Tuesday, 27 January 2015

இந்திய மண்ணில் பிறப்போம்

     இன்று(26.1.15) நம் நாட்டின் அறுபத்து ஆறாவது குடியரசுத் திருநாள். நம்மை நாமே ஆள்வதற்கு நல்ல விதி செய்த நாள். வழக்கம்போல் குழந்தைகள் உற்சாகமாக ஓடிவந்து, “ஐயா, இந்த இனிய நாளில் பாடுவதற்கேற்ற ஒரு பாடலை இயற்றித் தாருங்கள் என்று கேட்டார்கள்.

    இது ஒருவிதமான அன்புத்தொல்லை; இன்பத்தொல்லை. எனவே அவர்கள் வேண்டுகோளை மறுப்பதில்லை.

     உடனே அவர்களுக்காக ஒரு பாடலை எழுதினேன். இது அவர்களுக்கு மட்டுமல்ல;  எனக்கும் என்னுடன் சேர்ந்து வாழும் நூற்று இருபது கோடி குடிமக்களுக்கும்.

   இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தக் கையோடு, நம் பிரதமர் மோடி அவர்களுடன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டேன்.

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

 எத்தனை பிறவி எடுத்தாலும்
 இந்திய மண்ணில் பிறப்போம்
 புத்தன் காந்தி வாழ்ந்ததனை
 வியந்து விண்ணில் பறப்போம்.(வந்தே)

  நூற்று இருபது கோடிமக்கள்
  உயிராய் விளங்கும் இந்நாடு.
  வேற்று நாட்டவர் எல்லோரும்
  விரும்பி மதிக்கும் பொன்னாடு. (வந்தே)

  நம்முடை நாடு உயர்ந்திடவே
  நல்ல வழிகளை யோசிப்போம்.
  நம்மைப் பெற்று வளர்த்திட்ட
  தாயினும் மேலாய் நேசிப்போம்.(வந்தே)

  வாழினும் ஒன்றாய் வாழ்வோம்
  வீழினும் ஒன்றாய் வீழ்வோம்
  சூழினும் பகைவரை வெல்வோம்
  சுதந்திரம் மூச்சென சொல்வோம் (வந்தே)


              - கவிஞர் இனியன்

2 comments:

  1. நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட இக்கவிதைக்குப் பின்னூட்டம் ஏதுமில்லை என்பதில் எனக்கு வருத்தமே.

    ReplyDelete
  2. நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட இக்கவிதைக்குப் பின்னூட்டம் ஏதுமில்லை என்பதில் எனக்கு வருத்தமே.

    ReplyDelete