சிட்டுக் குருவி
வா வா!
சிட்டுக் குருவி
வா வா!
பட்டுப் போன்ற
சிறகினைத்
கொத்துக் கடலை
உள்ளது
முத்துச் சோளம்
உள்ளது
கத்திப் போன்ற
அலகினால்
கொத்தித் தின்ன
வா வா!
கேடு நினைக்கும்
மனிதரால்
காடு மலைகள்
அழிந்தன
நீடு வாழ
வழியின்றி
வாடு கின்றாய்!
வா வா!
வீடு அருகில்
உள்ளது
கூடு கட்ட வா வா!
கூடி வாழும்
முறையினைக்
கொஞ்சம் சொல்லித்
தா தா!
-முனைவர் அ. கோவிந்தராஜூ
No comments:
Post a Comment