பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்; பை நிறைய சம்பளம்; பெங்களூரில்
சொந்த வீடு; வசதிக்கும் குறைவில்லை; விடுகிற மூச்சை நிறுத்தினாலும் நிறுத்துவார்
எழுதுவதை நிறுத்த மாட்டார்.
புத்தகங்கள் எழுதி புகழை ஈட்டியவர். புதிதாக புகழ்
சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாதவர். பிறகு எதற்கு இந்த இமாலயப் பணியை தன் தலையில்
இழுத்துப் போட்டுக்கொண்டு அலைகின்றார்? அதுதான் அவரது தனிச் சிறப்பு.
நண்பர்கள் நம்பி ஒப்படைத்த பத்து
இலட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு செங்கல்பட்டு வந்து 5000 கிலோ அரிசி, 200 கிலோ
பருப்பு, 200 கிலோ பொடிவகைகள், 100 கிலோ எண்ணெய், இன்ன பிற பொருள்கள் என வாங்கி
குவித்துவிட்டார். அவற்றை ஆயிரம் குடும்பங்களுக்கு வினியோகம் செய்ய வசதியாக ஆயிரம்
கோணிப் பைகளில் அடைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. குடும்பத்தை விட்டு வந்து
செங்கல்பட்டில் ஒரு வாரம் தங்கி நிசப்த உற்வுகளின் உதவியுடன் மகத்தான பணிசெய்து
வருகிறார்.
நாளையோ மறுநாளோ வெள்ளச் சேதப் பகுதிகளுக்குச் சென்று நிவாரணப்
பொருள்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளார். எனது கவலை என்னவென்றால், எல்லாம்
சுமூகமாக முடிய வேண்டுமே என்பதுதான். வட்டங்களும் சதுரங்களும் அவருடைய பணிகளுக்கு
ஊறு விளைவிக்காமல் இருக்க வேண்டும். மீறி அவர்கள் ஏடாகூடமாக ஏதேனும் செய்ய
முற்பட்டால் தன் எழுத்தால் அறம் பாடியே கொன்றுவிடுவார்; அப்படி ஒரு நக்கீர துணிச்சலுடையவர் இந்த மணிகண்டன்.
எல்லாம் சரி. யார் இந்த மண்கண்டன்
என்று கேட்கிறீர்களா?
என்னுடைய தலை மாணாக்கர்களில் முதல்
மாணாக்கர். கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் என்னிடம் படித்த மாணவர்.
நிசப்தம் என்னும் அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் பல நற்பணிகளைப் பாங்குறச்
செய்பவர். நிசப்தம் டாட் காம் என்னும் இணயதளத்தில் விழிப்புணர்வை உருவாக்கும்
கட்டுரைகளை நாள்தோறும் எழுதி வருபவர். பார்க்க: www nisaptham.com
என்ன மணிகண்டனுக்கு ஒரு ஓ போடலாமா?
மணிகண்டன் போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteபோற்றுவோம் பாரர்ட்டுவோம்
நன்றி நண்பரே
Deleteசெருக்குடன் இருக்கும் பல செல்வ சீமான்களுக்கும் 'மாட்டிகளுக்கும்' சேர்த்து பதில் சொன்னதுக்கப்புறம் மெதுவா நம்ம மணிகண்டனை பாராட்டிக்கலாம். அவருக்கு தேவையான உதவிகள செய்ய மணித நேயமுள்ள சின்ன சின்ன குழுக்கள உடனடியா தயார் செய்யனும் 1 ஆளு. 2 ஆளுன்னு நிறைய பேர் வேணும். அதுக்காக என்ன செய்யலாம். சொல்லுங்க சகோ.
ReplyDeleteமணிகண்டனுக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்
Deleteவருகைக்கு நன்றி
Podalam. Sir. Same fear. safe ah poyi seranum.
ReplyDeleteவெற்றிகரமாக செய்து முடித்து விட்டனர்
Deleteவருகைக்கு நன்றி
உங்களுடன் சேர்ந்து நாங்களும் பாராட்டுகிறோம்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Deleteநேற்று இரவு
ReplyDeleteம்.. இப்ப ஓ போடறதென்ன
ஒரு
பாவே பாடிடலாம்னு
நெனச்சிக்கிட்டே
தூங்கிட்டேன்.
காலையில் எழுந்ததும்
தூரத்தில் ஒரு பழைய பாடல்
கேட்டது.. கேட்டதும் மனம் ரொம்ப
உருகி விட்டது.
அந்த பாடல்
இருமுடிகட்டு சபரிமலைக்கு
'நெய்யபிஷேகம்' '' மணிகண்டனுக்கு''
இதுக்கப்புறம் நானென்ன புதுசா எழுத வேண்டியிருக்கு..
வாழ்க மணிதம்.
மனிதம் போற்றிய மாமனிதரே
Deleteநன்றி.
மாணவனைப் பாராட்டும் பெருமை எல்லோருக்கும் வாய்க்காது. அதேபோல் தங்களின் மற்றொரு மாணவன் என்மகன் டாக்டர்.பு.எழிலரசன் தன் மருத்துவ நண்பர்களுடன் இணைந்து இங்கு பலவகைகளில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறார். இதுவும் தங்களுக்குப் பெருமையே. - நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteமாணவனைப் பாராட்டும் பெருமை எல்லோருக்கும் வாய்க்காது. அதேபோல் தங்களின் மற்றொரு மாணவன் என்மகன் டாக்டர்.பு.எழிலரசன் தன் மருத்துவ நண்பர்களுடன் இணைந்து இங்கு பலவகைகளில் நிவாரணப் பணிகளை செய்து வருகிறார். இதுவும் தங்களுக்குப் பெருமையே. - நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteநான் உருவாக்கிய மாணவர் படையில் மற்றொரு மகத்தான முன்னணி வீரர் டாக்டர் பு.எழிலரசன்
Deleteஅவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
உங்கள் வருகைக்கு நன்றி.