ஆசிரியர் தினத்தில் மாணாக்கச்
செல்வங்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும். காலையில் பள்ளிக்குள் காலடி எடுத்து
வைத்தவுடன் குழந்தைகள் வந்து சூழ்ந்து கொண்டனர்.
கைகுலுக்கி ஆசிரியர் தின வாழ்த்துகளைச் சொன்னதோடு இனிப்பையும் தந்தார்கள்., சிலர் புதிய பேனாவைத் தந்தார்கள்., சிலர் மரக்கன்றைத் தந்தார்கள்., சிலர் கவிதை புனைந்து தந்தார்கள்., மற்றும் சிலர் தம் கைவண்ணத்தில் உருவாக்கிய ஓவியங்களைத் தந்தார்கள். சுருங்கச் சொன்னால் குழந்தைகளின் அன்புப் பிடியில் சிக்கித் தவித்தேன்.
கைகுலுக்கி ஆசிரியர் தின வாழ்த்துகளைச் சொன்னதோடு இனிப்பையும் தந்தார்கள்., சிலர் புதிய பேனாவைத் தந்தார்கள்., சிலர் மரக்கன்றைத் தந்தார்கள்., சிலர் கவிதை புனைந்து தந்தார்கள்., மற்றும் சிலர் தம் கைவண்ணத்தில் உருவாக்கிய ஓவியங்களைத் தந்தார்கள். சுருங்கச் சொன்னால் குழந்தைகளின் அன்புப் பிடியில் சிக்கித் தவித்தேன்.
கண்ணன் பிறந்த நாளும் கருணை வடிவான
ஆசிரியர் தினமும் ஒரே நாளில் அமைந்து விட்டன. கண்ணன்களும் இராதைகளும் பள்ளி
வளாகத்தில் வலம்வந்தபடி இருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சிதான்!
காலை வணக்க வகுப்பில்
டாக்டர் கலாம் வடிவமைத்த உறுதிமொழிகளை நான் படித்து ஆசிரியப் பெருமக்களை ஏற்கச்
செய்தேன்.
BE A TEACHER என்னும் திட்டத்தை இவ்வாண்டு அறிமுகப் படுத்தினேன். ஒன்பதாம் வகுப்புக்
குழந்தைகள் ஒரு நாள் முதல்வர் போல ஒரு பிரிவேளை ஆசிரியராக மாறி தொடக்கப் பள்ளிக்
குழந்தைகளுக்குப் பாடம் நடத்த வேண்டும் என்பதே அத்திட்டம். முன்வந்த அனைவரும்
சிறப்பாகச் செய்தார்கள்.
DINE WITH CHILDREN என்பது
ஆசிரியர்களுக்கான திட்டம். மாணாக்கச் செல்வங்கள் தம் இல்லங்களிலிருந்து கூடுதலாகக்
கொஞ்சம் மதிய உணவைக் கொண்டுவந்து தம்
ஆசிரியர்களோடு சேர்ந்து உண்ண வேண்டும் என அறிவித்தேன். அறுசுவை உணவை அன்புடன்
கொண்டுவந்து ஆசிரியர்களுடன் ஒன்றாக உண்டு அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.
அதற்குப்
பிறகு என்ன ஆட்டம் பாட்டம்தான். மேடையின் பின் திரையில் TEACHERS DAY என்று எழுதுவதற்கு மாற்றாக ஓர் ஏணியை வரைந்து அருகில் DAY என எழுதியிருந்தது
வித்தியாசமாக இருந்தது.
ஆசிரியர்களுக்காக மாணவர்கள் நடத்திய கட்டுரைப் போட்டி, கோலப்போட்டி,
கையுந்து பந்து விளையாட்டுப் போட்டி எல்லாமும் அசத்தலாக இருந்தன.
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteசிறப்பான நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...
ReplyDeleteஆசிரியர் தினத்தை சிறப்புடன் கொண்டாடி உள்ளீர்கள் வாழ்த்துகள் அய்யா.....புதுகை வலைப்பதிவர் விழாக்குவின் சார்பாக வரவேற்கின்றோம்...நன்றி.
ReplyDeleteதங்களது பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தினவிழாக் கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்களாக மாறியது அவர்களுக்குப் பெரிய மகிழ்வை ஏற்படுத்தும் நிகழ்வு. ஆசிரியர்களுடன் ஒன்றிணையும் வகையில் உணவு உண்டு மகிழ்தல், போட்டிகள் என வழக்கம் போலச் சிறப்பித்து விட்டீர்கள். தங்களை முதல்வராகக் கொண்ட பள்ளியில் நான் பயிலவில்லையே என்ற ஏக்கத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டீர்கள். மாணவர்களிடம் நீங்கள் வகுப்பறைக்குள் நுழையவில்லை வாழ்க்கைக்குள் நுழைகிறீர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். சிறக்கட்டும் தங்கள் கல்விப்பணி.
ReplyDeleteமுனைவர்.ரா.லட்சுமணசிங், பேராசிரியர்
தங்களது பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தினவிழாக் கொண்டாட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்களாக மாறியது அவர்களுக்குப் பெரிய மகிழ்வை ஏற்படுத்தும் நிகழ்வு. ஆசிரியர்களுடன் ஒன்றிணையும் வகையில் உணவு உண்டு மகிழ்தல், போட்டிகள் என வழக்கம் போலச் சிறப்பித்து விட்டீர்கள். தங்களை முதல்வராகக் கொண்ட பள்ளியில் நான் பயிலவில்லையே என்ற ஏக்கத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டீர்கள். மாணவர்களிடம் நீங்கள் வகுப்பறைக்குள் நுழையவில்லை வாழ்க்கைக்குள் நுழைகிறீர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். சிறக்கட்டும் தங்கள் கல்விப்பணி.
ReplyDeleteமுனைவர்.ரா.லட்சுமணசிங், பேராசிரியர்