1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர
தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துக் குழந்தைகளுடன் சேர்ந்து சுதந்திர
தினவிழாவைக் கொண்டாடும் பேறு வாய்க்கப் பெற்றவன் நான்.
கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் விடுதி
மாணவர்கள் சிலரும் விருப்பமுள்ள பிற மாணவர்கள் ஆசிரியர்கள் சிலரும் சேர்ந்து கொடியேற்றிக்
கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.
1993 இல் நான் அப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றப்
பின்னர் சுதந்திர தினத்தன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவு
கட்டாயம் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டு வந்தேன். இப் புதிய அணுகுமுறைக்கு முதலில்
எதிர்ப்பும் பின்னர் ஏற்பும் இருந்தது. அதற்குப் பின்னர் நான் பணியாற்றும்
பள்ளிகள் மாறினாலும் மேற்காண் நடைமுறையில் மாற்றமில்லை.
இன்று காலை 6.30 மணி அளவில் நான் முதல்வராகப்
பணியாற்றும் கரூர் லார்ட்ஸ் பார்க் பள்ளியின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்
அனைவருக்கும் ஒரு புதுமையான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குரல் அஞ்சல்(Voice mail) மூலமாக,
“ லார்ட்ஸ் பார்க் பள்ளி முதல்வர் பேசுகிறேன்., நாம்
இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம். எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் இந்திய மண்ணில்
பிறப்போம்., உங்களுக்கு எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்”
என்று கூறினேன்.
அடுத்து, வழக்கம்போல் இல்லத்தின்
முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வணங்கினேன். பின்னர் தொலைக் காட்சியில் புதுதில்லி
செங்கோட்டையில் நடந்த கொடியேற்று விழாவைப் பார்த்தேன். காலை 8.30 மணிக்குப் பள்ளி
சென்று குழந்தைகளோடு சேர்ந்து கொடியேற்றினேன். தில்லையாடி வள்ளியம்மையின் தியாக
வரலாற்றைக் கூறி, தனி மனிதனின் தன் விருப்பார்ந்த சீரிய
பங்களிப்பால் மட்டுமே கலாம் காண விரும்பிய வளர்ந்த பாரதத்தை உருவாக்க முடியும்
என்ற சுதந்திரதினச் செய்தியை மாணவர்களின் செவிகளில் உரைத்தேன்.
பத்து, பன்னிரண்டாம் வகுப்புக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காரணம் தனி வகுப்பு, தேர்வு என எதுவும் இன்று இல்லை.
விழாவில் மாணவ மாணவியரின் பங்கேற்பு
உணர்வு மயமாக இருந்தது. மழலைகளின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது.
விடுதலை உணர்வை விதைக்கத் தக்கக்
கழனிகள் பள்ளிகளே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஊக்கம் உடைய பாரதியாக.. |
ஏக்கம் உடைய காந்தியாக.... |
நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் |
விடுதலைப் போராட்ட வீரர்களாக... |
ஆடுவோமே பள்ளு பாடுவோமே |
மேஜர் சரவணன் நாடகம் |
விடுதலை உணர்வை விதைக்கத் தக்கக் கழனிகள் பள்ளிகளே
ReplyDeleteஉண்மை
சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா
உண்மையான சுதந்திர உணர்வை ஆசிரியர்கள்தான் குழந்தைகள் மூலம் ஊட்ட முடியும் . அதை நீங்கள் செய்வது பாராட்டிற்குரியது .-நீதிபதி மூ..புகழேந்தி
ReplyDeleteYour recordings are very interesting.
ReplyDeleteYour recordings are very interesting.
ReplyDeleteYour recordings are very interesting.
ReplyDeleteநாட்டின் விடுதலைக்கு உழைத்த உத்தமர்களை மாணவர்கள் அறியும் வகையில் கலை நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்துவது வரவேற்கத்தக்கது. ”இளமையில் கல்” என்பதைப் போன்று இளம் இதயங்களில் உணர்வினை ஏற்படுத்த வேண்டும். விடுதலை நாளன்று விடுமுறை என அறிவிப்பதை விடுத்து விடுதலைக்கு உழைத்த நல்லுள்ளங்களை நினைவில் கொள்வதற்கான நாளாகத் திட்டமிட்டுச் செயல்படும் தங்களின் நிர்வாகத் திறமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாட்டின் விடுதலைக்கு உழைத்த உத்தமர்களை மாணவர்கள் அறியும் வகையில் கலை நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்துவது வரவேற்கத்தக்கது. ”இளமையில் கல்” என்பதைப் போன்று இளம் இதயங்களில் உணர்வினை ஏற்படுத்த வேண்டும். விடுதலை நாளன்று விடுமுறை என அறிவிப்பதை விடுத்து விடுதலைக்கு உழைத்த நல்லுள்ளங்களை நினைவில் கொள்வதற்கான நாளாகத் திட்டமிட்டுச் செயல்படும் தங்களின் நிர்வாகத் திறமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete