தப் பேருந்தில் மைக் வசதி
இருந்தது. சுற்றுலா பற்றிய தம் கருத்துகளைக் கூறுமாறு பணித்தேன். முதலில் சிலர்
பேசத் தயங்கினாலும் பிறகு அனைவரும் பேசி
அசத்தினார்கள். இந்த feedback session நான் ஏற்பாடு
செய்யும் சுற்றுலாக்களில் மிக முக்கியமானது.
எப்போது
தூங்கினோம் என்று தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்தால் காலை மணி 6.45. பள்ளி
வளாகத்தில் பேருந்து மெல்ல வந்து நின்றது. சுற்றுலா அமைப்பாளரையும்
ஓட்டுநர்களையும் கைகுலுக்கிப் பாராட்டினேன். சுற்றுலா ஏற்பாட்டில் உறுதுணையாய்
இருந்த சுய முன்னேற்ற மேம்பாட்டுப் பயிற்சியாளர் நண்பர் முரளி அவர்களையும்
தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி பாராட்டினேன்.
நாற்பது ஆண்டுகால ஆசிரியப்
பயணத்தில் இச் சுற்றுலா பாதுகாப்பாகவும் முத்தாய்ப்பாகவும் முழுமையாகவும் அமைந்து
மன நிறைவைத் தந்தது.
இது
போன்றதொரு சுற்றுலாவிற்கு இனி வாய்ப்பே இல்லை. காரணம் இம்மாத இறுதியில் பணி நிறைவு
பெறுகிறேன்.
அடுத்தப்
பிறவி என இருந்தால் ஆசிரியராக அதுவும் தமிழ் ஆசிரியராகப் பிறக்க விரும்புகிறேன்.
அப்போதும் எனது சுற்றுலாப் பயணம் தொடரும். வலைப் பூவில் பதிவும் தொடரும்.
முழு ஆண்டு விடுமுறையில் சுற்றுலா
ReplyDeleteபுதுமைதான் ஐயா
ஆசிரியர் என்றும் ஆசிரியர்தான்
பதிவேற்றம் செய்த அடுத்த நிமிடம் உங்கள் பின்னூட்டம் வந்து விடுகிறது.
Deleteநன்றி நண்பரே.
தேர்வுகள், பாடம் படிக்கவேண்டும், வருகைப்பதிவு முழுமையாக இருக்கவேண்டும் என்ற எவ்வித கவலையுமின்றி மன நிறைவாக இதுபோன்ற பயணம் அமையும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
DeleteI have visited Kochi more than 5 times. But when I gone through this article I am much impressed and have got an enthusiasm to visit it again. The Itinerary has been elaborated in such a wonderful manner. It is only possible by Dr.AG alone. It is really a gift of God. Dear Sir you may retire from your service. But you have no retirement till your last breathe. Keep on writing to educate, entertain, enlighten the young minds. Your birth has a reason. Feel Proud to join with you. Thanks a lot.
ReplyDeleteThank you for your nourishing feedback
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteWell arranged. Some teachers are very strict. Inian our Sambanthi understands the youngsters and move with them like a friend and also a teacher.
ReplyDeleteThe purpose of a tour is to relax.,enjoy and gain knowledge about the area etc .I congrats Inian who always find time to arrange such programs effectively. He does not forget to take his wife also in the tour.
Well done.
R.Saravana perumal
Sambanthi
It's noteworthy appraisal. Thank you
DeleteThis comment has been removed by the author.
DeleteSuperb Anna. My humble suggestion to you is to have a family-friends circle meet for creating a platform in which we all (particularly you) can contribute something in education in coming years.
ReplyDelete