Monday 21 September 2015

இலக்கை அடைய இனிமுயல் வாரே!

வளரிளம் சிறுமியர் வகைவகை யான
இளமைக் கனவில் இன்புற் றிருப்பர்
கண்டது காட்சி கொண்டது கோலம்
கண்டதை எண்ணிக் கருத்தழி வார்கள்
வளரிளம் சிறுவர்  வயதில் என்றும்
இளமைக் குறும்பு இயல்பாய் இருக்கும்
கண்டதைக் கிறுக்கி கவிதை என்பர்
உண்பதை மறுத்து உறங்கிடு வாரே!

பள்ளி வயதில் கொள்ளும் காதல்
பாலினக் கவர்ச்சி பிறிதொன் றில்லை
பள்ளி வயதில் காதல் கொள்ளல்
கொள்ளி யால்தலை வாரல் ஒக்கும்.
 பள்ளிப் பருவம் துள்ளும் பருவம்
கொள்ளி நெருப்பாம் காதலில் சிக்கி
பெற்றோர்  வருந்தி பெருந்துயர்  எய்த
கற்றலில் தாழ்ந்து கதிகலங் குவாரே!

 பள்ளிசெல் வயதில் காதல் தீது
காதல் செய்யின் மோதல் நிகழும்
மோதலின் பின்னே சாதலும் உண்டு
ஆதலால் பள்ளிக் காதல் தவறே! 
அவர்களை அழைத்து அருகில் அமர்த்தி
தவத்தொடு மூச்சுப் பயிற்சி யளித்து
இலக்கை அடைய இதுவழி என்றிட
இலக்கை அடைய இனிமுயல் வாரே!

 -    முனைவர் அ.கோவிந்தராஜூ


------------------------------------------ உறுதி மொழி---------------------------------------------------------------

             1. இது எனது சொந்தப் படைப்பாகும்
            2. இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 மற்றும் தமிழ்  
                 இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின்தமிழ்  இலக்கியப்       
                போட்டிகள் 2015 வகை 5 போட்டிக்காகவே எழுதப்பட்டது.

              3. இது இதற்குமுன் வெளியான படைப்பன்று.,முடிவு
                   வெளியாகும் முன் வேறு இதழ்களுக்கு அனுப்பப்பட
                    மாட்டாது.            



3 comments:

  1. அருமை ஐயா
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Very good composition. As usual it exhibits an important awareness. Very opt to today's situation. very glad to read it sir. Fantastic content.

    ReplyDelete
  3. மரியாதைக்குரிய ஆசிரியப்பெருந்தகையீர்,
    வணக்கம்,தங்கள் முன்னாள் மாணவன் C.பரமேஸ்வரன் அன்புடன் எழுதுவது.தங்களது கவிதையில் இளைய சமூகத்தின் அறியாமையைப்போக்கும்விதமாக,''பள்ளி செல் வயதில் காதல் தீது'' ''கொள்ளியால் தலைவாரல் போலாகும்'' ஆதலால் கல்விதனை மட்டும் கற்று இலக்கை அடைய முயல்வீரே! என சரியான புரிதலைக்கொடுத்துள்ளீர்.தங்களை வணங்கி வாழ்த்துகிறேன். தங்களது வெற்றியே எனது வெற்றியாக எண்ணி பேருவகை கொள்கிறேன்.
    (வைரவிழா மேல்நிலைப் பள்ளி - கோபிசெட்டிபாளையம்,ஆண்டு 1977முதல் 1981 வரை)
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,9585600733
    paramesdriver@gmail.com
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    ReplyDelete